ஆஞ்சநேயர் மந்திரங்கள் தரும் அற்புதமான பயன்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ராமபிரானின் தீவிர பக்தனாக விளங்கிய பழம்பெரும் கவியான துளசிதாஸ் அவர்களால் இயற்றப்பட்டதே ஆஞ்சநேயர் மந்திரங்கள். இது 40 கவிதை செய்யுளை கொண்டுள்ளது. அதனால் தான் 'சாலிசா' என ஹிந்தி மொழில் கூறுகிறார்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களில் சில வகையான இறைதன்மையுள்ள ரகசியங்கள் அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

இறைதன்மை கொண்டுள்ள இந்த 40 செய்யுள்களை, வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஓதலாம். சில முறைகள் ஓதினால் போதும், அதன் வரிகள் உங்கள் நினைவில் ஓதிந்து விடும். ஆஞ்சநேயர் மந்திரங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களுடன் தொடர்பில் உள்ள சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னியில் உள்ள புராணக்கதை

ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னியில் உள்ள புராணக்கதை

ஒரு முறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார். உண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி. இதன் விளைவாக, அவுரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ். சிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான செய்யுளை அவர் இயற்றினார் என நம்பப்படுகிறது.

 எப்போது ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்?

எப்போது ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்?

காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்

சனியின் தாக்கங்களை குறைக்க

சனியின் தாக்கங்களை குறைக்க

புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்; குறிப்பாக சனிக்கிழமைகளில். இதனால் அமைதியும் வளமும் பெருகும்.

தீய சக்திகளை திசை திருப்ப

தீய சக்திகளை திசை திருப்ப

ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள். அது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும்.

மன்னிப்பு கோரி வணங்குதல்

மன்னிப்பு கோரி வணங்குதல்

நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்கிறோம். ஹிந்து மத கொள்கைகளின் படி, நம் பாவங்களினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கி தவிக்கிறோம். ஆஞ்சநேயர் மந்திரங்களில் ஆரம்ப செய்யுள்களை ஓதினால், சென்ற ஜென்மத்திலும் தற்போதைய ஜென்மத்திலும் செய்த பாவங்கள் நீங்கும்.

தடைகளை அழிக்க

தடைகளை அழிக்க

விநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர். முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.

மன அழுத்தத்தை போக்க

மன அழுத்தத்தை போக்க

காலை எழுந்த முதல் காரியமாக ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அன்றைய நாள் சிறப்பாக செல்லும். நீங்கள் அமைதியாக இருக்க உதவும். அதே போல் வாழ்க்கையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அமையும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஜெபித்தால், ஒருவருக்கு ஆன்மீக ஆசீர்வாதம் கிடைக்கும்.

பாதுகாப்பான பயணத்திற்கு

பாதுகாப்பான பயணத்திற்கு

சில கார்களில் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை கண்டிருப்பீர்கள். சரி அவரின் சிலையை எதற்கு வாகனங்களில் வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? விபத்துக்களை தவிர்த்து, வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள ஆஞ்சநேயர் உதவுகிறார் என நம்பப்படுகிறது.

நம் ஆசைகளை நிறைவேற்ற

நம் ஆசைகளை நிறைவேற்ற

ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதுவதால் கிடைக்கும் பயன்கள் எண்ணிலடங்கானவை. தூய்மையான ஆன்மீகத்துடனும் கவனத்துடனும் இந்த 40 செய்யுள்களையும் நீங்கள் படித்தால், உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். இந்த மந்திரங்களை தொடர்ந்து படித்து வந்தால், கடவுளின் ஆசியும் அனுகிரஹமும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

ஆன்மீக அறிவை பெறுவதற்கு

ஆன்மீக அறிவை பெறுவதற்கு

ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் பக்தர்களுக்கு ஆன்மீக அறிவு கிடைக்கும். ஆன்மீகத்தில் சரியான பாதையை நோக்கி செல்பவர்களுக்கு ஆஞ்சநேயர் சரியான பாதையை காண்பிப்பார் என நம்பப்படுகிறது. அதே போல் தங்கள் மனதை கட்டுப்படுத்துவும் உதவுவார் என நம்பப்படுகிறது.

அறிவையும் பலத்தையும் பெற

அறிவையும் பலத்தையும் பெற

ஆஞ்சநேயர் மந்திரங்களை அதிக சத்தத்துடன் படித்தால், நம்மை சுற்றி நேர்மறையான ஆற்றல் திறன்கள் அதிகமான சுற்றும். அதனால் நாள் முழுவதும் நீங்கள் உற்ச்சாகத்துடன் இருக்கலாம். இது சோர்வு மற்றும் தாமதமாக்கலை போக்கி ஒருவரை திறமையானவராக மாற்றும். தலைவலி, தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்ற சிறிய பிரச்சனைகளையும் கூட இது குணமாக்கும்.

ஒருவரை சீர்படுத்த

ஒருவரை சீர்படுத்த

கெட்ட சகவாசம் அல்லது ஏதேனும் பழக்கத்திற்கு அடிமையானால், ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அவர்களை சீர்திருத்த அது உதவும். மந்திரங்கள் படிப்பதால் ஏற்படும் ஆற்றல் திறன் பக்தனின் இதயத்தை நேர்மறையான எண்ணம் மற்றும் வலுவோடு நிறைவாக்கும்.

ஒற்றுமையை மேம்படுத்தும்

ஒற்றுமையை மேம்படுத்தும்

உண்மையான பக்தி மற்றும் அர்பணிப்புடன் ஆஞ்சநேயர் மந்திரங்களை தினமும் படித்து வந்தால், அனைத்து வித கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் நீங்கி, வாழ்க்கையில் ஒருமித்த கருத்து, மனநிறைவு, சந்தோஷம் மற்றும் அமைதியும் நிலவும். உறவில் நீடிக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, நல்லிணக்கத்தை கொண்டு வரும்.

எதிர்மறை ஆற்றல் திறன்களை நீக்கும்

எதிர்மறை ஆற்றல் திறன்களை நீக்கும்

ஆஞ்சநேயர் மந்திரங்களில் "பூத் பிசாஸ் நிகாத் நஹி ஆவேன், மகாவீர் ஜப் நாம் சுனாவே" என்று ஒரு செய்யுள் உள்ளது. அதற்கு அர்த்தம் - ஆஞ்சநேயர் பெயரை சொல்லி, ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miraculous Benefits Of Hanuman Chalisa

Read on to know some unknown facts and benefits related to the Hanuman Chalisa… Let’s take a look at some other interesting beliefs associated with the Hanuman Chalisa…
Story first published: Tuesday, February 10, 2015, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter