For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரபல நிறுவனங்களின் முழுப்பெயர் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

|

பெரும்பாலும் நாம் பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களை பெயர் சுருக்கம் வைத்து தான் அழைத்தும், அறிந்தும் வருகிறோம். ஏன் சில சமயங்களில் பெரிய பெயர்கள் வைத்திருக்கும் நண்பர்களையே நாம் வி.கே, எம்.எஸ் என்று பெயரை சுருக்கி தான் அழைக்கிறோம்.

இந்தியாவில் மட்டுமே காணப்படும் சில எரிச்சலூட்டும் செயல்கள்!

ஒருபுறம் இது ஃபேஷனாக இருப்பினும், முழுப்பெயர் சொல்லி அழைப்பதில் சிரமம் அல்லது சோம்பேறித்தனம், எளிமை காரணம் என்று கூட கூறலாம். அந்த வகையில் நாம் இன்று வரை பெயர் சுருக்கத்தை வைத்து மட்டுமே அறிந்து வரும் பல நிறுவனங்களின் முழுப்பெயர் மற்றும் அர்த்தம் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈ.எ ஸ்போர்ட்ஸ்

ஈ.எ ஸ்போர்ட்ஸ்

ஈ.எ ஸ்போர்ட்ஸ் என்பது ஆண்களுக்கு மிகவும் பரிச்சயமான மென்பொருள் விளையாட்டு தயாரிப்பு நிறுவனமாகும். Electronic Arts என்பதன் சுருக்கம் தான் ஈ.எ ஸ்போர்ட்ஸ்.

நைக்

நைக்

வெற்றியை குறிக்கும் கிரேக்க கடவுளின் பெயர் தான் நைக் (Nike)

சாம்சங்

சாம்சங்

கொரியன் மொழியில் மூன்று நட்சத்திரங்களை குறிக்கும் சொல் தான் சாம்சங்.

சோனி

சோனி

"Sonus" என்ற லத்தின் மொழி சொல்லின் பொருள் "சப்தம்" இதை குறிக்கும் சொல் தான் சோனி.

ஐ.எப்.எஸ்.சி

ஐ.எப்.எஸ்.சி

இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் செண்டர் என்பதன் சுருக்கம் தான் ஐ.எப்.எஸ்.சி (IFSC) ஆகும். மேலும் இந்தியன் பைனான்சியல் சிஸ்டம் கோட் என்பதன் சுருக்கமும் "IFSC"தான்.

எப்.சி.யூ.கே

எப்.சி.யூ.கே

பிரெஞ்சு கனெக்ஷன் யூனிடட் கிங்டம் என்பது தான் எப்.சி.யூ.கே நிறுவனத்தின் முழுப்பெயர் ஆகும்.

எச்.எஸ்.பி.சி

எச்.எஸ்.பி.சி

ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் என்பது தான் எச்.எஸ்.பி.சி வங்கியின் முழுப்பெயர் ஆகும்.

ஈ.எஸ்.பி.என்

ஈ.எஸ்.பி.என்

என்டர்டெயின்மென்ட் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோக்ராமிங் நெட்வர்க் என்பது தான் ஈ.எஸ்.பி.என் நிறுவனத்தின் முழுப்பெயர் ஆகும்.

எச்.டி.எப்.சி

எச்.டி.எப்.சி

ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்பது தான் எச்.டி.எப்.சி வங்கியின் முழுப்பெயர் ஆகும்.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ (டபிள்யூ.ஐ.பி.ஆர்.ஓ - WIPRO) நிறுவனத்தின் முழுப்பெயர் வெஸ்டர்ன் இந்தியா ப்ராடக்ட்ஸ் லிமிடெட் என்பதாகும்.

எம்.ஆர்.எப்

எம்.ஆர்.எப்

மெட்ராஸ் ரப்பர் கம்பெனி என்பது தான் எம்.ஆர்.எப் டயர்ஸ் நிறுவனத்தின் முழுப்பெயர் ஆகும்.

எச்.டி.சி

எச்.டி.சி

எச்.டி.சி நிறுவனத்தின் முழுப்பெயர் ஹை-டெக் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன் என்பதாகும்.

எல்.ஜி

எல்.ஜி

லக்கி கோல்ட்ஸ்டார் என்பதன் சுருக்கமே எல்.ஜி ஆகும்

பி.எம்.டபிள்யூ

பி.எம்.டபிள்யூ

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ-வின் முழுப்பெயர் "Bayerische Motoren Werke" என்பதாகும்.

எச்.சி.எல்

எச்.சி.எல்

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடட் என்பதே எச்.சி.எல்-ன் விரிவாக்கம் ஆகும்.

இன்டெல் (Intel)

இன்டெல் (Intel)

INTegrated ELectronics என்பதன் சுருக்கமே "Intel" ஆகும்.

லெனோவா

லெனோவா

பிரபல லேப்டாப், மொபைல் தயாரிப்பு நிறுவனமான லெனோவாவின் பெயர் இரண்டு வார்த்தைகளின் கோர்வை ஆகும். "Le" மற்றும் "Nova"-வின் கோர்வை தான் லினோவா ஆகும்.

பி.பி (BP)

பி.பி (BP)

பிரிட்டிஷ் பெட்ரோலியம் (British Petroleum) என்பது தான் பி.பி (BP)-யின் முழுப்பெயர் ஆகும். இந்தியாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தையும் கூட BP என சுருக்கமாக அழைப்பது உண்டு.

டி.எச்.எல்

டி.எச்.எல்

இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான Adrian ‘D'alsey, Larry ‘H'illblom, and Robert ‘L'ynn பெயரில் இருந்து டி.எச்.எல் என பெயர் வைக்கப்பட்டது.

டி.எல்.எப்

டி.எல்.எப்

Delhi Lease & Finance என்பது தான் டி.எல்.எப் நிறுவனத்தின் முழுப்பெயர் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Full Form Of Companies Name Abbreviations

Do You Know About The Full Form Of Companies Name Abbreviations? read here in tamil.
Desktop Bottom Promotion