இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களின் கண்களில் விரலை மட்டுமில்லாது துப்பாக்கியையும் விட்டு ஆட்டியவர். இரண்டாம் உலகப் போரின் போது அடிமைத் தனத்தை இந்தியா மட்டுமில்லாது, உலகைவிட்டே ஒழிக்க வேண்டும் என்று தனது பயணத்தை 1945-ல் தொடங்கிய போஸ் மரமமான முறையில் காணாமல் போனார்.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

ஒரு பக்கம் அவர் இறந்துவிட்டார் என்ற செய்துகள் பரவினாலும், மறுபக்கம் அவரது ஆதரவாளர்கள் அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று ஊர்ஜிதமாக கூறினார். அன்று தொடங்கிய மர்மம் 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!

இன்றைய இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், இந்தியாவின் விடுதலைக்கும், ஆங்கிலேயரின் பயத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டவரே அவர் தான் என்பது மறைக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது என்று சுபாஷ் அவர்களின் ஆதரபாளர்கள் கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

உலக அரசியலில் இவரது மரணம் அவிழ்க்க முடியாத முடிச்சாக நீடித்து வருகிறது. 70 ஆண்டுகள் கழித்து தூசித்தட்டப்பட்டிருக்கும் அவரது மரணம் குறித்த மர்மங்களுக்கு கூடிய விரைவில் பதில்கள் கிடைக்குமென தெரிய வருகிறது. இனி, இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸ் அவர்களை குறித்து பார்க்கலாம்...

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுதந்திர தாகம்

சுதந்திர தாகம்

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

ராணுவ உதவி

ராணுவ உதவி

ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்த பின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார் சுபாஷ் சந்திர போஸ். உதவிகளும் தயாரானது.

இந்திய தேசிய ராணுவம்

இந்திய தேசிய ராணுவம்

இந்திய தேசிய ராணுவத்தை துவக்கி, ஆங்கிலேயர்களின் கண்களில் பயத்தை விதைத்தார் சுபாஷ் சந்திர போஸ். இவரை இந்திய விடுதலை வரலாற்றில் வீரத்திற்கும், துணிச்சலுக்கும் இலக்கணமாய் திகழ்ந்தவர் என்று கூறுவது மிகையாகாது.

இரண்டாம் உலக போர்

இரண்டாம் உலக போர்

இரண்டாம் உலக போரின் போது ஆங்கிலேயர்களின் படைகள் மிகவும் வலுவிழக்க நேர்ந்தது. ஹிட்லரின் படையுடனான மோதலின் போது தங்களது படையின் பெரும்பகுதியை இழந்தது. அதே சமயத்தில் இந்தியாவிலும், இந்திய தேசிய ராணுவத்திடம் ஏற்பட்ட மோதலில் பாதிப்புகளை சந்தித்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

படை பலம் குறைந்தது

படை பலம் குறைந்தது

நமது நாட்டில் இந்திய தேசிய ராணுவத்தின் வீரியம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதை அடக்க பிரிட்டிஷிலிருந்து படை கொண்டு வரலாம் என்றால், ஏற்கனவே அங்கு இரண்டாம் உலக போரின் காரணமாகவும், ஹிட்லரின் படை காரணமாகவும் பாதுகாப்பு அதிகம் தேவைப்பட்டது. அதனால், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் படை பலம் குறைய ஆரம்பித்தது.

பயம் நிலவியது

பயம் நிலவியது

ஒருவேளை பிரிட்டிஷிலிருந்து படையை இந்தியாவிற்கு கொண்டு வந்தால், தலைமை இடமான பிரிட்டிஷில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயமும், படையைக் கொண்டு வராமல் இருந்தால், இந்திய தேசிய ராணுவத்திடம் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் ஆங்கிலேயர் மத்தியில் நிலவியது.

அடிமைத்தனத்தை ஒழிக்க முடிவு

அடிமைத்தனத்தை ஒழிக்க முடிவு

இந்தியா மட்டுமில்லாது, உலகெங்கிலும் அடிமைப்பட்டு இருக்கும் நாடுகளும் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இருந்தது. அதனால், அடிமைத்தனத்திற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெற முடிவு செய்தார்.

மர்மம் நீடிக்கும் பயணம்

மர்மம் நீடிக்கும் பயணம்

இந்திய தேசிய ராணுவத்தின் விரிவாக்கம் மற்றும் பல முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த பயணம் மேற்கொண்ட சுபாஷ் சந்திர போஸின் இறுதி பயணம் இன்று வரை மர்மம் நீடிக்கும் பயணமாகவே இருக்கின்றது.

ரஷ்யாவில் போஸ்

ரஷ்யாவில் போஸ்

விமான விபத்தில் போஸ் இறந்துவிட்டதாக நேரு அவர்களின் அன்றைய அரசு குறிப்பிடினும். சுபாஷ் சந்திர போஸ் ரஷ்யாவில் இருப்பதாக பலர் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும். அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடு தான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மத்தை அறிய மக்களிடம் அலையை ஏற்படுத்தியது. அதுவே நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுகமாக தூண்டியது.

Dr. S. ராதாகிருஷ்ணன்

Dr. S. ராதாகிருஷ்ணன்

மேலும் திடுக்கிட வைக்கும் விஷயம் இந்தியாவின் ரஷ்ய தூதர் Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதாகும். இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட ஒரு தலைவர் என்ன ஆனார், எங்கு போனார் என்று ஒரு தகவலும் இன்றி, இன்று வரை மர்மமாக இருப்பது அதிர்ச்சியான விஷயமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்