உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 11 நாடுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உலகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போவதால் சில நாடுகளில் சண்டைகளும் சச்சரவுகளும் அதிகரித்து கொண்டே போகிறது. தடுப்பற்ற முறையில் தீவிரவாதம் பரவி வருகிறது. பல நாடுகளில், குறிப்பாக பல மத்திய கிழக்கு நாடுகள் போர்களாலும், சண்டைகளாலும் அழிந்து கொண்டிருக்கிறன.

இன்று, உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான நாடுகளைப் பற்றி பார்க்க போகிறோம். மிகவும் ஆபத்தான இந்த நாடுகளில் குடியிருப்பது பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. இங்கே தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த நாடுகளில் தினமும் நடக்கும் பாலியல் ரீதியான அடிமைத்தனம், கற்பழிப்பு மற்றும் சித்திரவதைகள் ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை.

உலகத்தில் உள்ள முதன்மையான 10 சக்தி வாய்ந்த ராணுவங்கள்!!!

உலகத்தில் உள்ள அப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான நாடுகளைப் பற்றி பார்க்கலாமா? இந்த நாடுகளில் தான் கொலை நடக்கும் வீதமும் அதிகமாக உள்ளது. உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உலகத்தில் அதிகமான கொலை வீதத்தை கொண்ட நாடுகள் எனவும் வகைப்படுத்தலாம்.

இதோ, உலகத்தில் உள்ள ஆபத்தான 11 நாடுகளின் விவரம்! தொடர்ந்து படியுங்கள். குற்றம், கற்பழிப்பு, பாலியல் ரீதியான அடிமைத்தனம், சித்திரவதை, அனைத்து வித உயிர்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் அழிவு ஆகிய அடிப்படையில், ஏறுவரிசையில் இந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
11. மெக்ஸிகோ

11. மெக்ஸிகோ

மெக்ஸிகோவிற்கு நீண்ட காலமாக போதை பொருள் சம்பந்தப்பட்ட வன்முறை வரலாறு உள்ளது. இதனால் ஏற்படும் போதை பொருள் கூட்டமைப்பு மோதல்களினால் இரக்கமே இன்றி பல பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற வட அமெரிக்கா நாடுகளுடன் இணைக்கும் இதன் எல்லையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகிறது.

10. கொலம்பியா

10. கொலம்பியா

பாப்லோ எஸ்கோபர் என்ற அதிபயங்கரமான கும்பல் இருந்த காலத்தில் கொலம்பியா மிகப்பெரிய போதை வணிக மையமாக விளங்கியது. தொடர்ச்சியான அதிக கொலை வீதம் மற்றும் போதை பொருள் கடத்தலால், மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

9. வெனிசுலா

9. வெனிசுலா

கவர்ந்திழுக்க கூடியவராக விளங்கிய ஜனாதிபதி ஹுகோ ஷாவேவின் மரணத்திற்கு பிறகு, அரசாங்கத்திற்கும் அதனை எதிர்க்கும் சக்திகளுக்கும் உள்ளான பகை பெரியளவில் வளர்ந்து விட்டது. ஷாவேவிற்கு பின் பதவியேற்ற நிகோலஸ் மடுரோவை பதவி விலக சொல்லி, வெனிசுலாவில் சில கடுமையான சட்டத்தை ஒழுங்கு சூழ்நிலையை கொண்டு வந்துள்ளார்.

8. சூடான்

8. சூடான்

சூடானில் நடக்கும் உள்நாட்டு போரினால், அது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதன் விளைவாக சமீபத்தில் உருவானதே தெற்கு சூடான். இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தும், இடம் பெயர்ந்தும் உள்ளனர். இன்றைய தேதியில் கூட இங்குள்ள ஜனத்தொகையில் 25% பேர்களின் ஒரு நாள் வருமானம் 5 டாலருக்கு குறைவாகவே உள்ளது. அப்படிப்பட்ட சூடான் இந்த பட்டியலில் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

7. சோமாலியா

7. சோமாலியா

நீண்ட காலத்திற்கு முன்பாகவே கொடூரமான கடற்கொள்ளையர்களால் சோமாலியா சூறையாடப்பட்டு முற்றுகையிடப்பட்டது. இன்றைய தேதியில் ஆப்ரிக்காவில், தீவிரவாதம் மற்றும் போதை தொடர்பான வன்முறையில் மிகப்பெரிய மையமாக இது விளங்குகிறது. கொலையையும், வன்முறையையும் ஒரு விதிமுறையாக செய்யப்பட்டு வரும் இந்த நாடு, ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 7-ஆம் இடத்தை பிடிக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக இங்கு உள்நாட்டு போர் நடந்து கொண்டே இருக்கிறது.

6. லிபியா

6. லிபியா

மும்மர் கடாபியின் மரணத்திற்கு பிறகு, லிபியாவில் அளவுக்கு அதிகமான வன்முறையும், இரத்தம் சிந்துதலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாத இயக்கத்தின் பெரும்பான்மையான பிரிவினர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயல்படுகின்றனர். உள்நாட்டு போர் தொடங்கும் விளம்பில் நாடு உள்ளது என லிபியா நாட்டு தூதர் அமெரிக்காவிடம் கூறும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

5. எல் சல்வடோர்

5. எல் சல்வடோர்

உலகத்தில் அதிகமான கொலை வீதத்தை கொண்டுள்ள நாடுகளில், 1 லட்சத்திற்கு 41 என்ற வீதத்தில் கொலை நடக்கும் எல் சல்வடோர் நாடும் இடம் பிடித்துள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், போதைப் பொருட்கள் மற்றும் ஆயுத வணிகத்தின் மையமாகவும் எல் சல்வடோர் மாறி வருகிறது.

4. ஹோண்டுராஸ்

4. ஹோண்டுராஸ்

1 லட்சத்திற்கு 90 என்ற வீதத்தில் கொலை நடக்கும் ஹோண்டுராஸ் நாடு இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்துள்ளது. கற்பழிப்புகளும், போதை பொருட்கள் ரீதியான வன்முறைகளும் இங்கு எழுதப்படாத சட்டமாகி விட்டன.

3. ஆப்கானிஸ்தான்

3. ஆப்கானிஸ்தான்

இந்த உலகத்தில் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் மோசமான இடமாக விளங்கும் ஆப்கானிஸ்தான், ஆபத்தான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நாட்டை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான தாலிபான்களின் இடைவிடாத முயற்சிகளால், அங்கே தினமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் மடிந்து வருகிறது.

2. ஈராக்

2. ஈராக்

உலகத்தில் உள்ள இரண்டாவது ஆபத்தான நாடு என்ற அந்தஸ்த்தை ஈராக் பெற்றுள்ளது. நாட்டை மீண்டும் சீர்படுத்த முடியாத அளவிற்கு அதற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் ISIS போராளிகள். ஈராக் ராணுவ சிப்பாய்களை கொன்று, சிறுபான்மை பெண்களை ஆயிரக்கணக்கில் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.

1. சிரியா

1. சிரியா

உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடாக கருதப்படுவது சிரியாவாகும். ஆசாத் அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு முன் களைந்த பிறகு, 20,000 பெண்களுக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனிதநேயத்துடன் இங்கே அமைதியை நிலவ முயற்சி செய்தாலும், அது பயனளிக்காமல் போனது. லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டே வெளியேறி உள்ளனர்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 11 Most Dangerous Countries in The World

Here are 11 most dangerous countries in the world. Read on.. Just so that you know it, this list of world's most dangerous countries is in ascending order on parameters of crime, rape, sexual slavery, torture, murder and destruction of all forms of life and infrastructure.
Story first published: Tuesday, September 2, 2014, 11:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter