கே.டி. குஞ்சுமோன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

எல்லா திரை பிரபலங்களும் பிறந்தவுடன் திரையுலகில் கால பதித்தவர்கள் அல்ல. வறுமையில் வாடி, கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து முன்னேறியவர்கள் தான் பலர். ஒரு பிரபலத்தின் பிள்ளையாக இருந்து திரையுலகில் வளர்ந்தவர்கள் வெகு சிலர் தான். அவர்களுக்கும் கூட திறமை ஒரு ஊன்றுகோலாக தேவைப்பட்டது.

Facts About K. T. Kunjumon

ஷங்கர், நாகார்ஜுனா, விஜய் போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பளித்த தயாரிப்பாளர் தான் கே.டி. குஞ்சுமோன். பல படங்களை டிஸ்ட்ரிபியூஷன் செய்து திரையுலகில் பிரபலமடைந்து, வெற்றி தயாரிப்பாளராக உருவெடுத்து, கடைச்யில் தான் தயாரித்த படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் போன நிலையையும் கண்டவர் கே.டி. குஞ்சுமோன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ராவல்ஸ்!

ட்ராவல்ஸ்!

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஒரு ட்ராவல் ஏஜென்சியில் பணியாற்ற துவங்கினார் கே.டி. குஞ்சுமோன். அதன் பிறகு ஒரு ஹோட்டல் துறையில் பணியாற்றினார். இது போல சிறுசிறு தொழில்களில் ஈடுபட்ட பிறகு தான் கே.டி. குஞ்சுமோன் சினிமா தயாரிப்பாளராக மாறினார்.

சினிமா!

சினிமா!

சினிமா துறையில் முதலில் கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பாளராக அறிமுகமாகவில்லை. முதலில் இவர் சினிமாவை டிஸ்ட்ரிபியூஷன் தான் செய்து வந்தார். ஏறத்தாழ 350-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிப் படங்களை இவர் டிஸ்ட்ரிபியூஷன் செய்துள்ளார்.

டப்பிங் சினிமா!

டப்பிங் சினிமா!

கே.டி. குஞ்சுமோன் நிறைய தமிழ் மொழி படங்களை தமிழில் இருந்து மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிட்டுள்ளார்.

டிஸ்ட்ரிபியூட்டர் டூ ப்ரோடியூசர்!

டிஸ்ட்ரிபியூட்டர் டூ ப்ரோடியூசர்!

1980-களின் இறுதியில் தான் கே.டி. குஞ்சுமோன் மலையாள படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 1991 முதல் தமிழ் படங்களை தயாரிக்க துவங்கினார். இவர் தயாரித்த முதல் தமிழ் படம் இயக்குனர் பவித்திரன் இயக்கிய வசந்தகால பவித்திரன்!

இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் தயாரிப்பாளர் இவர் தான். இணை இயக்குனராக பணியாற்றியதே போதும் என இருந்த ஷங்கரை நீங்க படம் இயக்கனும் என அவரது திறமையை அறிந்து தானாக கேட்டு தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன். இதன் பிறகு காதலன் படத்தையும் ஷங்கர் இயக்கத்தில் தயாரித்தார்.

ரட்சகன் முதல்...

ரட்சகன் முதல்...

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா - சுஷ்மிதாசென் இணைத்து ரட்சகன் படத்தை தயாரித்தார் கே.டி. குஞ்சுமோன். கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்த படம் சரியாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் குவிக்கவில்லை. இதன் பிறகு இவர் நடிகர் விஜயை வைத்து தயாரித்த "நிலாவே வா..", "என்றென்றும் காதல்.." ஆகிய இரண்டு படங்களும் சுமார் என்ற விமர்சனத்தை பெற, இவரது தயாரிப்பு வீழ்ச்சி அடைய துவங்கியது.

மகனை ஹீரோ ஆக்கிய கே.டி. குஞ்சுமோன்!

மகனை ஹீரோ ஆக்கிய கே.டி. குஞ்சுமோன்!

நாகார்ஜுனா - விஜய் படங்களுக்கு இடையே தன் மகனை ஹீரோ ஆக்கும் முயற்சியில் கோடீஸ்வரன் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தின் பாடல்கள் மட்டும் தான் 1999-ல் வெளியாகின. பினான்ஸ் பிரச்சனைகளால் இந்த படம் வெளியாகவே இல்லை.

பல சிக்கல்களுக்கு பிறகு, 2008-ல் காதலுக்கு மரணமில்லை என்ற படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படமும் முடிவடைந்த நிலையில் திரைக்கு வராமலேயே போய்விட்டது. சினிமா ஒருவரை எப்போது வாழ வைக்கும், எப்போது வீழவைக்கும் என்றே கணிக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About K. T. Kunjumon

K. T. Kunjumon is a Tamil film producer and writer. He began his career co-producing several Malayalam films, often working with director P. G. Viswambharan. Check it out some interesting facts about him.
Story first published: Tuesday, October 18, 2016, 11:15 [IST]
Subscribe Newsletter