பொதுவான கனவுகளும்... அதன் திகிலூட்டும் அர்த்தங்களும்...

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

கனவுகள் என்பது உலகளாவிய அளவில் அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படும் ஒரு நிலையே. பெரும்பாலானவர்களுக்கு சராசரியாக வாரம் ஒரு முறையாவது கனவு வரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?

இருப்பினும், உங்களுக்காக ரகசியங்களை காக்கும் ஆழ்மனதின் உணர்ச்சி ரீதியான கட்டுப்பாட்டின் ஒரு வடிவமே கனவு என கனவு பெயர்ப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பலருக்கும் வருகிற பொதுவான கனவுகள் பற்றியும் அவை என்ன குறிக்கிறது என்பதைப் பற்றியும் இனி பார்க்கலாம்...

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

அன்றாட பிரச்சனைகள் மற்றும் குறைகளின் ஆழ்மனது மறுமொழியே கனவுகள் என பரவலாக நம்பப்படுகிறது. அது நிதி சார்ந்த பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் அல்லது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய, வரவேற்க முடியாத பிரச்சனைகளாக (புதிய ஊருக்கு குடி புகுதல் போன்றவை) என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சோதனைகள்

சோதனைகள்

அன்புக்குரியவரின் மரணம், துர்ச்சம்பவம், துக்கம் அல்லது குற்றம் போன்ற சில அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளால் இவ்வகையான கனவுகள் ஏற்படும். அதற்கு காரணம், சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தை உங்கள் ஆழ்மனது செயல்படுத்த முயற்சிக்கும்.

உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

மறுத்தல், தனிமை அல்லது தோல்வி பயம் போன்ற சில சக்திவாய்ந்த எதிர்மறை உணர்ச்சிகளும் கூட பல கனவுகளுக்கு காரணமாக உள்ளது. வரப்போகும் நேர்காணல் அல்லது வாகனம் ஓட்டும் சோதனை போன்ற சில எளிய காரணங்களால் அல்லது காதல் தோல்வி போன்ற சில பெரிய பிரச்சனைகளின் விளைவுகளால் ஏற்படக்கூடியது இத்தகைய கனவுகள்.

உடல் ரீதியான பாதிப்பு

உடல் ரீதியான பாதிப்பு

கனவுகளுக்கான முக்கிய காரணமாக உளவியல் ரீதியான காரணிகள் கூறப்பட்டாலும், உங்கள் தூக்கத்தின் மீது உங்கள் உடல் தாக்கத்தை ஏற்படுத்த பல்வேறு சூழ்நிலைகள் உள்ளது. உதாரணத்திற்கு, உடல் சுகவீனம் அல்லது மருந்து உண்ணுவதில் ஏற்படும் மாற்றம் போன்றவைகள் உடலியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி, தூங்கும் போது மூளை செயல்பாட்டை மாற்றும். நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பதும் கூட கனவுகளுக்கான காரணமாக இருக்கும்.

தீ கனவுகள்

தீ கனவுகள்

நீங்கள் தீயில் எறிவது போல் கனவு கண்டால், உங்கள் கோபம் அடிக்கடி எல்லையை மீறி போய் விடுகிறது என அர்த்தமாகும். ஒரு வீடு தீப்பிடித்து எரிவதை போல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை. ஆனால் எரியும் வீட்டில் நீங்கள் மாட்டிக் கொள்வதை போல் நீங்கள் கனவு கண்டால், வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை கையாள நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வைப் பெறுகிறீர்கள் என அர்த்தமாகும்.

நாய்களால் தாக்கப்படுதல்

நாய்களால் தாக்கப்படுதல்

மிக கொடூரமான நாய்களால் தாக்கப்படுவதை போல் கனவு கண்டால், கவனமாக இருங்கள்; நம்பிக்கையான தோழன் அல்லது குடும்ப உறுப்பினர் என நீங்கள் முழுவதுமாக நம்பி வந்தவர் உங்களை ஏமாற்றலாம். முதுகில் குத்து வாங்காமல் தடுக்க, உங்கள் நண்பர்கள் வட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டிய முக்கியத்துவத்தை இந்த கனவு வலியுறுத்தும்.

நோய் அல்லது மருத்துவ அவசரம் பற்றிய கனவு

நோய் அல்லது மருத்துவ அவசரம் பற்றிய கனவு

கனவு காண்பவரின் வாழ்க்கையில் தீமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் தெரியாத ஒன்றிற்காக பயப்படுவதை இந்த கனவு பிரதிபலிக்கும். நோய்வாய் படுவது அல்லது கொடிய நோயால் பாதிக்கப்படுவது பற்றிய ஆழ்மனது பயத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம். வாழ்க்கையைக் கொண்டாட முடியாமல் போவதாலும், ஒருவரின் வாழ்வில் உள்ள தவறான ஒன்றாலும் கூட இந்த கனவு ஏற்படலாம். வியாதியைப் பற்றி கனவு வந்தால், தனக்கு தெரியாமலேயே இருக்கும் தன் வியாதியைக் குறிக்கும் விதமாகவும் இருக்கும்.

துரத்தப்படுவதைப் போன்ற கனவு

துரத்தப்படுவதைப் போன்ற கனவு

பலருக்கும் வரக்கூடிய மிக பொதுவான கனவு என்றால் அது இதுவாக தான் இருக்க முடியும். மனிதர்களால், மிருகங்களால் அல்லது மறைப்பொருள் உயிரினங்களால் வேட்டையாடப்படுவது அல்லது தாக்கப்படுவது தான் இந்த கனவு. உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒன்றோடு எதிர்த்து போராட பயப்படும் உங்கள் உணர்வுகளைத் தான் இவ்வகையான கனவுகள் குறிக்கும். உங்கள் சொந்த வாழ்க்கையில், கடினமான சூழல்களை எதிர்த்து போராட முடியாததை தான் துரத்தப்படும் கனவுகள் பெரும்பாலும் குறிக்கும்.

விழும் கனவுகள்

விழும் கனவுகள்

பலருக்கும் இந்த கனவும் வந்திருக்கும் - மாடியில் இருந்து பூமியை நோக்கி உச்ச வேகத்தில் விழுதல். மறதிநிலையில் நழுவும் போது ஏற்படும் இரத்த கொதிப்பின் ஏற்ற இறக்கம், அல்லது சமநிலையை கட்டுப்படுத்தும் காதின் உள்ளே திரவத்தின் இயக்கம் ஆகிய சில காரணங்களால் இது ஏற்படுகிறது என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கீழே விழுவதற்கான கனவுகளின் அர்த்தங்கள் இவைகளை உட்படுத்தும் - கட்டுப்பாட்டை இழக்கும் பயம் மற்றும் உணர்ச்சி ரீதியான சமநிலையின்மை.

மரணம் பற்றிய கனவுகள்

மரணம் பற்றிய கனவுகள்

மரணத்தில் முடிகிற கனவுகளை பெறுவதும் பொதுவான ஒன்றே. ஆனால் அது மரணத்தையோ அல்லது கெட்ட நிகழ்வையோ குறிப்பதற்கான அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மரணத்தைப் பற்றிய கனவுகள் மறுமலர்ச்சியை குறிக்கலாம்; அதாவது உங்கள் வாழ்க்கையின் பழைய பகுதி நிறைவடைந்து, புதிய தொடக்கத்திற்கு வழி வகுப்பது.

இயற்கைப் பேரழிவுகள் பற்றிய கனவுகள்

இயற்கைப் பேரழிவுகள் பற்றிய கனவுகள்

வீடுகளையும் மரங்களையும் கிழித்து செல்லும் தீய சூறாவயில் நீங்கள் மாட்டிக்கொண்டதை போன்ற கனவுகளை காண்கிறீர்களா? இவ்வகையான கனவுகள், கனவு காண்பவர் பயத்தை அணுகும் உணர்ச்சியை குறிக்கும். வானிலை பொதுவாக கணிக்க முடியாமல் இருப்பதாலும், கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாலும், இக்கனவை காண்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டிருப்பார்கள்.

நிர்வாண கனவுகள்

நிர்வாண கனவுகள்

கனவில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கிறது, நீங்கள் மிகப்பெரிய பார்வையாளர்களின் கூட்டம் முன் நிற்கும் போதோ, அல்லது பெரிய பார்டி ஒன்றில் கலந்து கொள்ளும் போதோ, நீங்கள் நிர்வாணமாக இருப்பதை திடீரென உணர்ந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய கனவுகளை இரண்டு விதமாக பார்க்கலாம் - ஒன்று, வெளிப்படுத்துவதற்கு பயந்து உங்களுக்குளே சிலவற்றை மறைத்து வைத்து க்கொள்வது; மற்றொன்று, உங்கள் வலுவின்மையை அனைவரும் உங்கள் முகப்பின் மூலமாக தெரிந்து கொள்ளுதல்.

மூழ்கும் கனவுகள்

மூழ்கும் கனவுகள்

நீங்கள் உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கிறீர்கள் என்பதை தான் மூழ்கும் கனவுகள் குறிக்கும். அடக்கி வைத்திருந்த பிரச்சனைகள் மீண்டும் உங்களை முற்றுகையிடும். மூழ்கும் போது நீங்கள் மரணத்தை தழுவினால், அது உணர்ச்சி ரீதியான மறுபிறவியைக் குறிக்கும். மூழ்கிய போது உயிர் பிழைத்தால், பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் உறவு உயிர்ப்புடன் இருக்கும் என்பதை குறிக்கும்.

கட்டுப்பாட்டை இழக்கும் கார்

கட்டுப்பாட்டை இழக்கும் கார்

உங்கள் கார் கட்டுப்பாட்டை இழக்கும் போது நீங்கள் சக்கரங்களின் பின்னால் இருப்பதைப் போன்ற கனவுகளை கண்டால், உங்கள் வாழ்க்கை மிகவும் பரப்பரமாகவும், மிக மெதுவாக கட்டுப்பாட்டை இழப்பதாகவும் அர்த்தமாகும். எப்படி பரப்பரப்பை குறைக்கலாம், எப்படி அமைதியாக இருக்கலாம், காலை எழுந்திருக்கையில் அந்த நாளை எப்படி மகிழ்ச்சியுடன் நகர்த்தலாம் என ஆலோசனை செய்யுங்கள்.

பரீட்சையில் தோல்வி காண்பது

பரீட்சையில் தோல்வி காண்பது

பொதுவாக பரீட்சையில் தோல்வி காண்பது போல் மாணவர்கள் கனவு காண்பார்கள். நிஜ வாழ்க்கையில் பரீட்சைகள் மிகவும் அழுத்தத்தை தரக்கூடியவை. அவர்களின் ஆழ்மனதிற்கு இலக்காக அமைய இது போதாதா என்ன? பரீட்சைக்கு தயாராகாத படி கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை அது குறிக்கும்.

ஏமாற்றப்படும் கனவுகள்

ஏமாற்றப்படும் கனவுகள்

உங்கள் மனம் கவர்ந்தவரால் நீங்கள் ஏமாற்றப்படுவதை போல் கனவு கண்டால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. உங்கள் நெருக்கமானவரால் அல்லது குடும்ப உறுப்பினரால் அல்லது நண்பரால் புறக்கணிக்கப்படுதல் அல்லது பிரிந்து செல்லுதல் போன்றவற்றை பற்றியதே இந்த கனவுகள். அதற்கு காரணம் அவர்கள் வேறு ஏதோ ஒன்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள்.

காயம் ஏற்படுவதை போன்ற கனவுகள்

காயம் ஏற்படுவதை போன்ற கனவுகள்

கனவுகளில் ஏற்படும் காயங்களும் புண்களும், அது ஏற்படும் சூழ்நிலையை பொறுத்து ஏற்றத்தாழ்வை கொண்டிருக்கும். நிஜ வாழ்க்கையில் ஆதரவற்ற உணர்வை பெறுவதே கனவில் காயம் ஏற்படுவது குறிக்கும். அது உங்களால் உங்களுக்கே ஏற்பட்ட காயம் என்றால் உங்கள் சொந்த முயற்சிகளை தற்செயலாகவோ அல்லது வேறு எதனாலோ நீங்களே நாசப்படுத்தி விடுவீர்கள் என்ற பயத்தோடு தொடர்புடையது. வேறு யாரோ உங்களைக் காயப்படுத்துகிறார்கள் என்றால், நீங்கள் ஒதுக்கப்படுகிற உணர்வைப் பெறுகிற சூழலைக் குறிக்கும்.

முக்கியமான நிகழ்வுகளை மறப்பது போன்ற கனவுகள்

முக்கியமான நிகழ்வுகளை மறப்பது போன்ற கனவுகள்

மிக வேகமான வாழ்க்கையில் அதிக வாழ்க்கை அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு திருமணம், முக்கியமான சந்திப்பு அல்லது வேறு சில முக்கிய நிகழ்வுகளை மறப்பது போன்ற கனவுகள் ஏற்படும். அப்படி இருந்தாலும் கூட, இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தோற்று போதல் அல்லது எதிர்ப்பார்ப்பிற்கு இணையாக செயல்பட முடியாமல் போதலால் ஏற்படக்கூடிய கனவுகள் இவைகள். தோற்றுப் போவதைப் பற்றி எந்தளவிற்கு அடக்கப்பட்ட பதற்றமும் எதிர்மறையும் உள்ளது என்பதை இத்தகைய கனவுகளால் தெரியும் போது, அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

சிக்கிக் கொள்வதை போன்ற கனவுகள்

சிக்கிக் கொள்வதை போன்ற கனவுகள்

சிக்கிக் கொள்வதை போல் அல்லது நகர முடியாததை போல் கனவு வந்தால், ஒரு உறவில் அல்லது வேலையில் நீங்கள் எப்படி மாட்டிக் கொண்டீர்கள் என்பதை குறிக்கும். பயந்து சாகும் பதற்றம் என்ற நிலை உள்ளவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, அதில் மாட்டிக் கொண்டு விடுவோம் என பயப்படுவார்கள். அத்தகைய நபர்களுக்கு பொதுவாக ஏற்படும் கனவே இவைகள். உங்கள் ஆற்றல் வளத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போவதாலும் கூட இத்தகைய கனவுகள் ஏற்படலாம்.

பற்களை இழப்பதைப் போன்ற கனவுகள்

பற்களை இழப்பதைப் போன்ற கனவுகள்

இதுவும் கூட பொதுவாக ஏற்படக்கொடிய கனவுகளில் ஒன்றே. இதற்கும் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. பற்களை இழப்பது, தோற்றம் அல்லது வயது தொடர்பான சுய உணர்வை இழப்பதை குறிக்கும். அல்லது முகத்தை இழக்கும் பயத்தையும் கூட அது குறிக்கலாம். பற்களை இழக்கும் கனவுகளுக்கு உடல் ரீதியான விளக்கங்களும் உள்ளன: பற்களை அரைப்பவர்கள், அல்லது பற்கூச்சம் உடையவர்கள் இத்தகைய கனவுகளைப் பெறலாம்.

தொலைந்து போவதைப் பற்றிய கனவுகள்

தொலைந்து போவதைப் பற்றிய கனவுகள்

தொலைந்து போவதைப் பற்றியோ அல்லது தொலைந்தவரை கண்டுபிடிப்பதைப் பற்றியோ கனவு கண்டால் அவர் பதற்றம், குழப்பம் அல்லது ஏமாற்றம், அல்லது நாம் அதற்கு சரிப்பட்டு வர மாட்டோம் போன்ற உணர்வுகளைக் கொண்டவராக இருக்கலாம் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் எப்போதும் உங்களுக்கு சந்தேகம் நிலவும் அல்லது எதை தேர்ந்தெடுப்பது என்பதிலும் குழப்பம் நீடிக்கும். காட்டில், விசித்திரமான நகரத்தில் அல்லது முடிவில்லா கடையில் சுற்றும் போது, நீங்கள் தொலைந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் சிக்கிக் கொண்டீர்கள் என அர்த்தமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Nightmares and their Mysterious Meanings

Let’s take a look the most commonly occurring nightmares and what they represent…