For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகள்!!!

By Ashok CR
|

ஆண்களும் பெண்களும் சமம் என நாம் அனைவரும் கூறுவோம்; குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் இதனை திரும்பி திரும்பி கூற வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு இணையான மரியாதையையும் அந்தஸ்தையும் பெற வேண்டி பெண்கள் இதை ஒவ்வொரு முறையும் கூற வேண்டியுள்ளது.

பற்பல காரணங்களால் ஆண்களை விட கூடுதல் மரியாதையை பெறும் தகுதியை பெண்கள் பெற்றுள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பல மன ரீதியான வேற்றுமைகள் உள்ளது.

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக யோசிக்க முடியாது. அதற்கு காரணம் அவர்களின் மன ரீதியான அமைப்பு மாறுபடும். அப்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகளை பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடர்பாடல்

தொடர்பாடல்

ஆண்களை விட பெண்களே சிறப்பாக தொடர்பாடலில் ஈடுபடுவார்கள். மூளையில் பிரச்சனையை தீர்க்கும் பகுதியான ஃப்ரண்டல் லோப் ஆண்களை விட பெண்களுக்கே பெரிதாக உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. அதனால் பிரச்சனைகளை தீர்த்து, சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு காணும் வல்லமை பெண்களுக்கு உள்ளது.

லாஜிக்

லாஜிக்

பெண்களை விட ஆண்களே தர்க்கரீதியாக வேலை செய்வார்கள். ஆண்களுக்கு தான் தர்க்க ரீதியான சிந்தனை இருக்கும். பெண்களோ தங்களது உணர்ச்சிகளையும் உள்ளே கொண்டு வருவார்கள். இதனால் தர்க்கரீதியாக சிந்தனை போதியளவில் இல்லாமல் போவதால், அவர்களால் சரியாக முடிவெடுக்க முடியாது. ஆண்கள் தர்க்கரீதியாக இல்லையென்றாலும் கூட தங்களின் உணர்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.

வலி உணர்ச்சி

வலி உணர்ச்சி

ஆண்களின் மூளைக்கு வலியின் சகிப்புத்தன்மை பெண்களை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பது பொதுவாக கூறப்படும் ஒன்றே. இருப்பினும் பெண்களின் மூளை வலியின் சகிப்புத்தன்மையை பெருமளவில் அதிகரிக்கும். உதாரணத்திற்கு, பிரசவத்தின் போது பெண்கள் தான் அதிக வலியை தாங்கிக் கொள்கிறார்கள். ஆண் மூளையால் அந்த அளவிலான வலியை இன்று வரை தாங்க முடிவதில்லை என கூறப்படுகிறது.

உணர்ச்சி ரீதியான எண்ணங்கள்

உணர்ச்சி ரீதியான எண்ணங்கள்

ஆண் மூளையை விட பெண்களின் மூளை உணர்ச்சி ரீதியான நினைவுகளை அதிக அளவிலில் நினைவில் வைத்துக் கொள்ளும். அதற்கு காரணம் பெண்களின் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். பெண்களின் மூளையில் உள்ள உணர்ச்சி ரீதியான மையம் முனைப்புடன் செயல்படும். ஆண்கள் தொடர்ந்து வேலை செய்வதால் உணர்ச்சி ரீதியான எண்ணங்களுக்கு அவர்கள் இடம் கொடுப்பதில்லை.

ஆண் மற்றும் பெண்ணின் ரசாயனம்

ஆண் மற்றும் பெண்ணின் ரசாயனம்

ஆண்களுடன் பெண்கள் சுலபமாக ஒன்றி விடுவார்கள். ஆனால் ஆண்களுக்கோ கால தாமதமாகும். அது மட்டும் இல்லாமல் உறவுகள் வளர வளர அதன் மீது ஆண்களுக்கு அலுப்புத் தட்டி விடும். அவர்களால் கையாள முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அதனை சொதப்பி விடுவார்கள். பின்னர் மீண்டும் அதை நோக்கி ஓடுவார்கள். ஆனால் பெண்களோ உறவின் மீது அட்டையாக ஒட்டிக் கொள்வார்கள். அதை விட்டு அவர்களால் வரவும் முடியாது.

கோப நிலைப்பாடு

கோப நிலைப்பாடு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உளவியல் ரீதியான வேறுபாடுகள் பல உள்ளன. ஆண்களுக்கு மூக்கின் மீது கோபம் வருவதில்லை; ஆனால் கோபம் வந்து விட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாது. சில ஆண்கள் எந்த நேரத்திலும் தங்களின் கோபத்தை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் ஆவேசப்படுவார்கள். ஆனால் பல பெண்களுக்கு மூக்கின் மீது கோபம் வரும். ஆனால் ஆவேசப்பட மாட்டார்கள்.

அனுசரிப்பு

அனுசரிப்பு

நாங்கள் ஏற்கனவே கூறியதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உணர்ச்சி ரீதியான வேறுபாடுகள் பல உள்ளன. மாற்றங்கள் என வரும் போது ஆண்கள் வலிமையானவர்கள். பெண்களை காட்டிலும் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது ஆண்களே. பெண்களுக்கு இதற்கு அதிக கால தாமதம் ஏற்படும். மேலும் சுலபத்தில் மன அழுத்தத்தையும் பெறுவார்கள். மாறாக தங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை மாற்றவே பெண்கள் நினைப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Psychological Differences Between Male And Female

psychological differences between man and woman are many. There are mental & emotional differences between male and female.
Desktop Bottom Promotion