உலகின் புகழ்பெற்ற இந்த நகரங்களில் கூட மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இல்லையாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு மனித உரிமையின் பேரில் நடத்திய ஆய்வில், உலகம் முழுவதிலும் பத்துக் கோடி மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இல்லாமல் இருக்கிறார்கள் என தெரியவந்தது. இந்த ஆய்வின் தகவல்கள் பலத்தரப்பட்ட மக்களை திடுக்கிட வைத்துள்ளது.

நெஞ்சை உலுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் உலக மக்களைப் பற்றிய தகவல்கள்!!!

இதில் அதிர்ச்சியான தகவல் என்னவெனில், உலகின் முக்கியமான மற்றும் பெரும் நகரங்கள் தான் இந்த பட்டியலில் முன்னனியில் இருக்கின்றன. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ, மும்பை போன்ற நகரங்கள் டாப் இடங்களில் இருப்பது திகைக்க வைக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிஸ்பன், போர்ச்சுகல்

லிஸ்பன், போர்ச்சுகல்

போர்ச்சுகலில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் இல்லாத மக்கள் லிஸ்பன் மற்றும் போர்டோ போன்ற பகுதிகளில் தான் இருக்கிறார்கள். ஏறத்தாழ சாலைகளில் உறங்கும் மக்களின் தொகை மட்டும் இங்கு 300-ஐ தாண்டுகிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க லிஸ்பன் முயற்சி செய்து வருகிறது.

டென்வர், கொலராடோ

டென்வர், கொலராடோ

2011 வரை 411 ஆக இருந்த சாலை வாழ் மக்களின் தொகை, ஒரே வருடத்தில் 964-ஆக உயர்ந்துவிட்டது.

இன்டியானப்போலிஸ், இன்டியானா

இன்டியானப்போலிஸ், இன்டியானா

இந்த நகரில் 2,200 க்கும் மேற்பட்ட மக்கள் இரவு சாலையில் தான் உறங்குகிறார்கள். வாழ வீடு இன்றி இருக்கும் மக்களின் எண்ணிக்கை இங்கு 15,000த்தை எட்டிவிட்டது என்று கூறப்படுகிறது.

டுப்ளின், அயர்லாந்து

டுப்ளின், அயர்லாந்து

சமீபத்திய ஆய்வில், வீடின்றி வாழும் மக்களின் எண்ணிக்கை ஓர் நாளுக்கு ஏழு பேர் என்ற அளவில் டுப்ளின் பகுதியில் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. அரசாங்கம் சமூக வீடுகள் கட்டித்தர முடியாமல் இருப்பதால் மக்கள் பெரும் அவதியில் இருக்கிறார்கள்.

ரியோடி ஜெனிரோ, பிரேசில்

ரியோடி ஜெனிரோ, பிரேசில்

கடந்த ஆண்டின் ஆய்வின் படி, ரியோடி ஜெனிரோவில் வீடுகளின்றி இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை 2,500 ஆகும்.

பால்டிமோர், மேரிலாந்து

பால்டிமோர், மேரிலாந்து

2011ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்த நகரில் வீடுகள் இன்றி வாழும் மக்களின் எண்ணிக்கை 4,088. குடும்பங்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் சாலையில் உறங்கும் அவல நிலையில் இருக்கிறது இந்த நகரம். மக்களுக்கு வீடு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையை தீர்த்து வைக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் இயங்கி வருகிறது.

டோக்கியோ, ஜப்பான்

டோக்கியோ, ஜப்பான்

உலகின் முன்னணி நகரங்களில் முதன்மை நிலையில் இருக்கும் டோக்கியோவில் 5,000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் வீடுகள் இன்றி சாலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

சிகாகோ

சிகாகோ

கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த நகரத்தில் 1,16,042 பேர் வீடின்றி சாலையில் வாழ்வதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை 10% அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன் டி.சி.

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்காவின் முக்கிய நகரான இந்த பகுதியில் மட்டுமே 6,865 பேர் வீடுகள் இன்றி சாலையில் வாழ்ந்து வருகிறார்கள். நகர அரசு இவர்களுக்கு வீடுகள் அளிக்க முயற்சி செய்கிறது. ஆனால், குளிர் காலங்களில் அரசு தரும் தற்காலிக வீடுகளில் தங்க முடியாத சூழல் இங்கு நிலவி வருகிறது.

ரோம், இத்தாலி

ரோம், இத்தாலி

இத்தாலியில் வீடுகள் இன்றி வாழும் 17,000 பேரில், 7,000 பேர் ரோமில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

தம்பா, ப்ளோரிடா

தம்பா, ப்ளோரிடா

தம்பா பகுதியில் சரியான வாழ்வாதாரம் இன்றி, 7,419 மக்கள் சாலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

சான் டியகோ, கலிபோர்னியா

சான் டியகோ, கலிபோர்னியா

கலிபோர்னியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் சான் டியகோ. இந்நகரின் மக்கள் தொகை 13,45,895. இதில் வீடுகளின்றி சாலையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 8,879.

ஏதேன்ஸ், கிரீஸ்

ஏதேன்ஸ், கிரீஸ்

கிரீஸில் மொத்தம் 20,000 பேர் சாலையில் வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒலிம்பிக் நகரான ஏதேன்ஸில் மட்டுமே 9,000 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

சான் பிரான்சிஸ்கோவில், 7,000 -10,000 வரையிலான மக்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். மற்றும் 5,000 பேர் அரசுக் கொடுத்துள்ள தற்காலிக வீட்டில் வசித்து வருகிறார்கள்.

புடாபெஸ்ட், ஹங்கேரி

புடாபெஸ்ட், ஹங்கேரி

இந்த நகரில் ஏறத்தாழ 10,000 பேர் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இந்நாட்டு அரசு ஓர் சட்டத்தை நிறைவேற்றியது, அதில் சொந்த வீடுகள் இருந்தும் வீடுகள் இல்லை என்று அரசிடம் உதவி கேட்டு வருபவர்கள் கண்டறியப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்படும் என. இதன் பிறகு இப்போது இந்நகரில் வீடுகள் இன்றி வாழும் மக்களின் எண்ணிக்கை 6,000-மாக குறைந்துள்ளது.

மும்பை, இந்தியா

மும்பை, இந்தியா

2003-ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் இந்தியாவில் 23 மில்லியன் மக்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அன்றிருந்து மக்களுக்கு வீடுகள் கட்டித்தர அரசு முடிவு செய்தது. இதில் மும்பையில் மட்டுமே 25,000க்கும் மேற்ப்பட்ட மக்கள் வீடுகள் இன்றி வாழ்வதாக தெரியவந்துள்ளது.

ஜாகர்த்தா, இந்தோனேசியா

ஜாகர்த்தா, இந்தோனேசியா

இங்கு நடைபெறும் இயற்கை சீரழிவுகளினால் வீடுகளை இழந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. ஏறத்தாழ 30,000 மக்கள் வீடுகள் இன்றி இந்த நகரில் வாழ்ந்து வருகிறார்கள்.

மெக்ஸிகோ நகரம், மெக்ஸிகோ

மெக்ஸிகோ நகரம், மெக்ஸிகோ

40% மக்கள் இங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்நகரில் ஏறத்தாழ 20,000 - 30,000 பேர் வரை வீடுகள் இன்றி சாலைகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

வீடுகள் இன்றி வாழ்ந்துவரும் மக்களின் மீது அதிக கவனம் கொண்டுள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ். ஏறத்தாழ இங்கு 57,800 பேர் வீடுகள் இன்றி வாழ்ந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரம், அமேரிக்கா

நியூயார்க் நகரம், அமேரிக்கா

நியூயார்க்கில் 60,000 பேர் வீடுகளின்றி சாலையில் வாழ்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதில் 22,000 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரியது.

மணிலா, பிலிப்பைன்ஸ்

மணிலா, பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் 1.8 மில்லியன் குழந்தைகள் தெருக்களில் பிச்சை எடுத்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதில் 70,000 பேர் மணிலா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cities With Extremely High Homeless Populations

Do you know about the Cities With Extremely High Homeless Populations? Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter