சிலந்திகளை பற்றிய நம்ப முடியாத 10 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிலந்தி! மனிதர்களுக்கு இருக்கும் ஒருசில அலர்ஜி, அச்சங்களில் இதுவும் ஒன்று. சிக்ஸ் பேக் வைத்த ஆண்களும், கணவனை புரட்டி அடிக்கும் பெண்களும் கூட சிலந்தியை கண்டால் கொஞ்சம் அஞ்சி நடுங்குவார்கள். இதற்கு காரணம் அவற்றின் அருவருப்பான தோற்றம் மற்றும் சிலந்தி பின்னும் வலை.

ஸ்பைடர்மேன் திரைப்படம் வந்த பிறகு சிலருக்கு சிலந்தியை பிடிக்கவும் ஆரம்பித்தது. உங்களுக்கு தெரியுமா? இனப்பெருக்கம் செய்ய சிலந்திக்கு ஆணுறுப்பு கிடையாது, இரும்பை விட சிலந்தி பின்னும் வலை உறுதியானது. மேலும், மனிதர்களால் முடியாத பலவற்றை சிலந்திகள் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உண்மை #1

உண்மை #1

சிலந்தி தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது.

 உண்மை #2

உண்மை #2

சிலந்தி தான் பின்னிய வலையையே மறுசுழற்சி செய்ய உண்ணும்.

 உண்மை #3

உண்மை #3

ஒரே எடையிலான சிலந்தி வலை மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், சிலந்தி பின்னும் வலை தான் இரும்பை விட வலுமையானது.

 உண்மை #4

உண்மை #4

சிலந்தி தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து செண்டு நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.

 உண்மை #5

உண்மை #5

சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 உண்மை #6

உண்மை #6

கடைசியாக சிலந்தி கடித்து மரணம் அடைந்த சம்பவம் கடந்த 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.

 உண்மை #7

உண்மை #7

சிலந்திகளுக்கு ஆணுறுப்பு (Penis) இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.

 உண்மை #8

உண்மை #8

கருப்பு பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டவுடன், ஆண் சிலந்தியை உண்டுவிடுமாம். இதிலிருந்து தப்பிக்க கருப்பு ஆண் சிலந்திகள், கருப்பு பெண் சிலந்திகளின் பசியை மோப்பம் பிடித்து தப்பித்துக் கொள்ளுமாம்.

 உண்மை #9

உண்மை #9

சிலந்திகள், நண்டு மற்றும் நத்தைகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள "hemocyanin" எனும் காப்பர்.

 உண்மை #10

உண்மை #10

இதுவரை கண்டறியப்பட்ட 46,000 சிலந்தி வகைகளில். ஒன்றே ஒன்று மட்டும் தான் தாவரங்களை உண்டு வாழும் அவகையை சேர்ந்தது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unbelievable Facts about Spiders

Unbelievable Facts about Spiders, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter