For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்த அனுமனைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 உண்மைகள்!

By Aruna Saravanan
|

Recommended Video

அனுமனை பற்றிய சில தகவல்கள்- வீடியோ

இந்து மதத்தில் ஸ்ரீராம பக்தரான ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பாக போற்றக்கூடியவர். அனுமன் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயரின் வாழ்க்கையை அனைவரும் படித்து பயன் அடைய வேண்டும்.

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா?

ஸ்ரீராமரின் பக்தரான அனுமன் பக்தியிலும், வீரத்திலும் சிறந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்த அனுமான் சிவனின் அம்சம்

பக்த அனுமான் சிவனின் அம்சம்

பிரம்ம கடவுளின் தேவலோகத்து அழகியான அஞ்சனாவிற்கு துறவி ஒருவர் சாபம் அளித்தார். அதாவது அவள் எப்பொழுது ஒருவரை காதலுடன் பார்கின்றாளோ அந்த நேரத்தில் அவள் முகம் குரங்கு போல் ஆகும் என்பது தான் அந்த சாபம். அவள் சாபம் நீங்க பிரம்மன் அவரை பூலோகத்தில் பிறக்க வைத்தார். அங்கே கேசரி மன்னன் மீது காதல் கொண்டு திருமணம் புரிந்தார் அஞ்சனா. சிவன் மீது அதீத பக்தி கொண்ட அஞ்சனாவிற்கு ஆசி வழங்கவும் சாபம் நீங்கவும் சிவனே குழந்தையாக அஞ்சனாவிற்கு பிறக்க சித்தம் கொண்டார்.

பக்த அனுமான் சிவனின் அம்சம்

பக்த அனுமான் சிவனின் அம்சம்

சில நாட்களுக்கு பிறகு தசரத மன்னன் யாகம் நடத்தி அதன் மூலம் பெற்ற பாயாசத்தை தன் மனைவிகள் அனைவருக்கும் அளித்தார். அதில் கெளசல்யாவிற்கு அளித்த பாயாசத்தின் ஒரு பகுதியை அங்கு பறந்து வந்த பட்டம் அள்ளி சென்று தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனாவிடம் அளித்தது. அதை சிவனின் பிரசாதம் என்று எண்ணி அவரும் அருந்தினார். இதை வாயு பகவான் நிகழ்த்தி உள்ளார். அதில் பிறந்தவர் தான் ஆஞ்சநேயர் என்ற அனுமன். ஆகையால் அனுமான் வாயு புத்திரன் என்று போற்றப்படுகின்றார்.

அனுமன் ராமனின் நலம் கருதி செந்தூரத்தை தன் உடல் முழுவதும் பூசி கொண்டார்

அனுமன் ராமனின் நலம் கருதி செந்தூரத்தை தன் உடல் முழுவதும் பூசி கொண்டார்

ராமர் மீது அதீத பற்று கொண்டுள்ளவர் அனுமன். ஒரு முறை சீத்தா தேவி தன் நெற்றியில் செந்தூர் அணிந்திருந்தார். அதன் காரணத்தை அனுமன் கேட்க, தன் கணவனான ராமரின் மீது தான் கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் வெளிக்காட்டவும் அதோடு அவருடைய நலத்திற்காகவும் தான் செந்தூரம் பூசி கொள்வதை சீதா தேவி கூறினார். உடனே அனுமன் தன் உடல் முழுவதும் செந்தூரம் பூசி ராமன் மீது தான் கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் காட்டினார். மெய் சிலிர்த்த ராமன் எதிர்காலத்தில் அனுமனை தொழுபவர் யாவரும் சிந்தூரம் அணிந்து கொள்வார்கள் என்ற வரத்தை அனுமனுக்கு அளித்தார்.

ஹனுமன் என்றால் அமைப்பு அற்ற தாடை என்று சமஸ்கிருதம் அர்த்தம் அளிக்கின்றது

ஹனுமன் என்றால் அமைப்பு அற்ற தாடை என்று சமஸ்கிருதம் அர்த்தம் அளிக்கின்றது

ஆம், அது உண்மை தான். அனுமனின் தாடை அமைப்பு ஒழுங்கு இல்லாமல் உள்ளது. அனுமன் ஒரு முறை சூரியனை பழுத்த மாம்பழம் என்று எண்ணி அதை பிடிக்க முற்பட்டார். உடனே கோபம் கொண்ட இந்திர பகவான் தனது வஜ்ர ஆயுதத்தால் அனுமனை தாக்கி விட்டார். இதனால் அனுமனின் தாடை காயம் பட்டு சீரற்ற அமைப்பை பெற்றது.

அனுமன் பிரம்மசாரி என்றாலும் அவருக்கு மக்ரத்வஜா என்ற மகன் உண்டு

அனுமன் பிரம்மசாரி என்றாலும் அவருக்கு மக்ரத்வஜா என்ற மகன் உண்டு

இலங்கையை அழித்த பின்னர் அனுமன் தன் வாலில் உள்ள தீயை தணிக்க கடலில் அதை மூழ்கினார். அதில் இருந்து வந்த வேர்வையை அங்கிருந்த மீன் ஒன்று விழுங்க அதற்கு பிறந்த மகன் தான் இந்த மக்ரத்வஜா. ஆகையால் அவரை அனுமனின் மகன் என்று அழைக்கின்றனர்.

பக்த அனுமனுக்கு ராமன் ஒருமுறை மரண தண்டனை விதித்தார்

பக்த அனுமனுக்கு ராமன் ஒருமுறை மரண தண்டனை விதித்தார்

ராம பகவான் மீண்டும் நாடாளும் போது, அரச சபை முடியும் போது, கலகம் செய்ய பெயர் போன நாரத முனிவர் அனுமனுக்கும் ராமனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுத்த திட்டம் தீட்டினார். அனுமனை அழைத்த அவர் விஸ்வாமித்திரரைத் தவிர அனைவரையும் வாழ்த்த கூறினார். அனுமனும் அவ்வாறு செய்தார். இதை கண்டு கொள்ளாத முனிவரிடம் நாரதர் சென்று கோபத்தை தூண்டி விட்டார். கோபம் கொண்ட விஸ்வாமித்திரர் அனுமனுக்கு மரண தண்டனை வழங்கும் படி ராமனிடம் கூறினார். ஆனால் அவரை கொல்ல வீசிய அனைத்து அம்புகளும் தோல்வியுற்றன. காரணம் அனுமன் ராம நாமத்தை ஜெபித்து கொண்டிருந்தார். குருவின் வார்த்தையை மீற முடியாத ராமன் அனுமன் மீது பிரமாஸ்த்திரத்தை ஏவினார். ஆச்சரியம் என்னவென்றால் அதுவும் பயனற்று போனது. அதன் பின் நாரதர் தன் குற்றத்தை விஸ்வாமித்திர குருவிடம் கூறி அவர் மனதை மாற்றினார். அந்த அளவிற்கு ராம பக்தியில் சிறந்து விளங்கியவர் அனுமன்.

வால்மீகி ராம காவியத்தை விட சிறப்பான ராம காவியத்தை இயற்றிவர் அனுமன்

வால்மீகி ராம காவியத்தை விட சிறப்பான ராம காவியத்தை இயற்றிவர் அனுமன்

லங்கா போருக்கு பின் அனுமன் இமாலயம் சென்று ராம நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்தார். இராம காவியத்தை இயற்றிய வால்மீகி தன் தொகுப்பை அனுமனிடம் காண்பிக்க இமாலயம் வந்தார். அங்கு அனுமன் ராம காவியத்தை இமாலய சுவர் முழுவதும் தன் நகத்தால் தீட்டி வைத்திருந்தார். அதை கண்ட வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தை விட அனுமன் தீட்டியது மிகவும் சிறப்பானது என்றும், தன்னால் அந்த அளவிற்கு எழுத முடிய வில்லையே என்றும் கலங்கினார். அதற்காக அனுமன் தான் இயற்றியதை அழித்தார். அதிர்ச்சி அடைந்த வால்மீகி தன் அடுத்த ஜென்மத்தில் அனுமனின் நாமத்தை போற்ற வேண்டும் என்று கூறினார்.

அனுமனும் பீமனும் சகோதரர்கள்

அனுமனும் பீமனும் சகோதரர்கள்

பீமனும் வாயுவின் மகன். பீமன் ஒரு முறை தன் மனைவிக்காக பூ பறிக்க சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த குரங்கை தள்ளி செல்லும் படி கட்டளையிட்டார் பீமன். பீமனின் கட்டளையை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை அனுமன். அகங்காரம் அடைந்த பீமன் அனுமனின் வாலை நகர்த்த முயற்சிக்க தோல்வியுற்றான். பிறகு தான் உணர்ந்தார் அது சாதாரண குரங்கு இல்லை வீர அனுமன் என்று. பீமனின் ஆணவத்தை அடக்கி நல்முறைப்படுத்தவே அனுமன் அவ்வாறு செய்தார்.

ராமன் வைகுண்டம் அடையும் போது எமனின் பாதையை தடுத்தார் அனுமன்

ராமன் வைகுண்டம் அடையும் போது எமனின் பாதையை தடுத்தார் அனுமன்

ராமர் பூலோகத்தை விடுத்து வைகுண்டம் செல்ல எண்ணினார். இதை அனுமன் விரும்பமாட்டார் என்று அறிந்த ராமர் அதற்கு ஒரு முடிவு செய்தார். தன் மோதிரம் பூமியில் விழுந்து விட்டது தேடி வா என்று அனுமனை அனுப்பி விட்டார். அனுமன் வருவதற்கு முன் ராமர் வைகுண்டம் சென்றார். பிறகு தான் ஆன்மாக்களின் கடவுளை சந்தித்து ராமரின் நிலையை வினவினார். அதற்கு அவர் கீழே விழுந்த ஸ்ரீ ராமரின் மோதிரம் அவருடைய வைகுண்டம் அடையும் நிலையை விளக்குகின்றது என்பதை அனுமனுக்கு விளக்கினார். அதன் பின்னரே அனுமன் தெளிவுற்றார்.

சீத்தா தேவியின் பரிசை அனுமன் மறுத்தார்

சீத்தா தேவியின் பரிசை அனுமன் மறுத்தார்

ஒரு முறை தன் அழகிய முத்து ஆபரணத்தை சீத்தா தேவி அனுமனுக்கு அளித்த போது அதை அனுமன் வாங்க மறுத்தார். ராம நாமத்தையும், ஸ்ரீ ராமரையும் தவிர எனக்கு மற்ற எதுவும் சிறப்பு இல்லை என்று கூறிய அனுமன் தன் நெஞ்சை பிளந்து அங்கு ஸ்ரீ ராமரையும் சீத்தா தேவியையும் காட்டினார்.

சமஸ்கிருத மொழியில் பக்த அனுமனுக்கு 108 நாமங்கள் உள்ளன

சமஸ்கிருத மொழியில் பக்த அனுமனுக்கு 108 நாமங்கள் உள்ளன

அனுமனை பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன. அவருடைய வாழ்க்கையே பல பாடங்களை சொல்லும். நெஞ்சை மயக்கும் அனுமனின் காவியம் கேட்க கேட்க இன்பம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Interesting Facts About Lord Hanuman

Here are some interesting facts about lord hanuman. Read on to know more...
Desktop Bottom Promotion