பலரும் அறிந்திராத முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய சரித்திர தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஔரங்கசீப், முகலாய பேரரசின் முக்கியமான பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியனருக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்தார் ஔரங்கசீப். இவரை "ஆலம்கீர்" என்றும் அழைத்து வந்தனர். பாரசீக மொழியில் ஆலம்கீர் என்றால் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என்று பொருள்.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பெரும் ஆட்சி செய்துவந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் என்ற பெருமைக்குரியவர் ஔரங்கசீப். முகலாய மன்னர்களில் அக்பரும், ஔரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஔரங்கசீப்பின் ஆட்சி பரப்பளவு

ஔரங்கசீப்பின் ஆட்சி பரப்பளவு

ஔரங்கசீப் தன் ஆட்சி பரப்பளவு கந்தகாரில் தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினர். இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது என கூறப்படுகிறது.

சிவாஜியின் சமக்காலத்தில் ஔரங்கசீப்

சிவாஜியின் சமக்காலத்தில் ஔரங்கசீப்

இவரது சமகாலத்தில் தான் சிவாஜி ஓர் பலமிக்க மராட்டிய பேரரசை தக்காணத்தில் வழிநடத்தி வந்தார். ஔரங்கசீப் இராஜாவாக இருந்த காலத்தில் தான் சிவாஜி உயிரிழந்தார்.

சிவாஜியின் இறப்பிற்கு பின் ஔரங்கசீப்

சிவாஜியின் இறப்பிற்கு பின் ஔரங்கசீப்

மராட்டிய சிவாஜி இறந்த பிறகு, மராட்டிய நாட்டை பிடித்தது மட்டுமில்லாது, சிவாஜியின் மகனான சம்பாஜியையும் சிறைப் பிடித்தார் ஔரங்கசீப் .

இராசாராமோடு போர்

இராசாராமோடு போர்

மேலும் சிவாஜியின் மகன் சம்பாஜியை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் இருந்த சில கோட்டைகளையும் கைப்பற்றினார் ஔரங்கசீப்.

செஞ்சிக்கு தப்பிய இராசாராம்

செஞ்சிக்கு தப்பிய இராசாராம்

இந்த போரின் போது தப்பித்து செஞ்சிக்கு சென்றார் இராசாராம். இது போன்று, மாராட்டியரோடு ஏறத்தாழ தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக போரிட்டு வந்துள்ளார் ஔரங்கசீப்.

தக்காண பீடபூமி

தக்காண பீடபூமி

தென்னிந்தியாவின் நிலப் பகுதிகளை தக்காண பீடபூமி என்று கூறுவதுண்டு. வட இந்தியா, தென்னிந்தியாவை பிரிக்கும் விந்திய மலைத்தொடரை தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தது ஔரங்கசீப்பின் காலத்தில்.

செஞ்சியை வென்ற ஔரங்கசீப்பின் தளபதி

செஞ்சியை வென்ற ஔரங்கசீப்பின் தளபதி

ஔரங்கசீப்பின் தளபதி சூல்பிகார் கான் என்பவர் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். இதனால் அகம் மகிழ்ந்து போன ஔரங்கசீப், அந்த பகுதியின் ஆளுநராக (நவாப்) சூல்பிகார் கானையே நியமித்தார்.

ஐதராபாத் தலைநகர்

ஐதராபாத் தலைநகர்

முகலாயப் படைகள் வெற்றி கொண்ட பகுதிகளுக்கு தலைநகராய் ஐதராபாத்தை அறிவித்தார் ஔரங்கசீப். இவருக்கு கீழ் அதிபராக இருந்து ஐதராபாத்தில் ஆட்சி செய்தவர்களே ஐதராபாத் நிசாம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஔரங்கசீப்பின் பெருமை

ஔரங்கசீப்பின் பெருமை

இவ்வாறு சிறப்பான முறையில் ஆட்சி மேலாண்மை செய்து வந்ததன் காரணமாகவே ஔரங்கசீப் பேரரசால் இந்தியாவின் பெரும் பகுதியை வெற்றிக் கண்டு ஆட்சி செய்ய முடிந்தது. இதனால் தான் இவர் இந்தியாவை ஒருங்கிணைத்த முதல் பேரரசர் என்ற வரலாற்று புகழுக்கு சொந்தக்காரர் ஆனார்.

மிகவும் எளிமையானவர் ஔரங்கசீப்

மிகவும் எளிமையானவர் ஔரங்கசீப்

பல வரலாற்று ஆசிரியர்கள் ஔரங்கசீப் மிகவும் எளிமையான அரசர். இவர் செல்வத்திற்கு மயங்கியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலும் வெள்ளை உடைதான் அணிவாராம். இவரது தலைப்பாகையில் கூட ஒரே ஒரு கல் தான் பதிக்கப்பட்டிருந்தது எனவும் சில வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. தனக்கென மாளிகை கூட காட்டியதில்லையாம் ஔரங்கசீப்.

ஔரங்கசீப்பின் உடல்வாகு

ஔரங்கசீப்பின் உடல்வாகு

இவர் மிகவும் உயரமானவர் எல்லாம் இல்லை, ஔரங்கசீப்பின் மூக்கு கொஞ்சம் பெரியதாக இருக்குமாம், கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு கொண்டவர் தான் ஔரங்கசீப் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எப்போதுமே எளிமையாக தான் இருப்பாராம் ஔரங்கசீப்.

ஔரங்கசீப்பின் இறப்பு

ஔரங்கசீப்பின் இறப்பு

1707ம் ஆண்டு மார்ச் மாதம் ஓர் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீப்பின் உயிர் பிரிந்தது.

ஔரங்கசீப்பின் உயில்

ஔரங்கசீப்பின் உயில்

"தன் கையால் தொப்பி செய்து விற்ற பணத்தில் தன் உடல் மீது போர்த்த வேண்டிய கஃபன் துணியை வாங்குங்கள். என் கையால் எழுதிய திருக்குர்ஆன் எழுத்து பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு தானமாய் வழங்குங்கள். எந்த ஆடம்பரமும் இன்றி என் உடலை அருகில் இருக்கும் இடுகாட்டில் அடக்கம் செய்யுங்கள்" என்று ஔரங்கசீப் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Lesser Known Facts About Emperor Aurangazeb

Do you know about the Lesser Known Facts About Emperor Aurangazeb? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter