For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறப்பு குறித்த சில சுவாரஸ்யமான மற்றும் வினோதமான உண்மைகள்!!!

By Maha
|

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் உள்ளது. அந்த இறப்பு ஒருவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நேரலாம். ஒருவருக்கு தான் எப்போது இறக்கப் போகிறோம் என்ற உண்மை தெரிந்துவிட்டால், அவர் வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாகிவிடும். ஆனால் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப்போகிறான் என்பதை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்துவதாக சொல்கிறது.

நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??

இறந்த பின்பு என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது. அதேப் போல் அந்த இறப்பு குறித்த சில சுவாரஸ்யமான மற்றம் வினோதமான தகவல்கள் குறித்தும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட்ஸ்கை அந்த இறப்பு குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களைக் கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்து பாருங்களேன்...

பூலோக மங்கையை திருமணம் செய்துக்கொண்டு அவஸ்தைப்பட்ட எமனின் நகைச்சுவையான கதை!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

இறந்து மூன்று நாட்களுக்குள், உடலில் உள்ள செரிமான நொதிகள் உங்களை உண்ண ஆரம்பித்துவிடும்.

உண்மை #2

உண்மை #2

இறந்த உடலைப் புதைக்கும் பழக்கமானது சுமார் 350,000 வருடங்களுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கலாம்.

உண்மை #3

உண்மை #3

மனித சரித்திரத்திலேயே சுமார் 100 பில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்றால் பாருங்கள்.

உண்மை #4

உண்மை #4

நியூயார்க் நகரில் கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

உண்மை #5

உண்மை #5

சுமார் 153,000 மக்கள், அவர்களின் பிறந்தநாளன்று இறக்கின்றனர்.

உண்மை #6

உண்மை #6

உலகில் ஆண்டு தோறும் 7,000-த்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவர்களின் கோழிக்கிறுக்கல் கையெழுத்தால் இறக்கின்றனர்.

உண்மை #7

உண்மை #7

வலக்கை பழக்கம் உள்ளவர்களை விட இடக்கை பழக்கம் உள்ளவர்கள் 3 வருடத்திற்கு முன்பே இறப்பை சந்திக்கிறார்கள்.

உண்மை #8

உண்மை #8

ஒருவர் இறக்கும் போது, அவரின் கேட்கும் திறன் தான் இறுதில் மடியும்.

உண்மை #9

உண்மை #9

அமெரிக்காவில் ஒவ்வொரு மணிநேரமும் குறைந்தது ஒருவர் மது அருந்தி வண்டி ஓட்டி கொல்லப்படுகிறார்.

உண்மை #10

உண்மை #10

ஒவ்வொரு 40 நொடிக்கும், யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

உண்மை #11

உண்மை #11

உலகிலேயே இதய நோயால் தான் ஏராளமான மக்கள் இறக்கின்றனர்.

உண்மை #12

உண்மை #12

உலகில் இளம் தலைமுறையினர் அதிகம் இறப்பதற்கு முதன்மையான காரணம் கார் விபத்துக்கள் தானாம்.

உண்மை #13

உண்மை #13

1923-ல் பிறந்த 80 சதவீத சோவியத் ஆண்கள் இரண்டாம் உலகப் போரின் போது இறந்தனர்.

உண்மை #14

உண்மை #14

நம் உடலில் ஒவ்வொரு நிமிடமும் 35 மில்லியன் செல்கள் இறக்கின்றன.

உண்மை #15

உண்மை #15

உலகில் ஒவ்வொரு 90 நொடிக்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது இறக்கிறாள்.

உண்மை #16

உண்மை #16

ஒருவர் இறந்த பின் கைவிரல் நகங்கள் மற்றும் கால் விரல் நகங்கள் வளர்ச்சியடையாது. உண்மையில் அவற்றைச் சுற்றியுள்ள தோல் வறட்சியடைந்து, சுருங்கி வளர்ந்திருப்பது போல் காட்சியளிக்கின்றன.

உண்மை #17

உண்மை #17

மனிதன் இறந்து நான்கு நாட்களுக்குப் பின் வீங்கி பலூன் போன்று இருப்பதற்கு காரணம், தன்னழிவினால் வாயுக்கள் மற்றும் நீர்மங்கள் வெளியேற்றப்படுவதால் தான்.

உண்மை #18

உண்மை #18

ஒவ்வொரு வருடமும் 55 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதில் 9.5 மில்லியன் மக்கள் சீனர்கள் ஆவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange And Disturbing Facts About Death That Will Surprise You

At any possible moment we can die… think about it. The scary part is we never know when it’s going to happen, or even more frightening… how it will happen. Check out these interesting and disturbing facts about death.
Desktop Bottom Promotion