மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணனின் எழுச்சியூட்டும் சிறப்பியல்புகள்!

By: Maha
Subscribe to Boldsky

மகாபாரதம் என்னும் காவிய கதையில் வரும் ஒரு மாவீரன் தான் கர்ணன். மகாபாரதத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களுள் ஒருவர். ஏனெனில் இவர் தான் பாண்டவர்களுக்கு மூத்தவர். ஆனால் தனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை வழங்கிய துரியோதனுக்கு கடைசி வரை நல்ல நண்பனாக இருந்தவர்.

மகாபாரதத்தில் அர்ஜுனை வீழ்த்தக்கூடிய அளவில் வலிமை மற்றும் வீரத்தைக் கொண்டவர். சொல்லப்போனால் அர்ஜுனை விட வலிமையானவர் என்றே கூறலாம். ஆனால் கிருஷ்ணரின் லீலையால் இவர் போரில் இறக்க வேண்டியிருந்தது.

மாவீரன் கர்ணனின் சில பண்புகளை நாம் வாழ்க்கையின் சில நேரங்களில் பின்பற்றினால், நிச்சயம் நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தலாம். சரி, இப்போது அந்த மாவீரன் கர்ணனின் எழுச்சியூட்டும் சிறப்பியல்புகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்தி வாய்ந்த மனிதன்

சக்தி வாய்ந்த மனிதன்

மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றால் அது கர்ணன் தான். இவர் அர்ஜுனன் மற்றும் பீமனை விட வலிமையானவர். குருசேத்திர போரில், பாண்டவர்களுக்கு உதவும் வண்ணம் இந்திரன் மற்றும் கிருஷ்ணனின் லீலையால் தான் கர்ணன் போரில் இறக்க நேரிட்டதே தவிர, லீலை ஏதும் நடக்காமல் இருந்தால் நிச்சயம் கர்ணனே வென்றிருப்பார்.

தாராள மனம் கொண்டவர்

தாராள மனம் கொண்டவர்

கொடை வள்ளல் என்பதற்கு பெயர் போனர் தான் கர்ணன். இவர் தன்னிடம் வந்து, யார் எதை வேண்டினாலும், இல்லை என்று கூறாமல் கொடுப்பார். சூரியனின் மகனான கர்ணன், பிறக்கும் போது போர்க்கவசம் மற்றும் காதுவளையங்களைக் கொண்டே பிறந்தார். இது தான் அவரை வலிமையானவராக வைத்தது. இதை அறிந்த இந்திரன், போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், கர்ணனிடம் உள்ள போர்க்கவசத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி, பிராமணர் வேடத்தில் சென்று கர்ணனிடம் வேண்டிக் கேட்டு பெற்றுக் கொண்டார். கர்ணனும் அதை சற்றும் மறுக்காமல் கொடுத்துவிட்டார்.

சிறந்த வில்லாளன்

சிறந்த வில்லாளன்

கர்ணனிடம் உள்ள மற்றொரு சிறப்பியல்பு இவர் சிறந்த வில்லாளன். அதுவும் மகாபாரதத்தில் வில் வீச்சில் சிறந்தவரான அர்ஜுனனை விட சிறந்தவர் இவரே.

தர்மம்

தர்மம்

கர்ணனிடம் உள்ள எதை வேண்டினாலும், இல்லை என்று கூறமாட்டார். சற்றும் யோசிக்காமல் தானம் வழங்குவார். அப்படி தான் போர்க்களத்தில் கர்ணன் உயிர் பிரியாமல் போராடும் நிலையில், கிருஷ்ணன் பிராமணர் வடிவில் வந்து இதுவரை கர்ணன் செய்த தர்மத்தின் பலனை யாசகம் கேட்டார். அப்போதும் கர்ணன் சற்றும் மறுக்காமல் கொடுத்தார்.

மரியாதை

மரியாதை

குருசேத்திர போருக்கு முன், குந்தி கர்ணனை சந்தித்து, நான் தான் உன் உண்மையான தாய் என்றும், பாண்டவர்கள் உன் சகோதரர்கள் என்ற என்ற விஷயத்தைக் கூறி, பாண்டவர்களுடன் இணையுமாறு கூறினார்.

மரியாதை

மரியாதை

ஆனால் கர்ணனோ துரியோதனனின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில் முடியாது என்று கூறினார். அதே சமயம் தாயின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, போரில் அர்ஜுனனைத் தவிர யார் மீது அம்பை செலுத்தமாட்டேன் என்றும் கூறினார்.

போராசை இல்லா குணம்

போராசை இல்லா குணம்

கிருஷ்ணரும் கர்ணனிடம் துரியோதனனை விட்டு, பாண்டவர்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு கூறினார். மேலும் மொத்த ராஜ்ஜியத்தையும் வழங்குவதாக கூறினார். இருப்பினும் கர்ணன் ராஜ்ஜியத்தின் மேல் ஆசை கொள்ளாமல், துரியோதனன் மீதுள்ள விசுவாசத்தினால் மறுத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Inspiring Characteristics Of Karna In Mahabharata

karna is the most inspiring character in Mahabharata. Read the article to know the amazing characteristics of karna in Mahabharata.
Subscribe Newsletter