For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரிந்ததும், தெரியாததும்- அக்டோபர் 3!

|

வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாலும், அரிய கண்டுப்பிடிப்புகளாலும், துயர சம்பவங்களாலும் நிறைந்துள்ளன. எண்ணற்ற போர், அவ்வப்போது விடுதலை, வெடிகுண்டு தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் என மனிதர்களின் வாழ்க்கையை பல வகையில் சிதைவு ஏற்படுத்திய தருணங்கள் ஏராளம்.

அந்த வகையில் இன்றைய தினமான அக்டோபர் 3-ல் வரலாற்றில் என்னெவெல்லாம் நடந்திருக்கிறது. அவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்னென்ன? பாதிப்புகள் என்னென்ன? என்று இனிக் காணலாம்.....

முக்கிய குறிப்புகள்

  • கொரியா நாடு உருவாக்கம்
  • யூகொஸ்லாவிய இராச்சியம் அமைக்கப்பட்டது
  • ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.
  • விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருள்
  • அட்லாண்டிஸ் விண்ணோடம் முதலாவது விண்வெளிப் பயணம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிமு 2333

கிமு 2333

கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது. கொரியா என்பது கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். 1948 இல் கொரியா பிரிந்து வட கொரியா, தென்கொரியா என்று ஆனது

1739

1739

ரஷ்ய-துருக்கி போர், 1736-1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1929

1929

சேர்பியா, குரொவேசியா, சிலவேனியா என்று மூன்று பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதற்கு யூகொஸ்லாவிய இராச்சியம் எனப் பெயரிடப்பட்டது.

1932

1932

ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது. 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.

1935

1935

இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.

1942

1942

செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் விண்வெளியை அடைந்த இதுவே முதல் முறையாகும்.

1952

1952

ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1962

1962

சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.

1985

1985

அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. அட்லாண்டிஸ் கடைசியாக சென்ற பயணம் வரை கணக்கிட்டு பார்த்ததில், 306 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 4,848 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் 125,935,769 மைல்கள் (202,673,974 km) தூரம் பயணித்துள்ளது.

Image Courtesy

1990

1990

ஜெர்மனியின் கிழக்கும், மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜெர்மனியுடன் இணைந்தது.

2013

2013

இத்தாலியில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

நடிகர் சத்தியராஜ் மற்றும் மலேசிய எழுத்தாளர் முரு. சொ. நாச்சியப்பன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

History on October 3

Incidents and Inventions happened on October 3 in history, Take a look.
Desktop Bottom Promotion