எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இது தான் காரணம் என உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான்.

வாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

விமானம் டேக்-ஆப், லேண்டிங் ஆகும் போது ஏன் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் தெரியுமா?

சிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் அன்னாந்து பார்த்து வியக்கும் குணமும் கொண்ட நாம், என்றாவது அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்திருக்க மாட்டோம்.

அதற்கான காரணம் இது தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மங்காத நிறம்!

மங்காத நிறம்!

வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் நாள்பட மற்றும் அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். அனால், வெள்ளை அப்படி மங்காது.

வெப்பம்!

வெப்பம்!

மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன.

வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

பார்க்கக்கூடிய நிலை!

பார்க்கக்கூடிய நிலை!

வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

மறுவிற்பனை மதிப்பு!

மறுவிற்பனை மதிப்பு!

விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

குத்தகை!

குத்தகை!

பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.

செயல்பாட்டு செலவு!

செயல்பாட்டு செலவு!

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும்.

இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ever Wondered Why Airplanes Are White In Color

Ever Wondered Why Airplanes Are White In Color? take a look on here.
Subscribe Newsletter