For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மறக்க முடியுமா இந்தியாவின் இந்த இன்னிங்க்ஸ்களை... - டாப் 15!

  |

  உண்மையில் இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என எதுவும் கிடையாது. ஆரம்பக் காலத்தில் கிரிக்கெட்டை காட்டிலும், ஹாக்கியில் இந்திய அணி சிறந்து விளங்கியது. பல உலக தொடர்களில் வென்று சாதித்தது.

  சரியாக 1983ல் ஹாக்கியை ஓரம்கட்டி இந்தியாவின் ஒரே மதமாக கிரிக்கெட் உருவானது. கபில் தேவின் தலைமையில் இந்திய அணி, இரண்டு முறை உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பை வென்று சாதித்தது.

  பிறகு சச்சின் என்ற கடவுள் பிறந்தார். உலகிலேயே மதம் பிறந்த பிறகு கடவுள் பிறந்தது இந்த மதத்தில் தான். ஆரம்பக் கட்டத்தில் சச்சின் கொஞ்சம் தடுமாறினார்.

  ஆனால், பின்னாட்களில் சச்சின் என்ற பெயர் பந்துவீச்சாளர்களுக்கு அச்சம் என்பது போல ஒலித்தது. யார் பந்து வீசினாலும் அதை எதிர்த்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரே வீரர் என்ற பெயர் பெற்றார் சச்சின்.

  கபில் தேவில் துவங்கி கடவுள் சச்சின், கேப்டன் கூல் தோணி, இப்போது கிங் கோலி... இந்திய கிரிக்கெட் அணியை பெருமைப்படுத்தி வருகிறார்கள். இந்த நெடும் பயணத்தில். இந்தியாவை பெருமைப்பட வைத்த 15 நிகழ்வுகளின் தொகுப்பு!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #15 கோலி - 8000ரன்கள்!

  #15 கோலி - 8000ரன்கள்!

  தொடக்கமே, இப்போது இந்தியாவை கலக்கி கண்டிருக்கும் கிங் கோலியுடன் தான். அதிக சத்தங்கள், அடுத்தடுத்த அதிவேக ஆயிரம் ரன்கள் குவிப்பு என மின்னல் வேக ரன் மெஷினாக விளங்கி வருகிறார். 9000 ரன்கள் கடந்துள்ள கோலி, அதிவேக 8000ரன்கள் என்ற சாதனையையும் படைத்தவர். இந்த சாதனையை கோலி பர்மிங்காம், இங்கிலாந்தில் வங்காளதேசத்திற்கு எதிரான ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதித்தார்.

  #14 ஹோபார்ட் இன்னிங்க்ஸ் - vs இலங்கைக்கு

  #14 ஹோபார்ட் இன்னிங்க்ஸ் - vs இலங்கைக்கு

  இது ஒரு சிறந்த ஆட்டம் என்றே கூற வேண்டும். 50 ஓவர்களில் 320 ரன்கள் எடுப்பதே கடினம். ஆனால், இலக்கோ 40 ஓவர்களில் இந்த ரன்களை குவிக்க வேண்டும் வெற்றி பெற என இருந்தது. கோலி கிரீஸில் நின்று நாலாபுறமும் விளாசி தள்ளினார். 86 பந்துகளில் 133 ரன்கள் குவித்தது மட்டுமின்றி. வெற்றி இலக்கை வெறும் 37 ஓவர்களில் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

  #13 டெண்டுல்கர் 114, பெர்த்

  #13 டெண்டுல்கர் 114, பெர்த்

  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னிங்க்ஸ் இது. இந்திய அணியின் சிலர் இந்த போட்டியின் போது பிறந்திருக்க கூட மாட்டார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெர்த்தில் நடந்த ஆட்டம் அது.

  18 வயது சிறுவன் அவன், குரல் வளம் கூட உடைய வில்லை. குழந்தை போன்ற குரலில் பேசி வந்தார். ஆனால், எதிரணியின் பந்துகளை உடைத்து தள்ளினர். இந்தியா தோல்வி அடைந்த போதிலும், 114 ரன்கள் குவித்து, கிரிக்கெட் வரலாற்றில் தனது பங்கு அசைக்க முடியாதபடி அமைய போவதை கையொப்பமிட்ட தினம் அது.

  #12 டெண்டுல்கர் - 1999 மெல்பேர்ன்

  #12 டெண்டுல்கர் - 1999 மெல்பேர்ன்

  இந்திய கிரிக்கெட் அணியின் கருப்பு தினங்கள் என அவற்றை குறிப்பிடலாம். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றை ஆளை நம்பி வந்தது. ஒரு சிறிய வீரன். ஆனால், திறமையிலும், தைரியத்திலும் அவனை மிஞ்ச யாரும் இல்லை.

  உலகின் தலை சிறந்த அணிக்கு எதிராக 212 பந்துகளில் 116 ரன்கள் குவித்தது. கடைசி வரை சச்சின் போராடியும், இந்தியாவால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.

  #11 தோணி ஸ்டம்பிங்!

  #11 தோணி ஸ்டம்பிங்!

  பேட்டிங்கில் மட்டுமல்ல, ஸ்டெம்பிங்கிலும் தோணி கில்லி என அனைவருக்கும் தெரியும். 2012ல் மார்ஷை 0.09 வினாடியில் இவர் செய்த ஸ்டெம்பிங் உலக சாதனை செய்தது. சுமாராக ஒரு மனிதன் கண்ணிமைக்கும் வேகமே 0.30-0.40 வினாடி ஆகும். கண்ணிமைக்கும் நொடியை காட்டிலும் மிக வேகமாக ஸ்டெம்பிங் செய்து அசத்தினார் தோணி.

  #10 ஷேவாக் - 300

  #10 ஷேவாக் - 300

  ஷேவாகை வெறுமென அதிரடி வீரர் என கூறிட முடியாது. பெரும்பாலும் அதிரடி வீரர்கள் ரன் குவிக்கும் வேகத்தில், விக்கெட்டையும் பறிகொடுத்துவிடுவார்கள். ஆனால், ஷேவாக் அப்படியல்ல. கச்சிதமான அதிரடி வீரர் ஷேவாக். அதிக பட்சமாக ஐம்பது, நூறு ரன்கள் வரை அதிரடியாக விளையாடலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இவர் மிக வேகமான முன்னூறு ரன்களை குவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் இவருக்கு சுல்தான் ஆப் முல்தான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

  #9 சி.பி சீரியஸ் - 2008

  #9 சி.பி சீரியஸ் - 2008

  ஹர்பஜன் கிங்கை குரங்கு என ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்து சர்ச்சையை கிளப்பிய தொடர் இது. சர்ச்சைக்கு பதிலாய் தொடரை வென்று சாதித்தது இந்திய அணி. சேவாக், கங்குலி, டிராவிட் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமலேயே தோணியின் அணி வெற்றி பெற்று சாதித்தது.

  Image Source

  #8 ஷார்ஜா சச்சின்!

  #8 ஷார்ஜா சச்சின்!

  1998ல் ஷார்ஜாவில் நடந்த போட்டியில் 143 ரன்கள் விளாசி இந்தியாவை இறுதி போட்டிக்கும். 134 ரன்கள் விளாசி இறுதி போட்டியில் இந்தியாவை கோப்பையை வெல்ல செய்தும் சச்சின் தாறுமாறு காட்டினார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களும் சச்சினின் வாழ்வில் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களின் வாழ்விலும் மறக்க முடியாத இன்னிங்க்ஸாக மாறியது.

  #7 இந்தியா - இங்கிலாந்து 1971

  #7 இந்தியா - இங்கிலாந்து 1971

  ஓவல் இங்கிலாந்தின் சிம்மசொப்பனம். 1971ல் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா, ஓவலில் இங்கிலாந்தை வென்று சரித்திரம் படைத்தது. பகவத் சந்திரசேகர் எட்டு விக்கெட்டுகள் எடுத்து போட்டியை வெல்ல பெருமளவு உதவினார்.

  Image Source

  #6 உலக சாம்பியன் - 1985

  #6 உலக சாம்பியன் - 1985

  உலக கோப்பை வென்று இரண்டு வருடங்களில் இந்தியா உலக சாம்பியன் பட்டமும் வென்றது. உலக சாம்பியன் கிரிக்கெட் போட்டி விளையாட இந்தியா ஆஸ்திரேலியா சென்றது. உலக கோப்பை வென்ற போதிலும் கூட இந்திய அணியை ஒரு நாய் போல தான் கண்டனர். ஏதோ லக்கில் வென்றது போல ஊடகங்கள் கூறின. ஆனால், உலக சாம்பியன் போட்டியை வென்று தங்களை மீண்டும் நிரூபித்தது இந்தியா.

  Image Source

  #5 தாதா கங்குலி

  #5 தாதா கங்குலி

  இந்தியர்களின் இதயத்தை தாதா கங்குலி வென்ற தருணம் அது. இங்கிலாந்து 326 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி 146/5 விக்கெட்டுகள் இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் கைகோர்த்து இந்திய அணியை வெற்றி கரை சேர்த்தனர். இந்திய அணி நெட்வெஸ்ட் கோப்பையை வென்றதை காட்டிலும், கங்குலி சட்டையை கழற்றி சுழற்றியது பெரும் தலைப்பு செய்தி ஆனது.

  #4 இந்தியா vs பாக் - 2003!

  #4 இந்தியா vs பாக் - 2003!

  இந்தியா, பாக் அணிகள் மோதினாலே திருவிழா. அதிலும் உலக கோப்பையில் என்றால் சொல்லவா வேண்டும். சச்சின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், 98 ரன்களில் சத்தத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 274 ரன்களை சேஸ் செய்து பாக். அணியை வென்று சாதித்தது இந்தியா.

  Image Source

  #3 சாம்பியன்ஸ் டிராபி - 2013

  #3 சாம்பியன்ஸ் டிராபி - 2013

  இஷாந்த் ஷர்மா கதாநாயகனாக திகழ்ந்த தொடர் இது. இங்கிலாந்து ஆட்டக்காரர்களை திணறடிக்க செய்தார் இஷாந்த். இந்திய அணி மீண்டும் ஒரு முறை உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்தடுத்து வென்று சாதித்தது.

  Image Source

  #2 டி-20!

  #2 டி-20!

  மறக்க முடியுமா இந்த திக்-திக் ஆட்டத்தை. முதல் டி-20 உலக கோப்பை. மதில் மேல் பூனை போல போட்டியின் வெற்றி இந்தியா, பாக் என கைமாறிக் கொண்டே இருந்தது. கடைசியில் தனது விக்கெட்டை பறிகொடுத்து இந்தியாவை வெற்றிப் பெற செய்தார் மிஷ்பா. ஸ்ரீகாந்தின் அந்த கேட்ச் மறக்க முடியாதது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என உலகின் சிறந்த அணிகளை துவம்சம் செய்தது இந்தியா.

  Image Source

  #1 1983!

  #1 1983!

  இந்தியாவின் முதல் வெற்றிப்படி இது. உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் பெயர் முதன் முதலாக கொடிக்கட்டி பறந்தது. அதற்கு முக்கிய காரணம் கபில் தேவ். 183 என்ற சிறிய இலக்கை வெற்றிக்கு நிர்ணயம் செய்து. அதை எட்ட முடியாதபடி பந்துவீசி உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது பெரும் வெற்றியாக கருத செய்தது.

  இதுப்போக... உங்களால் மறக்க முடியாத இந்தியாவின் கிரேட்டஸ்ட் இன்னிங்க்ஸ்களை கமெண்டில் பதிவ செய்யுங்க!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  15 Times Indian Cricketers Made The Nation Feel Proud

  15 Times Indian Cricketers Made The Nation Feel Proud
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more