இனி இந்தியாவை பின்பற்ற போகுது உலகம், எதனால் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பல துறைகளில், பல செயல்களில் இதை இப்படி தான் செய்ய வேண்டும், நாங்கள் இதை தான் பின்பற்றுவோம் என பல்வேறு நாடுகள், பல்வேறு விஷயங்களில் வெவ்வேறு முறைகளில் செயலாற்றுவார்கள். இதில் ஒன்று தான் மலம் கழித்த பிறகு சுத்தம் செய்வது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு முறையை பின்பற்றுகிறார்கள்.

கலாச்சாரம், சுகாதாரம் என இதற்கு பல பெயர்கள் வைத்து கூறினாலும். சுத்தம் செய்ய வேண்டியது, சுகாதாரமாக இருக்க வேண்டியது தான் அடிப்படை தேவை. நாம் பின்பற்றும் முறை தவறென்றால் அதை திருத்திக் கொள்வது தவறல்ல.

அப்படி தான் உலகமே மெல்ல, மெல்ல, மலம் கழித்த பிறகு பேப்பர் பயன்படுத்துவது சுகாதாரமற்றது, இந்தியாவில் பின்பற்றப்படும் தண்ணீர் முறை தான் சிறந்தது என பின்தொடர ஆரம்பித்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிமேல் யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள்!

இனிமேல் யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள்!

இந்தியர்கள் கைகளால் சாப்பிட்டாலும், கைகளால் கழிவறை சென்ற பின் கழுவினாலும் என கைகளை பயன்படுத்துவதை கண்டு முகம் சுளிப்போர் பலர் இருக்கிறார்கள். ஆனால், இனிமேல் இது இருக்காது. கைகளால் சாப்பிடுவது, கைகளால் தண்ணீர் கொண்டு கழுவுவது தான் சிறந்தது என ஆய்வாளர்களே கூறுகின்றனர்.

இந்தியர்கள் மட்டும் இல்லை!

இந்தியர்கள் மட்டும் இல்லை!

இம்முறையை இந்தியர்கள் மட்டும் தான் பின்பற்றுகின்றனர் என்பதே முதலில் பொய். இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்த்தான், பங்களாதேஷ், நேபால், பூட்டான் மற்றும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் உள்ள மக்கள் யாவரும் இம்முறையை தான் பின்பற்றுகின்றனர்.

மற்ற ஆசிய நாடுகள்!

மற்ற ஆசிய நாடுகள்!

தெற்காசியா மட்டுமின்றி, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் தண்ணீர் பயன்படுத்தி கழுவும் முறை தான் பின்பற்றப்படுகிறது. ஏன் பேப்பர் உருவாக்கிய சீனாவிலேயே பல பகுதிகளில் டாய்லேட் பேப்பருக்கு பதிலாக, தண்ணீர் தான் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பான்!

ஜப்பான்!

ஹைடெக், ஆட்டோமேடிக் என தொழில்நுட்பத்தில் வளர்ந்து நிற்கும் ஜப்பானிலும் கூட தண்ணீர் மற்றும் பேப்பர் இரண்டையும் பயன்படுத்தும் முறை இருக்கிறது. ஜப்பானில் மலம் கழித்த பிறகு கழுவ தண்ணீர் பயன்படுத்துவது தான் சரி என்றும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய - தென்னமெரிக்க பகுதிகள்!

ஐரோப்பிய - தென்னமெரிக்க பகுதிகள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும், அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும் கூட தண்ணீர் பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது.

யு.எஸ்!

யு.எஸ்!

அமெரிக்காவும் இதில் கைகோர்த்து, பேப்பர் பயன்படுத்துவதை காட்டிலும், தண்ணீர் பயன்படுத்துவது தான் சுகாதாரமானது என அறிவித்து பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

மேலும், பேப்பர் பயன்படுத்துவதால் நச்சுக்கள், பாக்டீரியாக்கள் பரவும் வாய்ப்பு தான் இருக்கிறதே தவிர. முழுவதுமாக சுத்தமாவது இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Now The World Follows India and Replacing Toilet Paper With Water. Here’s Why

Now The World Follows India and Replacing Toilet Paper With Water. Here’s Why
Please Wait while comments are loading...
Subscribe Newsletter