இன்டர்போல் வலைவீசித் தேடும் உலகின் டாப் 10 அதிபயங்கரவாதிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும், நல்ல குணம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள், அமெரிக்காவில் இருந்து நமது இந்தியா வரையிலும் கூட தீய எண்ணம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். ஏதோ சில காரணத்தினால் தீவிரவாதிகளின் குடியிருப்பு போல இஸ்லாமிய நாடுகள் சித்தரிக்கப்பட்டுவிட்டன.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

தீவிரவாதிகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறாகள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இதில், குற்றம் செய்த வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களை வழிநடத்துவது மற்றும் ஓர் அங்கமாய் இருப்பது போன்ற காரணங்களினால் உலகின் டாப் 10 அதிபயங்கரவாதிகளாக பட்டியலிடப்பட்டிருக்கும் நபர்களை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்....

"நிழல் உலக தாதா" தாவூத் இப்ராஹிமின் மறுப்பக்கம் - திடுக்கிடும் தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அய்மன் அல்-ஜவாஹிரி

அய்மன் அல்-ஜவாஹிரி

அய்மன் அல்-ஜவாஹிரி, எகிப்து இஸ்லாமிக் ஜிஹாத்தின் தலைவர். இவர் அல்-கொய்தா அமைப்புடன் இணைந்திருப்பவர். முன்பு, பின்லேடனுக்கு துணையாக இருந்ததாக கூறுகிறார்கள். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தகர்த்தல் தாக்குதலில் இவருக்கும் முக்கிய பங்குண்டு.

ஒமித் தாஹ்விளி (Omid Tahvili)

ஒமித் தாஹ்விளி (Omid Tahvili)

ஒமித் தாஹ்விளி , பெர்ஷியன் குற்ற பிரிவினரின் தலைவர். இவர் கனடாவில் இருக்கிறார். இந்த குழுவினர் உலகளாவிய இயக்கங்களுடன் இணைப்பில் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு கனடா சிறையில் இருந்து தப்பித்துவிட்டார். அமெரிக்காவின் பண மோசடி வழக்குகளில் இவருக்கு பெரும் பங்கிருக்கிறது.

ஃபேலிசியன் கபுகா (Felicien Kabuga)

ஃபேலிசியன் கபுகா (Felicien Kabuga)

ஃபேலிசியன் கபுகா, தீவிரவாத இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளி ஆவர். இப்போது கென்யாவில் பதுங்கியிருப்பதாக கூறுகிறார்கள். நூறு நாட்கள் இவரது குழுவினர் செய்த தீவிரவாத செயலில் எட்டு லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜேம்ஸ் பல்கர்

ஜேம்ஸ் பல்கர்

ஜேம்ஸ் பல்கர் (எ) ஒய்ட்டீ, பாஸ்டன் குற்ற அமைப்பை சேர்ந்தவர். போதை கடத்தல் மற்றும் கொலை குற்ற வழக்குகளில் தேடப்படுபவர். இதுவரை 19 கொலை குற்றத்திற்கு மேல் செய்துள்ளார். மற்றும் எண்ணற்ற பண மோசடி, கொள்ளை வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. கடந்த முப்பது வருடங்களாக போலீசாரிடம் இருந்து தப்பித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ 18 மில்லியன் பவுண்ட்ஸ்.

அலீம்ஸான் (Alimzhan Tokhtajhounov)

அலீம்ஸான் (Alimzhan Tokhtajhounov)

அலீம்ஸான், ரஷ்ய குற்றவாளி. பல குற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த காரணத்திற்காக இவரை போலிஸ் தேடி வருகிறது. சட்ட விரோதமாக வெடிப்பொருள் விற்பது, போதை பொருள் கடத்தல் / விற்பது, வாகனங்களை திருடி விற்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஜோசப் கோனி

ஜோசப் கோனி

ஜோசப் கோனி, உகாண்டாவை சேர்ந்த ஒரு கொரில்லா படை தலைவர். எதிர்ப்பு இராணுவத்தை நடத்தி வருகிறார். மனிதர்களுக்கு எதிராக பல நாச வேலைகளில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. போர் குற்றங்களும் இவர் மீது இருக்கின்றன.

செம்யோன் (Semion Mogilevich

செம்யோன் (Semion Mogilevich

உலகின் மிகவும் மோசமான குற்றவாளியாக கருதப்படுபவர் செம்யோன். உலகெங்கிலும் பரவியிருக்கும் ரஷ்யாவின் பெரும்பாலான மாஃபியாக்களின் தலைவன் இவர் என தெரியவருகிறது.

தாவூத் இப்ராஹிம்

தாவூத் இப்ராஹிம்

இந்தியவில் இருக்கும் குற்ற பிரிவு குழுக்களின் தலைவனாக திகழ்பவர். டி-கம்பெனி இவருடையது என கூறப்படுகிறது. குற்றக் காரியங்களில் ஈடுபடவே ஓர் குழுவை நடத்தி வருகிறார். கொலை, கடத்தல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் போதை விற்பனை செய்து வருகிறார். அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாய் நிறைய தகவல்கள் கூறுகின்றன. இன்டர்போல் தேடும் உலகின் பயங்கர குற்றவாளிகளில் இவரும் ஒருவர்.

மேட்டியோ மெச்சினா டினாரோ (Matteo Messina Denaro)

மேட்டியோ மெச்சினா டினாரோ (Matteo Messina Denaro)

மேட்டியோ, இத்தாலியின் கோசா நோச்டிரா எனும் மாஃபியா கும்பலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். இவரை பற்றிய காமிக் புத்தகம் இத்தாலியில் பிரபலம் என கூறப்படுகிறது. கடந்த இருபது வருடங்களாக, குற்ற செயல்களில் ஈடுபடுவதாய் தகவல்கள் தெரியவருகிறது.

ஜொக்கன் குஸ்மென் (Joaquín Guzmán)

ஜொக்கன் குஸ்மென் (Joaquín Guzmán)

உலகின் மிகவும் மோசமான குற்றவாளியாக கருதப்படுபவர் ஜொக்கன் குஸ்மென். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தும் கூட்டத்தின் தலைவன். கடத்துவது, குறிவைத்துக் கொலை செய்வது, பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களில் தேடப்பட்டு வருகிறார்.மெக்ஸிகோவில் கடந்த 2003ஆம் ஆண்டு டாப் போதை பொருள் கடத்தல்காரராக இருந்தார். எண்ணற்ற கொலை வழக்குகள் இவர் மீது இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

TOP 10 MOST WANTED PEOPLE IN THE WORLD

Do you know about the top ten most wanted people in the world? take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter