கேம் ஆப் த்ரோன்ஸ் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

"விண்டர் இஸ் கம்மிங்.." ஒவ்வொரு முறையும் உங்கள் நண்பர் கூட்டத்தில் ஒருவராவது மண்டையை பிளக்கும் இந்த சித்திரை வெயிலின் போது மிக பெருமையாக தனது முகநூல் டைம் லைனில் இதை பதிவிட்டு நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பழங்குடியினர் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

ஆம், கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியல் வெளியாகும் போது இந்த வாக்கியத்தை பயன்படுத்தாத ரசிகரை யாராலும் பார்க்க முடியாது. ஆங்கில சீரியல்கள் பார்ப்பது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை உண்டாக்குகிறது.

காரணம் வித்தியாசமான கதையம்சம், நிறைய வி.எப்.எக்ஸ் காட்சிகள் மற்றும் அதன் தரம். இதில், உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள ஆங்கில சீரியல் தான் கேம் ஆப் த்ரோன்ஸ்.

உலகத்தில் உள்ள மிகப்பெரிய 8 இரகசியங்கள்!!!

வரலாற்று கதைகளம் கொண்டுள்ள இந்த சீரியலை பற்றிய சில வியக்க வைக்கும் தகவல்கள் குறித்து இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பெயரில் மாற்றங்கள்

பெயரில் மாற்றங்கள்

கடந்த 2011-ம் ஆண்டு இந்த ஆங்கில சீரியல் துவங்கிய போது, அமெரிக்காவில் ஏறத்தாழ 1000-க்கும் நிகரான குழந்தைகளுக்கு கலீசி என பெயரிட்டனர். அவ்வளவு புகழ் பெற்றது இந்த சீரியல். 2012-ல் இந்த சீரியலில் தோன்றிய கதாபாத்திரமான ஆர்யா எனும் பெயர் அமெரிக்க பெயர் பட்டியலில் 711-ம் இடத்தில் இருந்து 413-வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

 பெயரில் மாற்றங்கள்

பெயரில் மாற்றங்கள்

மேலும், இந்த சீரியலில் வரும் சான்ஸா, தியோன், டிரியன், சாண்டோர் போன்ற பெயர்களும் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பெயராக வைப்பதில் புகழ் பெற ஆரம்பித்தன.

 பெயரில் மாற்றங்கள்

பெயரில் மாற்றங்கள்

மேலும், 2013-ம் ஆண்டு கடல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவகை மீன் உயிரினத்தை கண்டுபிடித்தனர். அந்த உயிரினத்தின் தோற்றம் கலீசியின் சிகை அலங்காரம் போன்று இருந்ததால், த்ரிடோனியா கலீசி என்று பெயர் வைத்தனர்.

 உடலுறவு காட்சிகள்

உடலுறவு காட்சிகள்

கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியலில் உடலுறவு காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அனைத்து பகுதிகளிலும், பாகங்களிலும் ஒரு காட்சியாவது இடம் பெற்றுவிடும். இதில் என்ன வியப்பு என கேட்கிறீர்களா. கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியலில் நடிக்கும் பல துணை நடிகைகள் பாலியல் தொழில் துறையை சேர்ந்த நடிகைகள் ஆவர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

உலகம் முழுக்க பல இடங்களில் கேம் ஆப் த்ரோன்ஸ்-ன் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இது போக தரம் உயர்ந்த வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பமும் உட்புகுத்தப் படுகிறது. வடக்கு அயர்லாந்து, ஐஸ்லாண்ட், மொராக்கோ போன்ற பல புரபல சுற்றுலா தளங்களில் கேம் ஆப் த்ரோன்ஸ் படப்பிடிப்பு நடக்கிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

மொரோக்காவில் மட்டுமே, கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியல் பார்த்து அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு உயர்ந்துள்ளது என அந்நாட்டவர் கூறுகின்றனர்.

 டயர் வுல்வ்ஸ்

டயர் வுல்வ்ஸ்

டயர் வுல்வ்ஸ், கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியலில் செல்ல பிராணியாக வளர்க்கும் விலங்காக காண்பிக்கப்படுகிறது. இது 15,000 வருடங்களுக்கு முன்னர் உண்மையாக உலகில் வாழ்ந்த பண்டைய காலத்து விலங்காகும். தற்போதைய கிரே வுல்வ்ஸ்-களை விட இவை 25% பெரிய தோற்றம் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மரணங்கள்

மரணங்கள்

மிருகத்தனத்திற்கு பெயர்போன சீரியல் கேம் ஆப் த்ரோன்ஸ். சராசரியாக ஒரு எப்பிசோட்-க்கு 4.5 பேர் மரணமடைவது போன்ற காட்சிகள் இருக்கும். முதல் நான்கு சீசனில் மட்டுமே இந்த சீரியலில் அறிமுகமான 133 கதாபாத்திரங்கள் கதையில் இறந்துவிட்டனர்.

 திருட்டுத்தனம்

திருட்டுத்தனம்

ஆன்லைனில் திருட்டுதனமாக பதிவிறக்கம் (Download) செய்து பார்க்கப்படும் நிகழ்ச்சி என்ற பெருமையை அடைகிறது கேம் ஆப் த்ரோன்ஸ். கடந்த நான்கு வருடங்களாக இந்த சாதனையை படைத்தது வருகிறது கேம் ஆப் த்ரோன்ஸ் என இணைய தள கில்லாடிகள் கூறுகின்றனர். ஏறத்தாழ 14.4 மில்லியன் தடவை இந்த சீரியல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

 திருட்டுத்தனம்

திருட்டுத்தனம்

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் எச்.பி.ஒ நிறுவனம் இதை தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆயினும், சேனலிலும் இது நிகழ்ச்சி பெருமளவில் லாபம் ஈட்டி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேனலில் 8.11 மில்லயன் பார்வையாளர்கள் இந்த சீரியலை காண்கின்றனர்.

வரலாறு

வரலாறு

கேம் ஆப் த்ரோன்ஸ் முழுக்க முழுக்க கற்பனையான சீரியல் கிடையாது. இதன் கதையாசிரியர் பல உண்மை வரலாற்று சம்பவங்களை கொண்டு தான் திரைக்கதை அமைப்பதாக கூறியுள்ளார். முக்கியமாக சூழ்ச்சி மற்றும் போர் சார்ந்த காட்சிகள் உண்மயான வரலாற்று பின்புலம் கொண்டு தான் எழுதப்படுகிறது.

வசூல்

வசூல்

ஒரு எப்பிசோட்-க்கு ஆறு மில்லியன் டாலர் என்ற வகையில் ஒரு சீசனுக்கு 60 மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டுகிறது கேம் ஆப் த்ரோன்ஸ் நிகழ்ச்சி.

 டத்ராக்கி மொழி

டத்ராக்கி மொழி

கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியலில் பயன்படுத்தப்படும் மொழியான டத்ராக்கி, இதற்காகவே உருவாக்கப்பட்ட மொழியாகும். இதற்காக 3,100-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் புதியதாக உருவாக்கி, அதற்கு அர்த்தங்கள் தந்து இந்த டத்ராக்கி மொழியை உருவாகியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Things You Didn't Know about Game of Thrones

Ten Things You Didn't Know about Game of Thrones, read here in tamil.