For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாட்டுல எல்லாம் நம்ம ஊர் மாதிரியே தீபாவளி கொண்டாடுவாங்க!! தெரிஞ்சுகோங்க!!

உலகமெங்கும் பல நாடுகளில் தீபங்கள் ஏற்றி கொண்டாடுகிறார்கள். அவர்களைப் பற்றி சிறு குறிப்புகள் உங்களுக்காக.

By Ambika Saravanan
|

தீபங்களின் விழா தீப ஒளி திருநாள். தீபங்களின் ஆவளி அதாவது வரிசை தீபாவளி பண்டிகை. தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரம், பட்டாசு தான். இந்த சந்தோஷம் இந்தியாவில் மட்டும் இல்லை. தீபங்களின் திருவிழா உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளியை பற்றி மட்டுமே அறிந்த நாம் இன்னும் பல்வேறு தீப திருநாட்களை பற்றி அறிந்து கொள்வோமா? வாருங்கள்!

12 விழாக்கள்:

உலகில் பல்வேறு நாடுகளில் 12 வகையான தீபங்களின் விழா நடைபெறுகிறது. தீபாவளியை போன்ற மற்ற விழாக்களையும் அவை நடைபெறும் நாடுகளை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நேரம் கிடைக்கும்போது இந்த இடங்களுக்கு சென்று நாமும் இந்த விழாக்களில் பங்கு கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 லன்டர்ன் பெஸ்டிவல் , சீனா :

லன்டர்ன் பெஸ்டிவல் , சீனா :

இதனை "ஷாங்கியுவன் பெஸ்டிவல்" என்றும் கூறுவர் . சீனர்களின் லூனார் காலெண்டர் படி, ஜனவரி 15ம் தேதி இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

வசந்த காலா திருவிழாவின் கடைசி நாளில் இந்த கொண்டாடப்படுகிறது. எல்லா இடங்களிலும் அழகான சிவப்பு வண்ண விளக்குகளை தொங்க விட்டு இந்த விழாவை கொண்டாடுவர்.

பலவிதமான நடன நிகழ்ச்சிகள் அரங்கேறும். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர். படை அணிவகுப்புகள், களரி விளையாட்டு, கோமாளி காட்சிகள், இசை நிகழ்ச்சி போன்றவை முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும். குறிப்பாக சீனர்களின் பாரம்பரிய நடனமான சிங்க நடனம் நடைபெறும்.

லாய் க்ரத்தோங் - தாய்லாந்து

லாய் க்ரத்தோங் - தாய்லாந்து

லாய் க்ரத்தோங் என்பது தாய்லாந்தில் நடைபெறும் ஒரு அழகிய விழாவாகும். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் ஒன்று கூடி, தாமரை வடிவில் ஒரு தெப்பம் அமைத்து, அதில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, பூக்கள், மற்றும் காசுகளை போட்டு ஆற்றில் மிதக்க விடுவர்.

இந்த க்ரத்தோங் என்னும் தெப்பம், துர்அதிர்ஷ்டத்தையும் கெட்ட சக்திகளையும் எடுத்துச் செல்வதாக நம்பப் படுகிறது. இந்த விழா நவம்பர் மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.

பௌர்ணமி இரவில், தண்ணீரில் மிதக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள் காண்பதற்கு அரிய காட்சியாக தோன்றும். அனைவரும் இதனை ஒரு முறை காண்பது அவசியம்.

லாஸ் பிளாஸ் , ஸ்பெயின் :

லாஸ் பிளாஸ் , ஸ்பெயின் :

இது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஒரு அற்புதமான மற்றும் விசித்திரமான நெருப்பு விழாவாகும். செயின்ட் ஜோசஃபிற்கு மரியாதையை செலுத்தும் விதமாக அந்த நாள் ஒரு விருந்து தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளை கெட்ட சக்திகளை அழிக்கும் நாளாக கொண்டாடுகின்றனர். மரம் அல்லது கார்ட்போர்டால் செய்யப்பட்ட பொம்மைகளை நெருப்பில் இட்டு, தீய சக்திகளை அழிக்க கொண்டாடப்படும் ஒரு விழாவாகும் .

பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , பெர்லின் :

பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , பெர்லின் :

வர்ணிக்க முடியாத அழகுடன் பெர்லின் மாநகரமே ஜொலிக்கும் விழா தான் பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் . இது அக்டோபர் மாதத்தில் நடைபெறும். பல விதமான கலை நிகழ்ச்சிகளும், ஆடம்பரமான உணவு விருந்தும் இந்த விழாவை முழுமை படுத்துகின்றன.

அமோரி நெபுட்டா மட்சுரி , ஜப்பான் :

அமோரி நெபுட்டா மட்சுரி , ஜப்பான் :

எண்ணற்ற வண்ணத்தில் விளக்குகளை பொருத்தி கொண்டாடும் இந்த திருவிழா ஜப்பானில் நடைபெறுகிறது. அமோரி நகரை சுற்றி அணிவகுப்புகள் மற்றும் ஜப்பானிய பாரம்பரிய இசை முழக்கத்தோடு பல வண்ண விளக்குகள் மிதக்க விடப்படும். இந்த விமரிசையான திருவிழா , தேச பக்தியும் நிறைந்து காணப்படுகிறது

வெனிஸ் கார்னிவல் , இத்தாலி :

வெனிஸ் கார்னிவல் , இத்தாலி :

உலகம் முழுவதும் நடைபெறும் வண்ண ஒளி திருவிழாக்களில் இதுவும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. நாடகங்கள் இந்த விழாவில் தனி சிறப்பு பெற்றவை. விருந்து மற்றும் இசை நிகழ்ச்சி, வண்ண வண்ண படகுகளில் பயணம், கண் கூசும் விளக்கு ஒளி, இசை மற்றும் நடனம் இந்த விழாவை மேலும் அழகூட்டுவனவாக இருக்கின்றன. இத்தாலிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விழாவை கண்டு ரசிக்க வேண்டும்.

பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , கிழக்கு பெயோரியா

பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , கிழக்கு பெயோரியா

அமெரிக்காவில், இல்லினாய்சில இருக்கும் டேஸ்வெல் நாட்டில் இருக்கும் ஒரு நகரம், பேயோரியா . இந்த நகரத்தில், விடுமுறை காலத்தை வேடிக்கையான முறையில் கழிக்க தூண்டும் ஒரு விழா.

2 மாத காலம் நடைபெறும் இந்த விழாவில், நன்றியுரைத்தல் நாளில் பல வேடிக்கைகள் அரங்கேறும். வண்ணமயமான அணிவகுப்புகள், அழகான லேசர் கண்காட்சிகள் , வண்ணமயமான ஒளிரும் மிதவைகள், பல விதமான கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். இதனை காண்பதற்காக உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கூடுவர்.

டே ஆப் தி டெட் , மெக்ஸிகோ :

டே ஆப் தி டெட் , மெக்ஸிகோ :

இது ஒரு விசித்திரமான விழாவாகும். இந்த விழா இறந்தவர்களுக்காக கொண்டாடப்படும் ஒன்று. இறந்தவர்கள் அவர்களின் குடுபத்தினரை வந்து பார்த்து அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கியிருப்பதாக ஐதீகம்.

இந்த நாளில், இறந்தவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து குடும்பத்தினர், கல்லறைக்கு சென்று பூக்கள் மற்றும் விளக்குகளை அலங்கரித்து கூடி நின்று இறந்தவர்களை தமது வீட்டிற்கு அழைத்து வருவதாக ஒரு பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது.

 பால சதுர்தசி , நேபால் :

பால சதுர்தசி , நேபால் :

நேபாலில் காட்மாண்டு அருகில் இருக்கும் பசுபதிநாத் கோவிலில் இந்த திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதி மற்றும் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் நடைபெறும். இரவு முழுதும் வண்ண விளக்குகளை ஒளிர வைக்கும் விழாவாக இது போற்றப்படுகிறது.

ஹொக்மானே , ஸ்காட்லாந்து :

ஹொக்மானே , ஸ்காட்லாந்து :

ஒவ்வொரு ஆண்டிலும் கடைசி நாளை ஸ்காட்லானில் மக்கள் ஹொக்மானே என்று கொண்டாடுகின்றனர். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற விழாக்களில் ஒன்று. இது பாரம்பரிய முறையில் பட்டாசுகள் வெடித்தும், டார்ச் லைட் கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டு , கொண்டாடப்படுகிறது.

பல இசை நிகழ்ச்சிகளும், பார்ட்டிகளுக்கு அங்கங்கே நடைபெறும். பழைய ஆண்டின் தோஷங்களை இந்த நெருப்பு அழித்து, புதிய ஆண்டில் புதிய வரங்களை தருவதாக உணரப்படுகிறது. இது நம் ஊரில் கொண்டாடப்படும் புது வருட கொண்டாட்டத்தை நினைவுபடுத்தும்.

கீனே பம்ப்கின் பெஸ்டிவல், கிரீஸ் :

கீனே பம்ப்கின் பெஸ்டிவல், கிரீஸ் :

புகழ்பெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும் இந்த விழா ஒரு உலக புகழ்பெற்ற விழாவாகும். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு, பூசணிக்காய் விளக்கு. பல இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், சுவை மிகுந்த உணவு வகைகள், குறிப்பாக பீர் தோட்டம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.

 பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , பிரான்ஸ் :

பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , பிரான்ஸ் :

பிரான்சில் நடைபெறும் இந்த திருவிழா, நம் நாட்டு தீபாவளியை போல் கொண்டாடப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஒளிர வைத்து அந்த நகர் முழுவதையும் விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பர்.

என்ன வாசகர்களே! தீபாவளியை போன்று தீபத்தில் உலகமே ஒளிரும் விழாக்களை பற்றி அறிந்து கொண்டீர்களா! இவை எல்லாமே அக்டோபர் மாதத்திற்கு பிறகு நடைபெறும் விழாக்கள் தான். தீபாவளியை நாம் கொண்டாடுவதுபோல், மற்ற விழாக்களையும் கண்டு வர வழிகள் கிடைத்தால் மறுக்காமல் சென்று கண்டு களித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Countries that are celebrating Diwali across the world

12 Countries that are celebrating Diwali across the world
Story first published: Thursday, October 19, 2017, 9:56 [IST]
Desktop Bottom Promotion