மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை தனியாளாக உருவாக்கிய சத்திரபதி சிவாஜி பற்றிய அரிய தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

சத்திரபதி சிவாஜி என வரலாற்றில் புகழ்பெற்று அழைக்கப்படும் சிவாஜி ராஜே போஸ்லே சஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்கு பிறந்த இரண்டாவது மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், தக்காண சுல்தானியர்கள் மற்றும் மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்தவர் தான் சிவாஜியின் தந்தை சஹாஜி.

ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், மொகலாய சாம்ராஜ்யத்திற்கும் அன்னிய ஆட்சிக்கும் நேரடி சவால் விட தற்போதைய மகாராஸ்டிரா மாநிலத்தின் வலிமையான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வர பெரும் பங்குவகித்தார்.

பிரிட்டிஷ் பேரரசால் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்கவதிலும், ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை உருவாக்குவதிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது.

இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது. இனி, சிவாஜியின் கீழ் மராட்டிய சாம்ராஜ்ஜியம் உருவானதை பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாகத்திற்கு இளம் வயதிலேயே வந்த சிவாஜி

நிர்வாகத்திற்கு இளம் வயதிலேயே வந்த சிவாஜி

ஜிஜாபாய் அன்னையின் கட்டுப்பாட்டின் கீழ், பூனே உடைமைகளை நிர்வகிக்க இளம் வயதிலேயே சிவாஜியை நியமித்தார் சஹாஜி. நிர்வாகத்தில் சிவாஜிக்கு உதவியாக இருக்க சிறிய அமைச்சர்கள் குழுவையும் நியமித்தார் சஹாஜி.

அமைச்சரவை குழு

அமைச்சரவை குழு

சிவாஜிக்கு உதவியாக இருந்த அமைச்சரவையில், ஷாம்ராவ் நீல்கந்த் பேஷ்வாவாகவும் (பிரதம மந்திரி), பாலகிருஷ்ண பாண்ட் முஜூம்தார் ஆகவும், ரகுநாத் பல்லால் சப்னீசாகவும் , சோனோபண்ட் தாபீரா கவும், சாத்தியப்பட்ட வகையில் தாதோஜி கொண்டியோ ஆலோசகராகவும் இருந்தனர். இந்த மந்திரிகள் தவிர, இராணுவ தளபதிகள் கன்ஹோஜி ஜிட்ஹே மற்றும் பாஜி பாசல்கார் ஆகியோர் சிவாஜி மகாராஜாவுக்கு இராணுவ கலைகளில் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார்கள்.

அன்னையின் பாடங்கள்

அன்னையின் பாடங்கள்

தாய்நாட்டின் மீதும், மக்கள் மீதும் உறுதியான பற்று கொள்ளும் வகையில் ஜிஜாபாய் கருத்தான பாடங்களை கூறி, நம்பிக்கை இழக்காத வண்ணம் சிவாஜியை உருவாக்கினார். மற்றும் சஹாஜியின் அரசியம் சுதந்திரத்திற்கான முயற்சிகளில் இருந்தும் நிறைய பாடம் கற்றுக்கொண்டார் சிவாஜி.

சஹாஜியின் மரணம்

சஹாஜியின் மரணம்

ஒரு சிறிய பேரரசின் சுதந்திரமான ஓர் இளவரசராக சிவாஜி தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். சிவாஜி மகாராஜ் எனும் பட்டத்தை சஹாஜியின் மரணத்திற்கு பின்னரே பயன்படுத்தினர்.

சிவாஜியின் தனித்திறன்

சிவாஜியின் தனித்திறன்

தனித்துவமான இராணுவ திறமைகள், சமஸ்கிருதம், இந்து பண்பாடு, கலை சிறப்புக்கள், யுத்த தந்திரங்கள் மற்றும் அமைதியான காலத்தில் இராஜ்ஜியத்தை நிர்வாகித்தல் போன்றவற்றை கற்று தேர்ந்தார் சிவாஜி.

தாரக மந்திரம்

தாரக மந்திரம்

விடுதலை மற்றும் சுதந்திரம் சிவாஜிக்கு இலட்சியமாக கற்பிக்கப்பட்டது. இது அவருக்கு பெரும் ஊக்கமாக இருந்தது.

சதியால் குடும்பத்தை இழந்த சிவாஜி

சதியால் குடும்பத்தை இழந்த சிவாஜி

அரசர் நிஜாம்ஷாவால் நடத்தப்பட்ட ஓர் துரோக செயலினால், தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தார் சிவாஜி.

புராணம் வடிவமைத்த பண்பு

புராணம் வடிவமைத்த பண்பு

சொந்த கலாச்சாரத்தின் மீதான அவரது பற்று, பொறுப்பு, இந்திய புராணங்களான மகாபாரதம், இராமயணத்தில் எடுத்து கூறப்பட்ட கதைகள் போன்றவை சிவாஜியின் பண்பினை வடிவமைத்தன.

சிவாஜியின் கருணை குணம்

சிவாஜியின் கருணை குணம்

மற்ற மதம் மீதான அவரது சகிப்புத்தன்மை, பெண்கள் மீதான இறக்க குணம், ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் சிவாஜி.சஹாஜியின் இலக்கு, ஜிஜாபாயின் ஊக்கம் அமைச்சரவை அளித்த தைரியம் போன்றவை சிவாஜியை ஓர் வலிமையான மராட்டிய இராஜ்ஜியத்தை உருவாக்க உறுதுணையாக இருந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About The Brave King Chathrapathi Shivaji

Do you know about the facts about the brave king Chathrapathi Shivaji? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter