Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பண்டைய ரோமானியர்கள் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!
ரோம் உலகின் பெரிய சாம்ராஜ்யம் என்று பலரும் கருதுவார்கள். ஆனால், அது உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யம் தான். இது போல ரோம் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பலவிருக்கின்றன.
ரோம் என்றாலே அது உலகின் பெரிய சாம்ராஜ்யம், அவர்களுக்கும் பெர்சியர்களுக்கும் அறவே ஆகாது. எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள், ரோமின் கிளாடியேட்டர்கள் சிறந்த வீரர்கள் என பல விஷயங்கள் நினைவிற்கு வந்து செல்லும்.
ஆனால், ரோம் சாம்ராஜ்யம் ஒன்று உலகின் பெரிய சாம்ராஜ்யம் இல்லை. ரோம் உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யம் தான். இது போல ரோம் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பலவிருக்கின்றன.

உண்மை #1
1900 ஆண்டுகள் கடந்து இன்றும் ரோம்-ல் இரண்டு அணைகள் உபயோகத்தில் இருக்கின்றன.

உண்மை #2
ஒருவரின் தந்தையை கொலை செய்தால், அவர்களை ஒரு சாக்கில் நாய், விரியன் பாம்பி, சேவல் போன்றவற்றுடன் சேர்த்து கட்டி வைத்துவிடுவார்கள்.

உண்மை #3
பண்டைய ரோம பெண்கள் டர்பெண்டைனை, சிறுநீரில் ரோஜா வாசம் வருவதற்காக குடித்து வந்தனர்.

உண்மை #4
ரோம் - பெர்சியன் மத்தியில் உண்டான மோதல் 721 ஆண்டுகள் நீடித்தது. உலகின் நீண்ட மோதல் இதுதான்.

உண்மை #5
பண்டைய ரோம்-ல் சதுர்னாலியா எனும் கொண்டாட்டம் இருந்தது. இதில், அடிமைகள் மற்றும் அவர்களது மாஸ்டர்கள் இடம் மாறிக் கொள்வார்கள்.

உண்மை #6
பண்டைய ரோம், இன்றைய நியூயார்க் நகரை போல எட்டு மடங்கு அடர்த்தியான மக்கள் தொகை வைத்திருந்தது.

உண்மை #7
துணிகளை துவைக்க, பண்டைய ரோம் நாகரீகத்தில் சிறுநீரை பயன்படுத்தினர். இவர்கள் பற்களை வெள்ளை ஆக்கவும் ரோமர்கள் சிறுநீரை பயன்படுத்தினர்.

உண்மை #8
ஆரம்ப காலத்தில் ரோமர்கள் கிறிஸ்துவர்களை ஏதிஸ்ட் என அழைத்தனர். ஏனெனில், அவர்கள் பாகன் கடவுகளை வணங்க மறுத்தனர்.

உண்மை #9
அழகை மேம்படுத்த பண்டைய ரோம பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினர்.

உண்மை #10
ரோம் சாம்ராஜ்யம் உலகின் பெரிய சாம்ராஜ்யம் அல்ல. ரோம் உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யம் என்பது தான் உண்மை.



Click it and Unblock the Notifications
