இந்தியாவின் சூனியக்காரர்கள் கிராமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?

Posted By:
Subscribe to Boldsky

இந்த 21-ம் நூற்றாண்டில் உலகமே உள்ளங்கையில் சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில். கடவுள் இருக்கிறார் என்று கூறினாலே சிலர் நம்மளை பலவிதமாக நோட்டமிடுகின்றனர்.

இதில், பேய் இருக்கிறது, சூனியம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் "எவன்டா இவன் பைத்தியக்காரன் போல உளறிட்டு சுத்துறான்.." என்று ஏளனமாக தான் பேசுவார்கள்.

ஆனால், நமது இந்தியாவில் சூனியம் செய்வதற்கும், கற்பதற்கும் தனி கிராமமே இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்.

இதையும் படிங்க: இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

மெல்ல, மெல்ல, இந்த பகுதியில் சூனியக்காரர்கள் அழிந்து வருகின்றனர் என்றும், ஆயினும் இவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து பலருக்கு கற்பித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரிகாவன் மாவட்டம்!

மரிகாவன் மாவட்டம்!

மரிகாவன், அசாமில் இருக்கும் ஓர் சிறிய மாவட்டம். இதன் அருகாமையில் அமைந்திருப்பது தான் மாயோங் எனும் ஒரு அமைதியான நகரம். மாயோங் எனும் இந்த சிறிய நகரத்திற்கு என தனிப்பான்மையான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இந்த நகரம் வனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வனவிலங்கு சரணாலயம்!

வனவிலங்கு சரணாலயம்!

மாயோங்கில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது. மாயோங் எனும் இந்த நகரம் சூனிய செயல்களுக்கு மிகவும் பிரபலமான இந்திய நகரமாக விளங்குகிறது.

மாயோங் பெயர் காரணம்!

மாயோங் பெயர் காரணம்!

சமஸ்கிருதம் மொழியில் மாயா என்றால் மாயை என்று பொருள். மாய தந்திர செயல்களுக்கு புகழ் பெற்று விளங்குவதாலும், இந்த கிராமத்தின் மீது இல்ல அச்சத்தினாலும் மாயோங் எனும் பெயர்பெற்று விளங்குகிறது இந்த சிறிய நகரம்.

மாயோங் - போபிடோரா விழா!

மாயோங் - போபிடோரா விழா!

ஒவ்வொரு வருடமும் இந்த சிறிய நகரத்தில் மாயோங் - போபிடோரா என்ற பெயரில் வனம் மற்றும் மாய தந்திரம் சார்ந்த விழா கொண்டாடப்படுகிறது.

சூனியக்காரர்கள் இந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஆச்சரியம்!

ஆச்சரியம்!

இதிலொரு ஆச்சரியம் என்னவெனில், இங்கிருக்கும் சூனியக்காரர்களுக்கே இந்த பகுதியில் எப்படி சூனியம் செய்வது தோன்றியது, யார் முதலில் சூனியம் செய்ய துவங்கினார், எப்படி புகழ்பெற்றது என்பது குறித்து தெரியாது.

கற்பிக்கப்படுகிறது!

கற்பிக்கப்படுகிறது!

மாயோங்கிற்கு இந்தியாவின் பல இடங்களில் இருந்து மாய மந்திரம், சூனியம் போன்றவற்றை கற்றுக் கொள்ள பலர் வந்து செல்கின்றனர். இப்போது வரையிலும் மாயோங்கில் 100 - 150 மந்திரவாதி, சூனியக்காரர்கள் இருக்கிறார்கள்.

குறைந்து வரும் மந்திரவாதிகள்!

குறைந்து வரும் மந்திரவாதிகள்!

பணம் மற்றும் வேறுக் காரணங்களால் மாயோங் பகுதியில் மந்திரவாதிகள், சூனியக்காரர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இப்படியே போனால் இன்னும் கொஞ்சம் வருடங்களில் இவர்கள் முற்றிலுமாக காணாமல் போகலாம் என கூறுகிறார்கள்.

மாயோங் மியூசியம்!

மாயோங் மியூசியம்!

இந்திய அரசாங்கம் கடந்த 2002-ம் ஆண்டு மாயோங்-ல் மாயோங் சென்ட்ரல் மியூசியம் ஒன்ற திறந்தது. இங்கு பல்வேறு புத்தகங்கள், புராண இதிகாசங்கள் மற்றும் கைகளால் எழுதப்பட்ட மிகப்பழமையான ஆயுர்வேத மற்றும் சூனியம் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன.

உங்கள் சூனியம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த மியூசியம் சென்று பார்த்து வரலாம்.

சூனியக்காரர்கள்!

சூனியக்காரர்கள்!

சூனியம் செய்பவர்களை மாயோங்-ல் பெஷ் / ஓஜா என அழைக்கின்றனர். மேலும், ஆவிகளை இவர்கள் தங்கள் பணியாட்களாக வைத்திருக்கின்றனர் என்றும் இந்த பகுதி மக்கள் நம்பிகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Indian Village Is Haunted By Black Magic

This Indian Village Is Haunted By Black Magic, take a look on here.
Subscribe Newsletter