சினிமா பிரபலங்கள் லக் என்ற பெயரில் கடைப்பிடிக்கும் பழக்கங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

எல்லாருக்கும் எதாவது ஒன்றை ராசியாக கருதும் எண்ணமிருக்கும். தன்னம்பிக்கை மிகுதியாக இருப்பவர்கள் கூட அவர்களது முக்கியமான செயல்களில் ஈடுபடும் போது எதாவது ஒரு விஷயத்தை ராசி என கருதி அதை தவறாமல் செய்வார்கள்.

சொந்தமாக தீவுகள் வைத்திருக்கும் பிரபலங்கள்!!!

மாணவர்கள் ஒரே பேனாவை தேர்வுக்கு எடுத்து செல்வதில் தொடங்கி, ராசியான நாள், கிழமையில் முக்கியமான செயல்களை செய்வது வரை இது தொடர்கிறது. நூற்றில் பத்து பேரை தவிர மற்ற யாவரும் ஏதேனும் ஒரு விஷயத்தை ராசியாக கருதுகிறார்கள்.

அச்ச அசலாக... ஒரே மாதிரி இருக்கும் பிரபலங்கள்!!!

இந்த வகையில் நமது இந்திய பிரபலங்கள் சிலர் ராசியாக கருதி வழக்கமாக பின்பற்றி வந்த சில செயல்கள் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

80-களின் முதலே ரஜினி ஓர் அம்பாசிடர் காரை தான் பயன்படுத்தி வந்தார். பல இலட்சங்களில் இருந்து கோடிகள் வரை சம்பளம் உயர்ந்தாலும் இந்த காரை இவர் மாற்றவில்லை. சிலர் இதை எளிமை என்றும், சிலர் அந்த காரை அவர் மிகவும் லக் என்று நினைத்தார் எனவும் கூறுகிறார்கள்.

விஜய்

விஜய்

நடிகர் விஜய் தனது ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் தினத்தன்று வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மாதவன்

மாதவன்

3 இடியட்ஸ் திரைப்படத்தில் மாதவன் வரும் முதல் காட்சி ஹைதராபாத் விமான நிலையத்தில் காட்சியாக்கப்பட்டது. இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. இந்த ராசியை வைத்து தனு வெட்ஸ் மனு படத்தின் காட்சியையும் ஹைதராபாத் விமான நிலையத்திலேயே ஷூட்டிங் நடத்த கேட்டுக் கொண்டாராம் மாதவன்.

அக்ஷை குமார்

அக்ஷை குமார்

அக்ஷை குமாரின் சமீபத்திய லக் சோனாக்ஷி சின்ஹா என கூறுகிறார்கள். 2012-ல் இருந்து இன்று வரை இவர்கள் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களை ஈர்த்தது. ஓ.எம்.ஜி., பாஸ், ஜோக்கர், ஹாலிடே, ரவுடி ரத்தோர், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை போன்ற படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

திரைப்பட நிகழ்சிகள், பொது நிகழ்சிகள், விருது விழாக்கள் என எங்கு சென்றாலும் தன் கையில் மணிகள் கோர்த்த காப்பு அணிவதை வழக்கமாக வைத்திருப்பார் வித்யா பாலன்.

சல்மான் கான்

சல்மான் கான்

தன் கையில் ஓர் இரத்தின காப்பு அணிந்திருப்பார் சல்மான் கான். இதை பல வருடங்களாக அணிந்து வந்தார் இவர். இது இவரது லக் என்று கருதி வந்தார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

திரைப்பட வாழ்க்கை மட்டுமின்றி, காதல் மற்றும் இல்லற வாழ்க்கையிலும் சரீனாவின் லக் சைஃப் அலி கான் தான்.

கஜோல்

கஜோல்

தனது மோதிர விரலில் ஓம் என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்திருப்பர் கஜோல். இது அவரது ராசியான மோதிரமாக திகழ்ந்து வந்தது. இதை இவரது கணவர் அஜய் பரிசளித்தார் என்றும் அதனால் தான் இதை கஜோல் ராசியாக கருதினார் என்றும் கூறுகிறார்கள்.

சபையர் மோதிரம் (sapphire ring)

சபையர் மோதிரம் (sapphire ring)

நீல நிற சபையர் மோதிரத்தை எப்போதும் அமிதாப்பச்சனின் கைகளில் நீங்கள் காண முடியும். இதை அவரது வலது கையில் அணிந்திருப்பார்.

கட்டை விரல்

கட்டை விரல்

ஹ்ரித்திக் ரோஷனின் வலது கையில் இரட்டை கட்டை விரல் ஒட்டி இருக்கும். இதை ஆரம்ப காலம் முதலே இவர் ராசியாக கருதுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities And Their Lucky Charms

Do you know about out Indian celebrities lucky charms? read here in tamil.
Subscribe Newsletter