கடவுள் ஏன் சாத்தானைப் படைத்தார்?

By: Batri Krishnan
Subscribe to Boldsky

கடவுள் ஏன் சாத்தானை படைத்தார் என்பதற்கான அனைத்து காரணங்களையும் பரிசுத்த பைபிள் வெளியே சொல்வதில்லை. ஆனால் இதுவரை கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் மனிதனின் நன்மைக்கே என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

சாத்தானின் அடையாளங்கள் குறித்த மர்மங்கள்!!

கடவுளால் இந்த உலகம் உருவாக்கப்பட்ட பொழுது, இந்த உலகமும், உலகில் வாழ்ந்து வந்த அனைத்து உயிரினங்களும் நல்லவையாகவே இருந்தன. ஆனால் பிசாசு தனது படைப்பாளருக்கு விரோதமாக கலகம் புரிந்த போது அதை மனிதர்களும் பின்பற்றி, பெரும் பாவத்தை புரிந்தார்கள். அதன் பின் அந்த பாவங்கள் இந்த பூமியில் நித்தியமாக வாசம் செய்யத் தொடங்கிவிட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைபிளின் படி சாத்தான் யார்?

பைபிளின் படி சாத்தான் யார்?

பரிசுத்த பைபிளின் படி, சாத்தான் என்பது ஒரு நபர், ஒரு மனிதன், மற்றும் ஒரு ஆன்மா ஆகும். அவர் ஒரு உண்மையான தனிநபர் என்பதால், சாத்தான் என்பது ஒரு கதை அல்ல. இந்த பூமியில் பரலோக தந்தையுடன் சேர்ந்து ஒரு பிசாசு, மற்றும் பல்வேறு பேய்கள் இருந்ததாக பரிசுத்த பைபிள் சொல்கிறது.

தீய சக்தி

தீய சக்தி

புனித நூலில் பிசாசானது, பாம்பு, கொடிய டிராகன், சாத்தான், லூசிபையர் மற்றும் பெயெல்செபூல் என்று குறிப்பிடப்படுகின்றது. புனித நூலில் இவை அனைத்தும் ஒரு தீய செல்வாக்கு அல்லது ஒரு தீய சக்தி என்றே விவரிக்கப்படுகின்றது.

லூசிபையர்

லூசிபையர்

இன்றைய உலகில் கிறிஸ்துவர்கள், கடவுள் சாத்தானைப் படைத்தார் என்று நம்புகின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல! கடவுள் லூசிபையர் என்கிற சக்தி வாய்ந்த அபிஷேகத் தேவதையை உருவாக்கினார். அவருக்கு கடவுளின் படைப்புகளில் திருப்தி இல்லை. அவர் கடவுளை விட அதிக சக்தி பெற விரும்பினார். மேலும் அவர் மற்ற எல்லா தூதர்களை விடவும் மேலே செல்ல விரும்பினார். எனவே அவர் கடவுளை எதிர்க்க தொடங்கினார். அவர் கடவுளால் அவருக்காக உருவாக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து இருக்கவில்லை.

தோல்வியடைந்த லூசிபையர்

தோல்வியடைந்த லூசிபையர்

பெரும்பாலான மக்கள், லூசிபையர் மூன்றில் ஒரு பங்கு தேவதைகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு கடவுளை எதிர்க்கத் தொடங்கினார் என நம்புகின்றார்கள். ஆனால் பரலோகத்தில் லூசிபையர் கடவுளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் பூமிக்குத் திரும்பினார். இவை அனைத்தும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் 12:4 ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு காரணம்

மற்றொரு காரணம்

கடவுள் மனிதனுக்கு செய்ததைப் போன்று, அவரது படைப்பு வேறு எந்த படைப்புகளுக்கு எதுவும் செய்ததில்லை என சாத்தான் நம்பியதே, லூசிபையர் கடவுளுக்கு எதிராக திரும்பியதற்கான மற்றொரு காரணம் என நம்பப்படுகின்றது. தேவனால் மனிதன் பூமியிலே உருவாக்கப்பட்ட போது, மனிதன் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டதுடன், மனிதனுக்கு இந்த பூமியின் மீது நிபந்தனையற்ற அதிகாரம் வழங்கப்பட்டது. இது லூசிபையருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

வேறொரு வசனம்

வேறொரு வசனம்

புனித புத்தகத்தின் வசனங்களில், கடவுள் லூசிபையரை மிகவும் சரியாக மற்றும் பாவம் இல்லாமல் படைத்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என விவிலிய அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். அது மேலும் கூசிபையரை "பிரகாசம்" அல்லது "காலை நட்சத்திரம்," எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அது ஆதாம் மற்றும் ஏவாளைப் போன்று, மிகவும் சரியாக மற்றும் பாவம் இல்லாமல் தான் லூசிபையர் உருவாக்கப்பட்டார் என்று கூறகின்றது. ஆதியாகமம் 1:31, லூசிபையர் கடவுளை வழிபட மற்றும் அவரை துதிக்கவே உருவாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Did God Create Satan?

Have you ever wondered why God created Satan or the devil in the first place. Well, we give you some of the possible answers behind this creation.
Story first published: Thursday, April 28, 2016, 12:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter