இனவாத பிரச்சனைகளைச் சந்தித்த பிரபலங்கள்!

Posted By: Batri Krishnan
Subscribe to Boldsky

மனிதத்தின் மிகப் பெரிய பிரச்சனை எது?. வறுமை, கல்வி, அறியாமை, இனவாதம். இந்தப் பட்டியலில் இனவாதம் மற்ற எல்லாவற்றையும் விட மிகக் கொடியதாக விளங்குகின்றது. ஏனெனில் இது ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் போன்ற காரணிகளைப் பார்ப்பதில்லை. இனவாதம் கருப்பு மற்றும் வெள்ளை நிறப் பாகுபாட்டுடன் நின்றுவிடுவதில்லை. அது, மதம், வெளித்தோற்றம் போன்றவற்றைச் சார்ந்தும் இருக்கலாம்.

இனப்பாகுபாடு பல வருடங்களாக ஒரு பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது. அதை தடுப்பதற்கு எந்த ஒரு முயற்சியும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனவாதிகள் இதுவரை யாரையும் விட்டு வைக்கவில்லை. பிரபலங்களில் இருந்து ஒரு சாதாரண மனிதன் வரை தங்கள் வாழ்நாளில் என்றேனும் எப்பொழுதேனும் இனப் பாகுபாட்டை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

நாம் இந்தக் கட்டுரையில், தங்கள் வாழ்வில் சில சந்தர்பங்களில் இனவாத பிரச்சனைகளை எதிர்கொண்ட புகழ் பெற்ற பிரபங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம். நீங்கள் இனவாதத்தை எதிர்கொண்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது கண்டிப்பாக அதிர்ச்சி அடைவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாருக்கான்

ஷாருக்கான்

உலகம் முழுவதற்கும் இவரை நன்றாகத் தெரியும். எனினும் இவரது குடும்பப்பெயர் காரணமாக 2009 ஆண்டில் நேவேர்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். மேலும் அவரது பெயர் கணினிமயமாக்கப்பட்ட எச்சரிக்கை பட்டியலில் வெளிப்படையாக வெளிவர ஆரம்பித்தது.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

"செலிபிரிட்டி பிக் பிரதர்" என்கின்ற பாலிவுட் ரியாலிட்டி ஷோ ஷில்பா ஷெட்டிக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது சக போட்டியாளர் ஜேட் கூடி, ஷில்பாவை "இந்திய கறி" என்று இனப்பாகுபாட்டுடன் அழைத்தார். இந்த பாகுபாடு எல்லை மீறிச் சென்றதால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

மிஸ் அமெரிக்கா நினா டவுளுரி

மிஸ் அமெரிக்கா நினா டவுளுரி

அட்லாண்டிக் நகரத்தில் மகுடம் சூட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் இவர்தான். அவர் மிஸ் அமெரிக்காவாக 2014 ல் முடிசூட்டப்பட்ட அந்தக் கணம், அமெரிக்கா முழுவதிலும் உள்ள இனவாதிகளிடமிருந்து தாக்குதலை எதிர் கொண்டார். சிலர் எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லை மீறி டுவிட்டரில் "இது அமெரிக்கா, இந்தியா இல்லை." எனப் பதிவிட்டனர். அனால் அவர் இந்த மோசமான காலத்திலும் துவண்டு போகாமல், எல்லா பிரச்சனைகளையும் மிகத் தைரியமாக எதிர் கொண்டார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

மிகவும் தைரியமான பெண்ணாகிய பிரியங்கா சோப்ரா, பாஸ்டன் நகரில் படித்துக் கொண்டிருக்கும் போது இனவெறிக்கு ஆளானது நம்மில் எவ்வுளவு பேருக்கு தெரியும்?. ஒரு சமீபத்திய பேட்டியில், அவர் அவருடைய வகுப்புத் தோழிகள் தன்னை இனவெறியுடன் "ப்ரௌனி" என்று அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மிதா பாட்டீல்

ஸ்மிதா பாட்டீல்

இந்த அழகுப் புயலைக் காணும் ஆண்களுடைய இதய துடிப்பு வெகு நிச்சயமாக அதிகரிக்கும். அப்பேற்பட்ட இந்த அழகியும் அவருடைய தோலின் நிறத்தின் காரணமாக இனவாதத்திற்கு உள்ளானார். அவருடைய தோழிகள் அவரை அடிக்கடி "காளி" என்று அழைத்தனர். எனினும் அவர் வெறுப்பவர்களைப் புறக்கணித்து விட்டு, கருணை எனும் பாதையை தேர்வு செய்தார்.

ரிஹானா

ரிஹானா

ரிஹானாவைப் பற்றி ஒரு டச்சு பத்திரிக்கை மிக மோசமாக விமர்சித்தது. அந்தப் பத்திரிக்கை அவருடைய கறுப்பினப் பின்புலத்தைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. அதற்கு ரிஹானா கோவப்பட்டு டுவிட் செய்தார். உடனே அந்தப் பத்திரிக்கை, அதன் ஆசிரியரை வேலையை விட்டு தூக்கி விட்டு, ரிஹானாவிற்கு ஒரு மன்னிப்பு கடிதத்தையும் அனுப்பி வைத்தது.

கென்னி வெஸ்ட்

கென்னி வெஸ்ட்

ஒரு 18 வயது பையன், கென்னி வெஸ்ட்டை நோக்கி மிகவும் கேவலமாக அவரது கருப்பினத்தைப் பற்றியும், அவரது காதலி கிம் கர்தாஷியனை பற்றியும் விமர்சித்தார். இதன் காரணமாக கென்னி வெஸ்ட்டிற்கும், அந்தச் சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டு கென்னி வெஸ்ட் அவனைக் குத்தியதாக நம்பப்படுகிறது.

ஓப்ரா வின்ஃப்ரே

ஓப்ரா வின்ஃப்ரே

சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு கடையின் உதவியாளர் ஓப்ரா வின்ஃப்ரேவிற்கு கைபையை அவரால் அதை வாங்க முடியாது எனக் கருதி அதைக் காட்ட மறுத்துவிட்டார். அந்தப் பையன் ஒருபொழுதும் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சிகளைப் பார்த்ததில்லை என நினைக்கிறேன்!

ஆண்ட்ரூ சைமன்ட்ஸ்

ஆண்ட்ரூ சைமன்ட்ஸ்

சில வேடிக்கையான இந்திய ரசிகர்களின் இன மற்றும் தனிப்பட்ட ரீதியான கொடுமைகளுக்கு ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் இலக்கானார். அவர்கள் மும்பை மைதானத்தில் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் விளையாடிய பொழுது அவரை இந்திய ரசிகர்கள் "குரங்கு" என்று அழைத்து வசை மாரி பொழிந்த்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous People Who Faced Racial Issues

Here is a list of celebrities who experienced discrimination. Find out about the famous people who faced racial issues.