சூது விளையாடிய போது பாண்டவர்களுக்கு கண்ணன் உதவாதது ஏன்?

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதத்தில் கண்ணன் தர்மம் நிலைக்க, அதர்மம் அழிய வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாண்டவர்களுக்கு துணை நின்றவன். கண்ணன் நினைத்திருந்தால் சூதை தடுத்து அல்லது சூதின் போது பாண்டவர்களுக்கு உதவி அவர்கள் சூதில் சகுனியின் சூழ்ச்சிக்கு முன் தோற்காமல் செய்திருக்க முடியும். ஆனால் ஏன் கண்ணன் அவ்வாறு செய்யவில்லை?

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

இந்த கேள்வி பலருக்கும் மகாபாரதம் படிக்கும் போதும், காணும் போதும் எழலாம். ஆம், இவ்வாறு சூதின் போதே பாண்டவர்களுக்கு கண்ணன் உதவியிருந்தால் மகாபாரதத்தின் குருஷேத்திர போர் நடந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது கர்ணனும் கூட உயிரோடு இருந்திருப்பான். ஏன் அனைவரும் கூட ஒருவேளை ஒன்று சேர்ந்திருக்கலாம் அல்லவா?

ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!

நமது கர்மாவுக்கு ஏற்ப தான் நமது செயல்பாடுகளும், விளைவுகளும் இருக்கும் அதுதான் மகாபாரதத்திலும் நடந்தது. அந்த காரணத்தினால் தான் கண்ணன் பாண்டவர்களுக்கு சூதின் போது உதவவில்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வனவாசத்தில் பாண்டவர்கள்

வனவாசத்தில் பாண்டவர்கள்

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் வாழ்ந்து வந்தனர். ஓர் நாள் ஓய்வாக அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கண்ணனை பற்றிய பேச்சு எழுந்தது. கண்ணன் கருணைக் கடல், எளியவருக்கு உதவும் மனமுடையவன். தீமை எங்கு நடந்தாலும் அவன் பொறுத்திருக்க மாட்டான். என அனைவரும் மகிழ்ந்து பேசி வந்தனர்.

பீமனின் கேள்விகள்

பீமனின் கேள்விகள்

அப்போது தான் கண்ணனை பற்றி சில கேள்விகளை பீமன் எழுப்பினான். கண்ணன் கருணை கடல் தான், தீனரட்சகன் தான் ஏழ்மையில் அனைவருக்கும் உதபுவன். ஆனால் சிலருக்கு மட்டுமே உதவுகிறான் அது ஏன்? நமக்கு சூதில் உதவாத கண்ணன், பாஞ்சாலிக்கு மட்டும் உதவியது ஏன்? என்று தனது கேள்விகளை எழுப்பினான்.

சகாதேவன் பதில்

சகாதேவன் பதில்

பாண்டவர்களில் சகாதேவனே கண்ணனை முற்றிலும் அறிந்தவன் ஆவான். சகுனி சூதுக்கு அழைத்த போது நாம் கண்ணனின் உதவியை நாடவில்லை. அழைத்தால் நமக்கு இழுக்கு ஏற்படுமோ என்று அஞ்சினோம். போரில் வீரமுடைய நமக்கு சூதில் வீரம் இல்லையோ என்று உலகம் பழிக்கும் என்ற அச்சம் நம்முள் இருந்தது என்று சகாதேவன் கூறினான்.

வறட்டு கௌரவும்

வறட்டு கௌரவும்

நாம் அவ்வாறு கருதாமல், வறட்டு கெளரவம் இன்றி கண்ணனின் உதவியை முதலே நாடியிருந்தால் நாம் சூதில் தோற்றிருக்க மாட்டோம் என்று பீமன் எழுப்பிய கேள்விக்கு தனது பதிலை கூறினான் சகாதேவன்.

பாஞ்சாலிக்கு உதவி

பாஞ்சாலிக்கு உதவி

பாஞ்சாலி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுப் போதும், தனது மானம் பறிபோய் கொண்டிருந்த நிலையிலும் கூட கைகளை மேலே உயர்த்தி, கண்ணா, கண்ணா என்று வணங்கி அவன் மீது நம்பிக்கை கொண்டிருந்தால். அதன் பயனாகவே கண்ணன் பாஞ்சாலிக்கு உதவினான். கண்ணன் தன்னை நம்புவோரை எப்போதும் கைவிடுவதில்லை என்று மேலும் சகாதேவன் கூறினான்.

நாம் செய்த தவறு

நாம் செய்த தவறு

நாம் மான உணர்வினால் செய்த தவறின் பயனாக தான் வனவாசம் வந்துள்ளோம். அவரவர் கர்மா என்பது எவராலும் மாற்றியமைக்க முடியாதது என்று சகாதேவன் தனது பதிலை முடித்த போது, அனைவரும் ஒருமனதாக அந்த கருத்தை வரவேற்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Why Did Not Krishna Helped Pandavas During Gambling

Do you know why krishna never came forward to help pandavas during gambling? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter