நெருக்கமாக பழகியும் திருமணம் செய்யாமல் பிரிந்த நடிகர், நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

புகழ், பணம், அந்தஸ்து, நட்சத்திரம் என என்ன கூறிக் கொண்டாலும், அவர்களுக்கும் உணர்வுகள், சொந்த குணாதிசயங்கள் இன்பம், துன்பம் என அனைத்தும் இருக்க தான் செய்யும். அந்த வகையில் காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் பிரிந்த நடிகர், நடிகையர் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

பிரபலங்களுக்கு பின் இருக்கும் அந்தரங்க கருப்பு பக்கங்கள்!!!

1960-களில் தொடங்கி நேற்று வரை இந்த பட்டியல் நீடிக்கிறது. பல ஜாம்பவான்களின் பெயரும் கூட இந்த பட்டியலில் அடிப்படுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா மொழி பிரபலங்களும் இந்த சூழலை சந்தித்துள்ளனர். சிலர் நிச்சயம் வரை சென்றும் கூட மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
த்ரிஷா - ராணா

த்ரிஷா - ராணா

சென்னைக்கு வந்தால் எனக்கு த்ரிஷா வீட்டிற்கு மட்டும் தான் வழி தெரியும் என மேடையிலேயே கூறினார் ராணா. இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படாததால் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.

த்ரிஷா - வருன் மணியன்

த்ரிஷா - வருன் மணியன்

இதற்கு பின்னர் தான் த்ரிஷா வருண் மணியனுக்கு நிச்சயம் ஆனாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நிச்சயமும் திருமணம் வரை செல்லாமல் தடைப்பட்டு விட்டது. த்ரிஷாவும் மீண்டும் நடிப்பு பாதைக்கு திரும்பிவிட்டார்.

பிரபு - குஷ்பு

பிரபு - குஷ்பு

அட இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்குமே என ரசிகர்களே விரும்பியவர்கள் இவர்கள். ஆனால், பிரபு ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆயினும் இவர்கள் மத்தியில் காதல் இருந்தது என பல கிசு கிசுக்கள் 90-களில் பரவின.

சிம்பு - நயன்

சிம்பு - நயன்

உதட்டோடு, உதடு பதித்து வெளியான படத்தில் உச்சத்திற்கு சென்று அமர்ந்தது இவர்களது காதல் காவியம். ஓகே கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என பார்த்தல். சட்டென்று பிரிந்துவிட்டார்கள்.

ஹன்சிகா - சிம்பு

ஹன்சிகா - சிம்பு

இது சிம்புவின் இரண்டாம் இன்னிங்க்ஸ். ஆனால், இதுவும் தோல்வியில் தான் முடிந்தது. பார்டி ஒன்றில் இறுக்கமாக கட்டியனைத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. வாலு துவங்கும் போது காதலில் இருந்தனர். வாலு இழுத்து இழுப்பில் உறவு முறிந்துவிட்டது.

நயன்தாரா - பிரபுதேவா

நயன்தாரா - பிரபுதேவா

சிம்புவை பிரிந்த சோகத்தில் இருந்த நயனும், மகனின் இறப்பின் காரணமாக சோகத்தில் இருந்த பிரபு தேவாவும். வில்லு பட படப்பிடிப்புன் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி நெருக்கமாகினர். மும்பையில் இவர்கள் ஒன்றாக இருந்தனர் என்றும் செய்திகள் பல வந்தன. ஆனால், இந்த உறவும் பாதியிலேயே முறிந்து மீண்டும் சினிமாக்குள் முழுவீச்சில் இறங்கிவிட்டார் நயன்.

ராஜ் கபூர் - நர்கீஸ்

ராஜ் கபூர் - நர்கீஸ்

பாலிவுட்டின் திறமையான நடிகராக திகழ்ந்தவர் ராஜ் கபூர், நர்கீஸ் பாலிவுட்டின் அழகு தேவதையாக வர்ணிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் இருந்தது என்றும், ராஜ் கபூர் மீது எழுந்த கசப்பான எண்ணத்தால் நர்கீஸ் பிரிந்துவிட்டார். இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை எனவும் அன்றைய செய்திகளில் கூறப்பட்டது.

மதுபாலா - திலிப் குமார்

மதுபாலா - திலிப் குமார்

மதுபாலா - திலிப் குமார் இருவருக்கும் நிச்சயம் கூட செய்யப்பட்டது. ஆனால், திலிப் குமாரின் ஈகோவின் காரணத்தால் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் பிரிந்துவிட்டனர் என கூறப்படுகிறது.

சஞ்சய் தத் - மாதுரி தீட்சித்

சஞ்சய் தத் - மாதுரி தீட்சித்

90-களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். "சாஜன்" (Saajan) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும், காதல் மலர்ந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டு ஜெயில் சென்றதால் இவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது.

அக்ஷய் குமார் - ஷில்பா ஷெட்டி

அக்ஷய் குமார் - ஷில்பா ஷெட்டி

இவர்கள் இருவரும் இனைந்து நிறைய படங்கள் நடித்துள்ளனர். இதனாலேயே இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது என கூறப்பட்டது. ஆனால், ட்வின்கில் கன்னா உடனும், தன்னுடனும் என இருவரிடமும் அக்ஷய் நெருக்கம் காண்பிப்பது தெரிந்து ஷில்பா குட்பை சொல்லிவிட்டார் என பாலிவுட்டில் அன்று செய்திகள் கசிந்தன.

சல்மான் கான் - ஐஸ்வர்யாராய்

சல்மான் கான் - ஐஸ்வர்யாராய்

பலரும் அறிந்த பிரபலமான காதல் இது. சஞ்சய் லீலா படத்தின் படப்பிடிப்பின் போது தான் இவர்கள் இருவர் மத்தியில் காதல் பூத்ததாம். 1999-2001 வரை மட்டுமே இவர்களது காதல் உறவு நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கரிஷ்மா கபூர் - அபிஷேக் பச்சன்

கரிஷ்மா கபூர் - அபிஷேக் பச்சன்

இவர்கள் இருவருக்கும் அமிதாப்பின் 60வது பிறந்தநாளின் போது நிச்சயம் கூட செய்யப்பட்டது. இதன் பிறகும் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஹ்ரித்திக் ரோஷன் - கரீன கபூர்

ஹ்ரித்திக் ரோஷன் - கரீன கபூர்

பிரிந்த மனைவி சூசன் உடன் டேட்டிங் செய்துக் கொண்டிருந்த போதே கரீனா உடனும் காதல் காத்தாடி விட்டுள்ளார் ஹ்ரித்திக். ஆனால், மிக குறுகிய காலகட்டத்தில் இவர்கள் பிரிந்துவிட்டனர்.

ஷாஹித் கபூர் - கரீனா கபூர்

ஷாஹித் கபூர் - கரீனா கபூர்

காபி வித் கரன் எனும் நிகழ்ச்சியிலேயே ஷாஹித்தை விரட்டி காதலித்ததாக கரீனா கூறியிருந்தார். "ஜப் வி மெட்" படத்தின் படபிடிப்பின் துவக்கத்தில் இருந்த காதல், முடிவின் போது முறிந்து போனாது.

பிபாஷாபாசு - ஜான் ஆபிரகாம்

பிபாஷாபாசு - ஜான் ஆபிரகாம்

பாலிவுட்டின் ஹாட்டான ஜோடியாக திகழ்ந்தவர்கள் இவர்கள். மாடலிங் செய்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இருந்தே இவர்கள் நண்பர்களாக இருந்து காதலித்தவர்கள் திடீரென உறவை முறித்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Could Not Marry Their Love

Celebrities Who Could Not Marry Their Love, take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter