For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் கொடூரமான 5 தீவிரவாத இயக்கங்கள்!

|

உரிமைகள் மறுக்கப்பட்ட போதும், அடிமைத்தனமும், அத்துமீறலும் அதிகரித்த போதும் தான் தீவிரவாதங்கள் முளைக்க ஆரம்பித்தன. தான் வல்லரசு ஆகவே இருக்க வேண்டும் என்ற சில மேற்கத்திய நாடுகளின் அநீதிகளும் கூட இந்த தீவிரவாத அமைப்புகள் உருவாக காரணியாக இருந்துள்ளது.

இன்று, முக்கிய உலக நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்காத நாடுகள் என எதுவும் இல்லை. இதில், ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் தான் பெருமளவு உயிரிழந்துள்ளனர். சில நாட்களின் அதிகார வர்க்கத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் மத்தியிலான தாக்குதல்களில் இரண்டு பக்கமுமே அதிகமாக உயிரிழப்பது சராசரி மக்கள் தான்.

இனி, உலகின் கொடூரமான 5 தீவிரவாத இயக்கங்களின் தோற்றம் மற்றும் அவர்களது கொள்கைகள், ஏன் தோன்றினர் என்பது பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அல் நுஸ்ரா முன்னணி

அல் நுஸ்ரா முன்னணி

அல் நுஸ்ரா முன்னணி, அல் காயிதா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி சிரியா மக்கள் போரின் போது அல் நுஸ்ரா முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு தன்னை மிக ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான அமைப்பு எனப் கூறிக்கொண்டது.

 அல் நுஸ்ரா முன்னணி

அல் நுஸ்ரா முன்னணி

ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அல் நுஸ்ரா முன்னணியை தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தி பிரித்து, தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 அல் நுஸ்ரா முன்னணி

அல் நுஸ்ரா முன்னணி

அல் நுஸ்ரா முன்னணி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என அறிவித்திருக்கிறது. மேலும் அல் நுஸ்ரா முன்னணி, சிரியா மீதான மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாலிபான்

தாலிபான்

தலிபான், ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001-ல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் தாலிபான் அமைப்பு தலைவர்களை பதவியில் இருந்து அகற்றியது.

தாலிபான்

தாலிபான்

அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாக தலிபான் கருதப்படுகிறது. மேலும், தாலிபான் பாகிஸ்தான் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கு எதிராகவும், நேட்டோ படைகளுக்கு எதிராகவும் கெரில்லா முறையில் தாலிபான் போரிட்டு வருகிறது.

தாலிபான்

தாலிபான்

ஆப்கானில் ஏற்படும் 80% இறப்புக்கு தாலிபான் தான் காரணம் என 2012-ல் வெளியான ஆய்வின் மூலம் தெரியவருகிறது. மேலும், இவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். போதை பொருள் வர்த்தகம், கடத்தல், நாச காரியங்கள் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் டாலர்கள் ஈட்டுகிறார்கள்.

 போகோ அராம்

போகோ அராம்

மேற்கத்திய கல்வி ஒரு பாவச் செயல் என்பதே போகோ அராம் என்பதன் பொருளாகும். இந்த அமைப்பு நைஜீரியா முழுமையும் சாரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் ஓர் நைஜீரிய இசுலாமியக் குழு.

 போகோ அராம்

போகோ அராம்

போகோ அராம் குழுவினருக்கு எவ்வித தலைமையும், ஒழுங்கமைப்பும் இல்லை. இந்த அமைப்பின் அலுவல் முறையான பெயர் ஜமாது அலிஸ் சுன்னா லிட்டாவதி வல்-ஜிகாத். இதற்கு அராபிய மொழியில் "நபிகள் நாயகத்தின் உரைகளையும் ஜிகாத்தையும் பரப்பிட அர்ப்பணித்தவர்கள்" என்ற பொருள் விளங்குகிறது.

 அல்-காய்தா

அல்-காய்தா

அல்-காய்தா தீவிரவாத அமைப்பு ஜிகாத் கொள்கை உடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் தலைமை ஒன்றியம் ஆகும். அல்-காய்தா 1989-ம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் பின்வாங்கிய பிறகு, ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 - 89 -க்கு இடையில் துவங்கப்பட்ட அமைப்பாகும்.

 அல்-காய்தா

அல்-காய்தா

முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து முகமது நபியின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழ் இஸ்லாமிய இராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்பதே அல்-காய்தாவின் முக்கியக் கொள்கை. உலக நாடுகளின் மக்கள் மற்றும்ராணுவத்தின் மீது பல அல்-காய்தா தாக்குதல் நடத்தியுள்ளது.

 ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கமானது ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தான். ஐ.எஸ்.ஐ.எஸ்அமைப்பு ஈராக் போரின் போது உருவாக்கப்பட்டது. மேலும், 2004-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அல்-காயிதாவுடன் இணைந்து செயல்பட துவங்கியது..

 ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ் சுணி இஸ்லாமியர்கள் அதிகம் கொண்டுள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி, அந்த ஆட்சியை சிரியா வரை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல்-காயிதா ஐ.எஸ்.ஐ.எஸ் உடனான உறவை முறித்துக் கொண்டது.

 ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-காயிதா அமைப்பை விட அபாயகரமானது என உலக நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆதரவாக இருப்போம் என போகோ அராம் தீவிரவாத அமைப்பு அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Deadliest Terrorist Organizations

Do You Know About The Five Deadliest Terrorist Organizations, read here in tamil.
Desktop Bottom Promotion