சீதை இராவணனைத் திருமணம் செய்வதில் இருந்து தப்பித்தது எப்படி என்று தெரியுமா?

By: Ranjithkumar Rathenkumar
Subscribe to Boldsky

ஸ்ரீராமரும் சீதையும் இணைந்திருக்க வேண்டுமென்பதே விதி என்றாலும், சீதை தனது சுயம்வரத்தின் போது இராவணனை கிட்டத்தட்ட திருமணம் செய்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இராமாயணத்தில் வரும் இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!

இத்தனை காலமும், சீதை இராவணனை முதலில் கண்டது தண்டகாரண்ய காடுகளில் வைத்து இராவணனால் இலங்கைக்குக் கடத்திச் செல்லப்படும் போதுதான் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

ராமாயணத்தைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

ஆனால் இராமாயணத்தின் படி ஸ்ரீராமர், சீதை மற்றும் இராவணன் ஆகிய மூவரும் முன்பாகவே சீதையின் தந்தை ஜனகர் ஏற்பாடு செய்திருந்த சுயம்வரத்தில் சந்தித்திருக்கின்றனர்.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீதையின் சுயம்வரத்தை அறிவித்த ஜனக மன்னர்

சீதையின் சுயம்வரத்தை அறிவித்த ஜனக மன்னர்

ஜனக மன்னர், சீதையின் சுயம்வரத்திற்கு இலங்கையை ஆளும் மன்னன் இராவணனையும் அழைக்கிறார். அக்காலத்திய அரச விதிகளின் படி, திருமணத்திற்கு தயாராக உள்ள பெண்ணின் தந்தை, அனைத்து நாடுகளிலும் உள்ள தகுதியான அரசர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும் தனது பெண்ணின் கரம் பிடிக்க வந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.

சிவ தனுசை தூக்கிய இராவணன்

சிவ தனுசை தூக்கிய இராவணன்

இந்துமதப் புராணமான இராமாயணத்தின் படி, ஸ்ரீராமரும் சீதையும் திருமணம் முடிக்கும் முன்பாக, இராவணன் வில்லைச் சிறிது நேரம் கையில் எடுத்து, நாணை ஏற்றும் முன்பே கீழே போட்டு விட்டார். எனினும் சுயம்வரத்திற்கு வந்திருந்த ஏனைய அரசர்கள் அதுவரை வில்லை அசைக்க முடியாதபடியால் இராவணன் வெற்றி பெற இருந்த சமயத்தில், ஸ்ரீராமர் சுயம்வரத்திற்கு வருகை புரிகிறார்.

புனித கௌரி பூஜை

புனித கௌரி பூஜை

சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதி (கௌரி) ஆகிய இருவரும் இந்து மதத்தில் வழிபடப்படும் முக்கிய தெய்வங்கள் ஆவர். ஆகச்சிறந்த தெய்வீக தம்பதியராக அறியப்படுபவர்கள். எனவே நல்ல மனதுடனும் தெளிந்த எண்ணங்களுடனும் இவர்களை வழிபடுபவருக்கு சகல சௌபாக்கியங்களுடனான மணவாழ்க்கையும், மனம் விரும்பும் வாழ்க்கைத்துணையும் அமைந்து அருள் பாலிக்கப்படுவர். எனவே இத்தம்பதியரின் அருளைப் பெற கௌரி பூஜை சிறந்த வழியாக கருதப்படுகிறது. சுயம்வரத்திற்கு முன்பாக நடந்த சம்பவங்களின் தொகுப்பையும், ஸ்ரீராம சீதை திருமணத்தில் கௌரிசங்கர பூஜையின் முக்கிய பங்கையும் அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

சீதை இராமரை சந்தித்தல்

சீதை இராமரை சந்தித்தல்

அயோத்திக்கு செல்லும் வழியில் விசுவாமித்திர முனிவர், ஸ்ரீராமர் மற்றும் இலட்சுமணருடன் ஜனகாபுரியை வந்தடைந்தார். ஜனக மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அங்கு தங்குவதற்கு சம்மதித்தார். காலையில் ஜனக மன்னரின் சிறப்பான வரவேற்புக்குப் பின்னர் ஸ்ரீராமரும், இலட்சுமணரும் அருகிலுள்ள காடுகளில் உலாவிக் கொண்டிருந்த போது, சீதையையும் அவர் தங்கை ஊர்மிளையையும் கௌரி கோயிலில் இருந்து வரும் வழியில் முதல் முதலாகக் கண்டனர்.

ஜனக மன்னர் மற்றும் விசுவாமித்திரரின் சந்திப்பு

ஜனக மன்னர் மற்றும் விசுவாமித்திரரின் சந்திப்பு

பின்னர் மாலையில் ஜனக மன்னர் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் விவரத்தை விசுவாமித்திர முனிவரிடம் தெரிவித்தார். இராமர் மற்றும் இலட்சுமணர் அயோத்தி அரசின் இளவரசர்கள் என்பதை அறிந்திருந்ததால், அவர்களையும் சுயம்வரத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இராவணன் - சிவபெருமானின் பெரும் பக்தன்

இராவணன் - சிவபெருமானின் பெரும் பக்தன்

இந்த சமயத்தில், ஜனக மன்னரின் அழைப்பின் பேரில் இராவணன் சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தான். இராவணனின் வருகை பற்றிய செய்தி, சிவபெருமானின் பெரும் பக்தனும், மேலும் பல தெய்வங்களிடம் அருள் பெற்றவனுமான இராவணனால் மட்டுமே சிவதனுசை தூக்கி நாணேற்ற முடியும் என்ற வதந்தியுடன் சேர்ந்து பரவிக் கொண்டிருந்தது.

சுயம்வரத்தின் முடிவைப் பற்றிய சீதையின் வருத்தம்

சுயம்வரத்தின் முடிவைப் பற்றிய சீதையின் வருத்தம்

இராவணனின் முதல் மனைவி மண்டோதரி பற்றியும், அவனது கொடூர செயல்களைப் பற்றியும் அறிந்திருந்த சீதை இந்த வதந்திகள் உண்மையாகி விடுமோ என்று பயந்தார். எனவே சுயம்வரத்திற்கு முதல் நாள் இரவு சீதை தனது தாய் அரசி சுனைனாவிடம் சென்று தனது அச்சத்தைக் குறித்து தெரிவித்தார்.

கௌரி பூஜை பற்றி அரசி சுனைனாவின் தகவல்

கௌரி பூஜை பற்றி அரசி சுனைனாவின் தகவல்

சுனைனா சீதையிடம் கௌரி கோயிலுக்கு சென்று "ஹே கௌரி சங்கரார்தாங்கி யதா த்வம் சங்கர் ப்ரியா, ததா மாம் குரு கல்யாணி காந்த் காந்தம் சுதுர்லபாம்" என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டே கௌரிசங்கர பூஜையை செய்யுமாறு அறிவுறுத்தினார். சீதையும் அந்த இரவும் பகலும் முழுவதுமாக அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தனக்கு அருள் புரியுமாறு பார்வதி தேவியை வேண்டினார்.

சீதையின் சுயம்வரம்

சீதையின் சுயம்வரம்

மறுநாள் ஜனக மன்னரின் நிபந்தனைப் படி, அனைத்து மன்னர்களும் சிவபெருமானின் புனித வில்லைத் தூக்க முற்பட்டனர். இதுவரையிலும் இராம இலட்சுமணர் தங்களுக்கு இந்த சுயம்வரத்தில் பங்கேற்கும் தகுதி உள்ளதா என்பதைப் பற்றி விசுவாமித்திர முனிவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இராவணன் சுயம்வரத்திற்கு வருகை

இராவணன் சுயம்வரத்திற்கு வருகை

இதுநாள் வரை ஸ்ரீராமர் சிவபெருமானின் புனித வில்லை உடைத்து சீதையின் சுயம்வரத்தில் தனது வெற்றியை நிலை நாட்டியதைப் பற்றி அறிந்திருந்தோம். ஆனால் அதற்கு முன்பே இராவணன் அந்த வில்லைத் தூக்கி சிறிது நேரத்தில் கீழே போட்டுவிட்டதைப் பற்றி அறிந்திருக்க மாட்டோம்.

ஸ்ரீராமர் சிவ தனுசை உடைத்தல்

ஸ்ரீராமர் சிவ தனுசை உடைத்தல்

ஆனால், கதையில் திருப்பமாக, விசுவாமித்திர முனிவரால் சமாதானப்படுத்தப்பட்ட இராமரும் இலட்சுமணரும் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். வில்லில் நாணேற்ற முற்படுகையில் ஸ்ரீராமர் விலை இரண்டாக உடைத்து இராவணனை வென்றார்.

இராம சீதை திருமணம்

இராம சீதை திருமணம்

பார்வதி தேவியின் அருளால் மட்டுமே சிவபெருமான் நிர்ணயித்த விதி மாற்றப்பட்டு, ஸ்ரீராமர் சுயம்வரத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sita Escaped Marrying Ravana At Her Swyamvar, Here's How!

Lord Ram and Sita were destined to be together, but did you know that she almost got married to Ravana during her ‘Swayamvar’? Read on to know more...
Subscribe Newsletter