அட! சில்லுன்னு ஒரு காதல்ல வந்த பேபியா இது? மடமடன்னு வளந்துருச்சு!!!

Posted By:
Subscribe to Boldsky

இவரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? சில்லுன்னு ஒரு காதலின் தாக்கத்தில் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இவரை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். சூர்யா - ஜோவின் முதல் மகள் இவர்தானே!

மிகக் கியூட்டான மகளாக தோன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த குழந்தை நட்சத்திரம் அல்லவா இவர். இப்போது மடமடவென வளர்ந்து நடிகையாகிவிட்டார். நிர்மலா கான்வென்ட் எனும் தெலுங்கு படத்தில் இவர் இப்போது நடித்து வருகிறார்.

ஆறு வயதிலேயே குடும்பங்களின் மனதை கொள்ளையடித்த ஷ்ரியா ஷர்மா இப்போது மூவாறு வயதில் இளைஞர் மனதை கொள்ளையடிக்க மீண்டும் வந்துள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று வயது முதல்...

மூன்று வயது முதல்...

ஷ்ரியா ஷர்மா ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பாலம்பூர் எனும் ஊரில் பிறந்தவர். சிறுவயது முதல் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் தோன்றி நடித்து வருகிறார். ஷ்ரியா ஷர்மா இவரது மூன்று வயதில் இருந்தே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்

குடும்பம்

ஷ்ரியா ஷர்மாவின் தந்தை விக்காஸ் ஒரு பொறியியலாளர். இவரது அம்மா ரீத்து ஷர்மா டயட்டிஷியானாக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கம், மற்றும் தனது திறமையால் ஷ்ரியா ஷர்மா 15 வருடங்களால் விளமபரம் மற்றும் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

ஆரம்பத்தில் ஷ்ரியா ஷர்மா விளம்பரங்களில் தான் தோன்றினார், சன் ஃபீஸ்ட், வேர்ல்பூல், லக்ஸ், ரெலாக்ஸோ, செல்லோ பென், டெல், காம்ப்ளேன், ரஸ்னா என 30-40 விளம்பரங்களில் ஷ்ரியா ஷர்மா நடித்துள்ளார்.

டிவி சீரியல்

டிவி சீரியல்

ஜீ டிவி, ஸ்டார் ப்ளஸ் போன்ற சேனல்களில் சில டிவி சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஷ்ரியா ஷர்மா.

Kanhaiya (ஜீ டிவி)

Kasautii Zindagii Kay as Sneha (2001-2007) (ஸ்டார் ப்ளஸ்)

Jhoot Bole Kawwa Kate as Shriya (ஜீ டிவி)

Carry on Shekhar (சாப் டிவி)

Galaxy of Stars (ஜீ டிவி)

மேலும் சில டிவி நிகழ்சிகளிலும் ஷ்ரியா ஷர்மா பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது

தேசிய விருது

2011-ம் ஆண்டு வெளிவந்த "சில்லர் பார்டி" எனும் இந்தி திரைப்படத்திற்காக ஷ்ரியா ஷர்மா தேசிய விருதும் வென்றுள்ளார்.

மற்ற விருதுகள்

மற்ற விருதுகள்

ஸ்டார் பரிவார் விருது 2004 - சிறந்து குழந்தை நட்சத்திரம் விருது

மற்ற விருதுகள்

மற்ற விருதுகள்

இந்தியன் டெலி விருது 2004 - சிறந்த பெண் குழந்தை கலைஞர்

மற்ற விருதுகள்

மற்ற விருதுகள்

இந்தியன் டெலிவிஷன் அகாடமி விருது 2004 - சிறந்த குழந்தை நட்சத்திரம்

இசை வீடியோ

இசை வீடியோ

ஷ்ரியா ஷர்மா இரண்டு பஞ்சாபி இசை வீடியோக்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

இயக்குனர் கான்டிஸ் பிரியட்ஸ் (Candice BREITZ) இயக்கிய ஜெர்மன் ப்ராடிஜியில் ஏனைய ஐந்து இந்திய குழந்தை நடசத்திரங்கள், ஆறு ஹாலிவுட், மற்றும் நைஜீரியன் குழந்தை நட்சத்திரங்களோடு இனைந்து தோன்றினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Shriya Sharma

Lesser Known Facts About Shriya Sharma, read here in tamil.
Subscribe Newsletter