இந்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தை பற்றிய உண்மையான தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

டிஜிட்டல் இந்தியா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், டிஜிட்டல் இந்தியா திட்டம் என்றால் என்ன, இது எப்படி இயங்க போகிறது, இதனால் மக்கள் அடைய போகும் நன்மைகள் என்ன?

ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

டிஜிட்டல் இந்தியா தட்டத்தின் மூலம் இந்தியாவின் நிலை எப்படி உயரும்? கல்வி, மருத்துவம், வங்கி போன்றவற்றில் டிஜிட்டல் இந்தியா எப்படி உதவபோகிறது? போன்ற கேள்விகளே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.

பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை பற்றிய தகவல்கள்!!

எனவே, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன?

டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன?

இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக இயங்குவதே டிஜிட்டல் இந்தியா ஆகும். மக்களுக்கான வேலைகள் சுலபமாக, விரைவாக நடத்திமுடிக்க தொடங்கப்பட்ட திட்டம் தான் இது.

டிஜிட்டல் இந்தியாவின் நன்மைகள் என்ன?

டிஜிட்டல் இந்தியாவின் நன்மைகள் என்ன?

1. லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

2. வேலைகள் விரைவாக நடத்தி முடிக்கப்படும்.

3. காகித வேலைகளை குறைக்க முடியும். இதனால், வீணாக மரங்களை வெட்ட தேவையில்லை.

2019-ல் டிஜிட்டல் இந்தியா எப்படி இருக்கும்?

2019-ல் டிஜிட்டல் இந்தியா எப்படி இருக்கும்?

2.5 லட்சம் கிராமங்களில் இன்டர்நெட் வசதி இருக்கும்., 4 லட்சம் பொது இண்டெர்நெட் ஆக்செஸ் இடங்கள் இருக்கும். 2.5 லட்சம் பள்ளிகளில், அனைத்து பல்கலைகழகங்கள், மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் வை-பை ஹாட் ஸ்போட் வசதி இருக்கும்.

ஐ.டி யில் இந்தியா மேலோங்கும்

ஐ.டி யில் இந்தியா மேலோங்கும்

ஈ-அரசாங்கம், ஈ- சேவைகளினால், உடல்நலம், கல்வி, வங்கி போன்றவையில் ஐ.டி மேலோங்கும்.

டிஜிட்டல் லாக்கர் நன்மைகள்

டிஜிட்டல் லாக்கர் நன்மைகள்

டிஜிட்டல் லாக்கர் என்பது இந்திய குடிமக்கள் அனைவரம் அவர்களது தகவல்களை, சொந்த விபரங்களை, முக்கிய கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஒன்றாகும். ஆதார் உதவியின் மூலம் இதை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒரு அரசாங்கள் செயல்களுக்கும் குடிமக்களின் ஆதாரத்தை எளிதாக சரி பார்த்துவிட முடியும்.

டிஜிட்டல் லாக்கர் உபயோகப்படுத்த என்ன வேண்டும்?

டிஜிட்டல் லாக்கர் உபயோகப்படுத்த என்ன வேண்டும்?

இந்த டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்த உங்களது ஆதார் என்னும், அலைபேசி என்னும் மட்டுமே போதும்.

டிஜிட்டல் இந்தியாவின் நோக்கம் என்ன?

டிஜிட்டல் இந்தியாவின் நோக்கம் என்ன?

இந்தியாவை உலக நாடுகளில் முன்னிலைப்படுத்த டிஜிட்டல் இந்திய உதவும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொகை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொகை

ரிலையன்ஸ், டாடா, விப்ரோ, பிர்லா, பாரதி ஏர்டெல் போன்ற நிறைய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்களிப்பு அளித்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Digital India Initiative

Do you know about the facts about Digital India Initiative? read here.
Subscribe Newsletter