பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு வினோதமான, விசித்திரமான சடங்குகள் நிறைய இருக்கின்றன.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் உலகின் சில விசித்திரமான சடங்குகள்!!!

ஆனால், பெண்களின் உடலமைப்பை கலாச்சாரம், பாரம்பரியம், அவர்களின் பாதுகாப்பு என்று கூறி மிகவும் கொடூரமான முறையில் சடங்கு என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இவை அவர்களை உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்படைய செய்கிறது என்பது தான் உண்மை.

அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!

இதில் சிலவன இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது தான் சோகத்தின் உச்சக்கட்டம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முர்சி லிப் ப்ளேட்டிங் (Mursi Lip Plating)

முர்சி லிப் ப்ளேட்டிங் (Mursi Lip Plating)

உலகின் மிகவும் பழமையான பெண் உடல் மாற்றமைப்பு சடங்குகளில் முர்சி லிப் ப்ளேட்டிங்கும் ஒன்றாக இருந்து வருகிறது. ஏறத்தாழ 8700 B.C-ல் இருந்து இந்த சடங்கு முறை நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சடங்கு முறையில் பெண்களின் இதழ் ஓர் வட்ட ப்ளேட் பயன்படுத்தி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Image Courtesy

முர்சி லிப் ப்ளேட்டிங் (Mursi Lip Plating)

முர்சி லிப் ப்ளேட்டிங் (Mursi Lip Plating)

திருமணம் ஆகும் பெண்களுக்கு அல்லது இளம் பெண்களுக்கு இவ்வாறு செய்யப்படுகிறது. இதை வாழ்நாள் முழுக்க அணிய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை எனிலும், கணவனுக்கு உணவு பரிமாறும் போது, சடங்கு சம்பிரதாயங்கள் நிகழும் போது அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

Image Courtesy

கான் நெக் ஸ்ட்ரெச்சிங் (Kayan Neck Streching)

கான் நெக் ஸ்ட்ரெச்சிங் (Kayan Neck Streching)

(அன்றைய பர்மா) இன்றைய மியான்மர் பகுதியில் பெண்கள் பின்பற்றும் ஓர் வினோத சடங்கு இது. கழுத்தில் வளையங்கள் அணிந்து நீட்டிப்பு செய்வது. பித்தளை வளையங்களை இவர்கள் அணிகிறார்கள்.

Image Courtesy

கான் நெக் ஸ்ட்ரெச்சிங் (Kayan Neck Streching)

கான் நெக் ஸ்ட்ரெச்சிங் (Kayan Neck Streching)

ஓர் பெண் தனது ஐந்து வயதில் இருந்து இதை அணிந்து வர வேண்டும். ஏறத்தாழ 10 வது வயதில் இருந்து மியான்மர் பெண்கள் இதை தங்களது ஓர் உடல் உறுப்பாகவே உணர தொடங்குகிறார்கள். இதை அணியவேண்டும் என்பது கலாச்சார முறையாக மியான்மரில் இருந்து வருகிறது.

Image Courtesy

சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding)

சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding)

இந்த சடங்கு மிகவும் வலி மிகுந்ததாக இருந்து வருகிறது. கால் பாதத்தை பிணைப்பு செய்வது என்பது மிகவும் கொடூரமானது. கொஞ்சம் சிறிய அளவு ஷூவை சில மணிநேரம் அணிவதே வலி மிகுந்தது. ஆனால், இதை இவர்கள் சடங்கு என்ற பெயரில் எப்போதும் அணிகிறார்கள். இந்த சடங்கு முறை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

Image Courtesy

சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding)

சீனர்களின் கால் பிணைப்பு (Chinese Foot Binding)

இது வாழ்நாள் முழுக்க அணிய வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வருகிறது. இதை அணிவதால் பெண்களின் கால்கள் பொம்மையின் கால்களை போல மாறிவிடுகிறது. இது அவர்களை மனதளவிலும், உடலளவிலும் மிகவும் புண்படுத்துகிறது. சீனாவின் டாங் மற்றும் சாங் இராஜ்ஜியத்தின் காலக்கட்டத்தில் இருந்து இது பின்பற்றப்படுவதாக கருதப்படுகிறது.

Image Courtesy

விக்டோரியன் டைட் லேசிங் (Victorian Tight Lacing)

விக்டோரியன் டைட் லேசிங் (Victorian Tight Lacing)

பெண்களின் உடலமைப்பை மாற்றும் முறைகளில் மிகவும் பிரபலமான ஒன்று இந்த விக்டோரியன் டைட் லேசிங். பெண்களின் உடலமைப்பு ஹவர் கிளாஸ் போல தோற்றமளிக்க இந்த முறை பின்பற்றபடுகிறது.

Image Courtesy

விக்டோரியன் டைட் லேசிங் (Victorian Tight Lacing)

விக்டோரியன் டைட் லேசிங் (Victorian Tight Lacing)

பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக பின்பற்றப்பட்டது. இவ்வாறு உடை அணிந்து பல மணிநேரம் இருக்கும் போது பலமுறை பெண்கள் மயக்கம் அடைவதுண்டு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை சார்ந்த ஆங்கில திரைப்படங்களில் நீங்கள் இவ்வாறான உடை அணியும் முறையை நன்றாக காணலாம்.

காமரூன் மார்பக மாற்றமைப்பு (Cameroonian Breast Ironing)

காமரூன் மார்பக மாற்றமைப்பு (Cameroonian Breast Ironing)

காமரூன் பகுதியில் பெண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அவமானமாக கருதப்பட்டு இஸ்திரி செய்வது போல பெண்களின் மார்பகங்களில் சூடு வைக்கப்படுகிறது. இளம் வயதில் பெண்களுக்கு மார்பகம் வளரும் போதே இவ்வாறு செய்ய தொடங்கிவிடுகிறார்கள். இது பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இது அந்த பெண்களின் மனநிலையை மிகவும் பாதிக்கிறது என்பது தான் உண்மை.

மென்த்தவாய் பற்கள் கூர்மைப் படுத்துதல் (Mentawai Teeth Cheseling)

மென்த்தவாய் பற்கள் கூர்மைப் படுத்துதல் (Mentawai Teeth Cheseling)

மென்த்தவாய் எனும் தீவு இந்தோனேசியா அருகில் இருக்கும் ஓர் சிறிய தீவு. இங்கு பெண்களின் பற்களை கூர்மையாக்குவது என்பது ஓர் சடங்காக நடத்தப்பட்டு வருகிறது. ஓர் பெண் பருவமடையும் போதே அவளது பற்கள் கூர்மையாக்கப்படுகிறது. இது அவர்களை அழகாக காட்டுகிறது என்று அந்த தீவில் இருக்கும் மக்கள் கருதுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    The Most Extreme Female Body Modification Practices From Around The World

    The Most Extreme Female Body Modification Practices From Around The World
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more