For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சி நம்பர் பின்னணியில் இருக்கும் இரகசியங்களும், சுவாரஸ்யங்களும்!

|

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் ஜெர்ஸி எண் பின்னணியிலும் சுவாரஸ்யங்கள் அல்லது ஏதேனும் இரகசியங்கள் இருக்கிறதா என்பது கேள்வி குறி தான். ஆனால், பெரும்பாலான இந்திய வீரர்களின் ஜெர்ஸி எண்ணின் பின்னணியில் ஏதேனும் ஒரு காரணம் இருக்க தான் செய்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள்!

பிறந்தநாள், வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், ஜோதிடர் வாக்கு, சாதனையை குறிக்கும் எண், தங்களுக்கு பிடித்தமானவர்களின் எண் என கிரிக்கெட் வீரர்களின் ஜெர்ஸி எண்ணின் பின்னணியில் பல காரணங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றில் சிலரை பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோனி

தோனி

சிலர் தோனி தனது பிறந்தநாள் ஜூலை 7 என்பதால் இந்த எண்ணை ஜெர்சி நம்பராக வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

தோனி

தோனி

சிலர், இவருக்கு கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எரிக் கேண்டேனோ போன்றவர்களை பிடிக்கும், அவர்களது ஜெர்சி எண் 7 என்பதால் அதே எண்ணை பயன்படுத்துகிறார் என்றும் கூறுகிறார்கள்.

வீராட் கோலி

வீராட் கோலி

வீராட் கோலியின் தந்தை 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இறந்தார். அப்போது வீராட் கோலியின் வயது 18. இதை நினைவுக்கூறும் வகையில் தான் வீராட் தனது ஜெர்ஸி என்னை 18-க வைத்திருக்கிறார்.

வீராட் கோலி

வீராட் கோலி

மேலும், U-19 உலகக் கோப்பை முதலிருந்தே வீராட் தனது ஜெர்ஸி எண்ணாக 18-ஐ தான் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரேந்தர் சேவாக்

விரேந்தர் சேவாக்

ஜெர்சியில் நம்பரே இல்லமால் விளையாடிய நபர் சேவாக். ஜோதிடர் கூறிய வாக்கின் காரணமாக சேவாக் இவ்வாறு ஜெர்சியில் எண் ஏதும் இல்லமால் விளையாட துவங்கினார் என இவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

கெளதம் காம்பீர்

கெளதம் காம்பீர்

இந்தியாவின் தலைசிறந்த துவக்க வீரர்களில் காம்பீரும் ஒருவர். இவரது ஜெர்சி எண் ஐந்து இவரது பிறந்தநாளின் கூட்டு எண்ணாகும். அக்டோபர் 14-ல் பிறந்த காம்பீர் இதன் கூட்டு எண்ணை ஜெர்சி எண்ணாக வைத்துக் கொண்டார். சில முறை இவர் 14 என்ற எண்ணையும் பயன்படுத்தி விளையாடியுள்ளார்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயிலை கண்டால் பேயை பார்ப்பது போன்ற பயம் பந்துவீச்சாளர்கள் மத்தியில் எழும். அதனால் இவர் பேய் நம்பர் எனப்படும் 666-ல் பாதியைவைத்திருக்கிறாரோ என எண்ண வேண்டாம். இது இவரது அதிகபட்ச ஸ்கோர் என்பதால் வைத்திருக்கிறார்.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

உலக கிரிகெட் வரலாற்றிலேயே டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர் முத்தையா முரளிதரன் தான். 800 விக்கெட்டுகள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்பதால் இந்த எண்ணை தனது ஜெர்சி நபராக வைத்துக் கொண்டார்.

யுவராஜ்சிங்

யுவராஜ்சிங்

யுவராஜ் சிங்கின் பிறந்த நாள் 12/12 (டிசம்பர் 12) ஆகும். இதனால் தான் யுவராஜ் இந்த எண்ணை தனது ஜெர்ஸி நம்பராக பயன்படுத்துகிறார் என கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

யாரோ ஒருவர் ரோஹித்திடம் உனக்கு 9 சிறந்த லக்கி நம்பர் என கூறியிருக்கிறார்கள். ஆனால், ரோஹித்திற்கு ஒற்றை இலக்கில் எண் பயன்படுத்த விருப்பமில்லை. பிறகு அவரது அம்மா கூறிய 45 என்ற எண்ணை ஜெர்ஸி நம்பராக தேர்வு செய்தார்.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வினின் லக்கி நம்பர் 9. மேலும் பள்ளி பயிலும் போது இவரது வரிசை எண்ணும் 9. எனவே, 99 தனது ஜெர்ஸி நம்பராக பயன்படுத்த துவங்கினார் அஸ்வின்.

ஹர்டிக் பாண்டியா

ஹர்டிக் பாண்டியா

எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்வார் என்று நம்பப்படும் பாண்டியா U-16 போட்டிகளில் விளையாடிய போது அதிகபட்ச ஸ்கோராக எடுத்தது 228. எனவே, அதையே ஜெர்ஸி எண்ணாக பயன்படுத்த துவங்கிவிட்டார்.

ரவீந்தர் ஜடேஜா

ரவீந்தர் ஜடேஜா

ரவீந்தர் ஜடேஜாவின் லக்கி எண் 12 தான். ஆனால், அதை யுவராஜ் பயன்படுத்தி வருவதால். ஐ.பி.எல்-ல் விளையாடும் போது மட்டும் 12 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார். மற்றும் இவரது பிறந்தநாளின் ஒட்டுமொத்த கூட்டு எண்ணான 6/12/1988 (6+12+1+9+8+8= 44, 4+4 + 8) 8-ம் நம்பரை இந்திய ஜெர்ஸி எண்ணாக பயன்படுத்தி வருகிறார்.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

தனது பிறந்தநாள் ஜூலை 3-தேதி என்பதால் 3 நம்பரை ஜெர்ஸி எண்ணாக பயன்படுத்தி வருகிறார் ஹர்பஜன் சிங்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Secret Behind The Jersey Numbers Of Dhoni, Virat, Rohit Revealed

The Secret Behind The Jersey Numbers Of Dhoni, Virat, Rohit Revealed, read here in tamil.
Desktop Bottom Promotion