உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க சில விசித்திரமான உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல பகுதிகளில் எத்தனையோ வெரைட்டியான உணவுகள் கிடைக்கின்றன. அப்படி ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் உணவுகளில் சில விசித்திரமானவையாகவும் இருக்கும்.

உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!!

அதில் உலகின் சில பகுதியில் உள்ள மக்கள் சிலந்தியை வறுத்து சாப்பிடுவார்கள் மற்றும் சில பகுதியில் வாழும் மக்கள் காளையின் விதைப்பைகளை வறுத்து சாப்பிடுவார்கள்.

நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள்!

என்ன இதைக் கேட்கும் போதே உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா? ஆனால் இதைப் போன்று பல விசித்திரமான உணவுகள் உலகில் உள்ளன. மேலும் அவை அனைத்தும் பிரபலமான உணவாகவும், பல மக்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் உள்ளது.

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான 10 உணவுகள்!!!

சரி, இப்போது அப்படி உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க சில விசித்திரமான உணவுகள் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபுகு (Fugu) - ஜப்பான்

ஃபுகு (Fugu) - ஜப்பான்

ஃபுகு என்பது ஒரு ஜப்பானிய பப்பர் மீன். இந்த மீனில் 30 மனிதர்களைக் கொல்லக்கூடிய அளவில் விஷயமானது நிறைந்திருக்கும். இந்த மீனானது பல வருட அனுபவம் கொண்டவர்களால் பலவாறு சமைக்கப்படும். ஏனெனில் இதனை சமைக்கும் போது, அதில் சிறிது தவறு நேர்ந்தாலும், அதனை சாப்பிடுவோர் முடிவை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சவால் நிறைந்த உணவை சாப்பிட ஆசைப்பட்டால், அக்டோபர் முதல் மார்ச் மாத காலத்தில் ஜப்பான் செல்லுங்கள்.

சிலந்தி ப்ரை - கம்போடியா

சிலந்தி ப்ரை - கம்போடியா

கம்போடியாவில் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு பிரபலமான உணவுப் பொருள் தான் சிலந்தி ப்ரை. அதிலும் இதனை பூண்டு எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து விற்கப்படும். எனவே கம்போடியா சென்றால் இதை சுவைத்துப் பாருங்கள்.

ப்ரேரீ ஆய்ஸ்டர்கள் (Prairie Oysters) - கனடா

ப்ரேரீ ஆய்ஸ்டர்கள் (Prairie Oysters) - கனடா

ப்ரேரீ ஆஸ்டர்கள் என்பவை காளையின் விதைப்பையைக் கொண்டு சமைத்து பரிமாறப்படும் ஒரு டிஷ். இது கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருளும் கூட.

Pic: doctorsreview

பால்ட் (Balut) - பிலிப்பைன்ஸ்

பால்ட் (Balut) - பிலிப்பைன்ஸ்

பொதுவாக முட்டையானது உலகம் முழுவதும் அனைவரும் சாப்பிடப்படும் ஒரு உணவுப் பொருள். ஆனால் பிலிப்பைன்ஸில் குஞ்சு பொறிக்கும் நிலையில் உள்ள வாத்து முட்டையானது வேக வைத்து சாப்பிடப்படும். அதிலும் மிளகாய், பூண்டு, வினிகர் போன்றவற்றை தூவி பரிமாறப்படும் என்றால் பாருங்களேன்.

ஹாக்கிஸ் (Haggis) - ஸ்காட்லாந்து

ஹாக்கிஸ் (Haggis) - ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்தின் ஒரு தேசிய உணவாக இந்த ஹக்கிஸ் என்னும் டிஷ்ஷை சொல்லலாம். ஏனெனில் இந்த டிஷ்ஷானது செம்மறி ஆட்டின் இறைப்பையில் வெங்காயம், ஓட்ஸ், மசாலாக்கள் மற்றும் ஸ்டாக் ஆகியவற்றை ஸ்டஃப் செய்து பரிமாறப்படும்.

சனக்ஜி (Sannakji) - தென் கொரியா

சனக்ஜி (Sannakji) - தென் கொரியா

இது ஒரு தென் கொரிய உணவு. இந்த உணவானது, குட்டி ஆக்டோபஸை சமைக்காமல் துண்டுகளாக்கி, அதன் மேல் எள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறப்படும்.

எஸ்காமோல்ஸ் (Escamoles) - மெக்ஸிகோ

எஸ்காமோல்ஸ் (Escamoles) - மெக்ஸிகோ

மெக்ஸிகோவில் மிகவும் பிரபலமான எஸ்காமோல்ஸ் என்னும் டிஷ்ஷானது எறும்பின் கூட்டுப்புழுக்கள் கொண்டு செய்யப்படும். அதிலும் இந்த கூட்டுப்புழுக்களானது வெண்ணெய் சேர்த்து பொன்னறிமாக வறுத்து பரிமாறப்படுமாம்.

Pic: cracked.com

ஹக்ர்ல் (Hakarl) - ஐஸ்லாந்து

ஹக்ர்ல் (Hakarl) - ஐஸ்லாந்து

பொதுவாக மீனே மிகவும் துர்நாற்றம் வீசும். அதிலும் அழுகிய சுறா மீன் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அத்தகைய அழுகிய சுறா மீனை ஐஸ்லாந்தில் சமைத்து சாப்பிடுவார்களாம். அதிலும் க்ரீன்லாந்து சுறா அல்லது மற்ற ஸ்லீப்பர் சுறாக்களை ஒரு குறிப்பிட்ட நொதித்தல் முறை மூலம் 4-5 மாதங்கள் உலர வைத்து, பின் சாப்பிடுவார்களாம். (அதாவது நாம் கருவாடு சாப்பிடுற மாதிரி, அவங்க இந்த சுறா மீனை சாப்பிடுறாங்க...)

Pic: list25.com

வறுத்த மூளை சாண்ட்விச் - அமெரிக்கா

வறுத்த மூளை சாண்ட்விச் - அமெரிக்கா

அமெரிக்காவின் ஓஹியோ நதி பள்ளத்தாக்கில் இந்த வறுத்த மூளை சாண்ட்விச் கிடைக்கும். அதிலும் பன்றி அல்லது கன்றுக்குட்டிகளின் மூளையை நன்கு வறுத்து சாண்ட்விச் செய்து பரிமாறப்படுமாம்.

காசு மர்சு (Casu Marzu) - இத்தாலி

காசு மர்சு (Casu Marzu) - இத்தாலி

செம்மறி ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸை நன்கு அழுகச் செய்து, அதில் சிறு பூச்சி லார்வாக்கள் இருக்கும் படி சாப்பிடுவார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Top 10 Weirdest Foods From Around the World

    Want to challenge your palate? There is an entire world of pungent, bizarre or just plain scary foods out there to sample. Here are some of the weirdest and most intriguing eats from all corners of the globe.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more