Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை விட்டு கர்ணனை கொன்றார் என தெரியுமா?
புராணங்களின் படி, அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க நடத்தப்பட்ட மிகப்பெரிய போராக மகாபாரதம் கருதப்படுகிறது. இந்த போரின் காலகட்டத்தில், பல விஷயங்கள் நடைபெற்றதால் இந்த கதை பன்முகத்தன்மையுடனும் சிக்கலுடனும் உள்ளது.
மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?
போரின் போது, உச்சக்கட்ட தர்மத்தை காத்திட, மரபு ரீதியான விதிகளை உடைக்குமாறு அர்ஜுனனை கிருஷ்ணர் பல முறை வற்புறுத்தினார். இதனுடன் தொடர்புடைய ஒன்று தான் கர்ணனை கொலை செய்தல் என புராணங்கள் கூறுகிறது. சூரியனின் புதல்வனாக, அங்காவின் அரசனாக, தன் உயிரை காக்கும் கவச குண்டலத்துடன் பிறந்த மிகப்பெரிய போர்வீரனாக விளங்கியவர் கர்ணன். தியாகம், தைரியம், தொண்டு மற்றும் சுயநலமின்மை ஆகியவைகளுடன் தொடர்புடையவர் கர்ணன்.
ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!
துரதிஷ்டவசமாக தன் குரு, ஒரு பிராமணன் மற்றும் பூமா தேவி ஆகியோர்களிடம் இருந்து முன்னதாக தான் பெற்ற மூன்று சாபங்களின் தாக்கத்தை கர்ணன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணர், கர்ணன் ஆயுதமின்றி, பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த மறந்த நிலையில், மாட்டிக்கொண்டிருந்த தன் தேரின் சக்கரத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவனை கொள்ளுமாறு அர்ஜுனனிடம் கூறினார்.
பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!
இந்த கதையில் நம் அனைவருக்குமே இந்த சந்தேகம் எழுவது இயற்கையே. ஏன் கர்ணனை சாகடிக்க செய்தார் கிருஷ்ணர்? மகாபாரத போரின் உச்சகட்ட குறிக்கோளை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டால், இதற்கான பதிலும் உங்களுக்கு கிடைத்துவிடும். சரி கர்ணனை ஏன் கிருஷ்ணர் சாகடிக்க செய்தார் என்பதைப் பற்றி பார்க்கலாமா?

மூலத்தை விட குறிக்கோள் முக்கியமானது
இலக்கை அடைவதற்கான வழியை விட அதனை அடைவதே மிக முக்கியமானது என ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் தெளிவாக விளக்கியுள்ளார். அதர்மத்தை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டுவதே கிருஷ்ணரின் உச்சக்கட்ட குறிக்கோளாக இருந்தது. கிருஷ்ணர் கர்ணனின் உயிரை எடுக்க வைத்ததற்கான உச்சகட்ட காரணமும் இதுவே.

மரபு விதிமுறைகளை உடைத்தல்
இவை அனைத்தும் தர்மத்திற்கான சண்டை என வந்த பிறகு, மரபு ரீதியான விதிகளை மீறுவதை ஒரு பொதுவான கொள்கையாகவே கிருஷ்ணர் எப்போதும் பின்பற்றினார். கர்ணன் நிராயுதபாணியாக நின்ற போதும் கூட, அவனை கொல்வது என்பது போரின் போது கிருஷ்ணர் எடுத்த முக்கியமான மற்றும் நெருக்கடியான முடிவுகளில் ஒன்றாகும். அதனால் இந்த முடிவினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்.

சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுதல்
முழுமையாக இரண்டு வெவ்வேறு வகை மக்களுக்கு இடையேயான மற்ற போர்களை போல் அல்லாமல், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையே மூண்ட போர் தான் மகாபாரதம். இது கொல் அல்லது செத்து மடி என்ற வகையிலான போர் என்பதால், எதிராளிகளின் மரணம் இங்கே மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. அதனால் கர்ணனை வீழ்த்த தனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் கிருஷ்ணர். போரின் போது நிராயுதபாணியாக இருந்த போதும் கூட கர்ணனைக் கொன்றதுக்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய தடையை அகற்றுதல்
அர்ஜுனனிடம் சண்டையிட்டு அவனை கொல்லும் அளவிற்கு மிகவும் வலிமை வாய்ந்தவராக திகழ்ந்தவர் கர்ணன். அதனால் பாண்டவர்களை வீழ்த்துவதற்கான வழியை அவர் கொண்டிருந்தார். மேலும் கர்ணனை வீழ்த்தாமல், போரில் வெற்றியை நோக்கி முன்னேறுவது என்பது பாண்டவர்களுக்கு சாத்தியமற்றதாக இருந்தது. கர்ணனின் மரணம் பாண்டவர்களின் வெற்றிக்கு இருக்கும் தடையை தகர்த்து எறியும் என்பதால் இது நடந்தேறியது.

தர்மத்தின் வெற்றியை உறுதி செய்ய
கர்ணனை ஏன் கிருஷ்ணர் மரணிக்க செய்தார் என சிந்திக்கையில், போரின் உச்சக்கட்ட குறிக்கோளைத் தவிர வேறு எதுவும் உங்கள் மனதில் தோன்றாது. தர்மத்தை மீட்க, அதர்மத்துடன் சேர்ந்து நடை போடும் அனைத்தையும் அழிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் கவலை இல்லை. அதர்மத்துக்கு துணை போகிறவர்களை விட்டு விட்டால், போரின் உச்சக்கட்ட குறிக்கோளையும் அது அழித்துவிடும்.
அதனால், மகாபாரதத்தில் இன்னமும் கூட புகழ்பாடப்படுகிற ஒரு கதாப்பாத்திரமாக கர்ணன் பார்க்கப்படுகிறார். இந்த உலகம் இருக்கும் வரை அவரின் பெயரும் நிலைத்து நிற்கும்.



Click it and Unblock the Notifications
