இந்தியாவில் மட்டுமே காணப்படும் சில எரிச்சலூட்டும் செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சில செய்களை நீங்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பார்க்க முடியாது. அவை இந்தியாவில் மட்டுமே காணக் கிடைக்கும் அற்புத செயல்கள். இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் செயல்களே சில எக்கச்சக்கமாக எரிச்சலூட்டும் வகையில் அமைந்துவிடுகிறது.

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்!!

அண்ணாசிக் கடைகளில் சில்லறை பாக்கிக்கு பதிலாக தரும் மிட்டாயில் ஆரம்பித்து, பேருந்தில் இடம் பிடிக்க முண்டியடிப்பது, கோவிலில் செருப்பை திருடுவது என இந்தியாவில் மட்டுமே நிகழும் எரிச்சலூட்டும் செயல்பாடுகள் நிறைய இருக்கின்றன....

தங்கள் பெயரில் கிரகங்கள் கொண்டுள்ள 7 இந்தியர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீட் பிடிப்பது

சீட் பிடிப்பது

பேருந்து, ரயில் பயணங்களில் சீட் பிடிக்க மற்றவை தள்ளி, முட்டி மோதி முண்டியடித்துக் கொண்டு ஓடுவது.

வரிசை

வரிசை

சினிமா டிக்கட், பேருந்து நிலையம், அரசு நியாவிலை கடைகள் என எங்குமே ஓர் சீரான வரிசையை காண்பது மிக அரிய நிகழ்வாக தான் இந்தியாவில் காணப்படும்.

சில்லறை

சில்லறை

பெரிய மால்களில் இருந்து அண்ணாசிக் கடை வரை எங்குமே ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்கள் மீத சில்லைறை தருவதாய் வழக்கமே இல்லை. மிட்டாய்கள் கொடுத்து நாமம் போட்டு விடுவார்கள்.

செருப்பு

செருப்பு

இந்தியாவில் நடக்கும் பெரிய திருட்டுகளில் ஒன்று செருப்பு திருட்டு. குறைந்தபட்சம் இந்தியாவில் இருக்கும் அனைத்து கோவிலிலும் ஒருமுறையாவது இந்த சம்பவம் நடந்திருக்கும்.

பேரம் பேசுவது

பேரம் பேசுவது

தான் விரும்பிய பொருளை தான் பேரம் பேசிய விலையில் கிடைக்காமல் போனால் இந்தியர்கள் கடுப்பாகி விடுவார்கள். அதிலும் பெண்கள், நாலு தெருக்கள் கடக்கும் வரை அந்த வியாபாரியை வசைப்பாடிக் கொண்டே தான் வருவார்கள்.

பரிசு

பரிசு

சிறப்பாக வேலை செய்ததற்கோ அல்லது வேறு ஏதோ காரணத்திற்கு அலுவலகத்தில் பாராட்டி பரிசுக் கொடுத்திருப்பார்கள். ஆசையாக திறந்து பார்த்தல், சாப்பாடு டப்பா அல்லது சோப்பு டப்பாவாக இருக்கும். இது கண்டமேனிக்கு எரிச்சலூட்டும் ஒன்றாகும்.

ரயில் டிக்கெட்

ரயில் டிக்கெட்

இந்தியாவில் எது மிகவும் கடினமான காரியம் என்றால், கண்ணை மூடிக் கொண்டு கூறிவிடலாம். அது இந்திய ரயில்வே துறை இணையத்தில் டிக்கெட் புக் செய்வது தான் என்று. (தக்காளி... இரத்தம் கக்கியே சாகனும்!!!)

கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

இந்தியாவில் கிரிக்கெட் என்பது தனி மதம். இந்தியர் அனைவரையும் இது ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் மேட்சை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடுவே யார் வந்தாலும் இந்தியர்கள் கடுப்பாகிவிடுவர்கள்.

ஓசி வை-பை

ஓசி வை-பை

நமது வை-பையை பக்கத்து வீட்டுகாரர் ஓசியில் பயன்படுத்து வருகிறார் என்பதை அறியும் போது வயிறு வாய் எல்லாம் பத்திக்கொண்டு வரும். போடா, வாடா என்றால் கூட யாரும் கோபப்பட மாட்டார்கள். ஆனால், தனது டேட்டாவில் ஒரு எம்பி பயன்படுத்திவிட்டலும் செம கடுப்பாகிவிடுவார்கள்.

ஸ்பூன்

ஸ்பூன்

இட்லி, தோசை போன்ற உணவுகளை கூட இத்தாலியில் பிறந்து வளர்ந்தது போல ஸ்பூனில் குத்தி, குத்தி உண்பதை பார்க்கும் போது இந்தியர்களுக்கு கடுப்பாவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things That Annoy The Hell Out Of Indians

Things That Annoy The Hell Out Of Indians, read here in tamil.
Subscribe Newsletter