For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்ட்டிக்குக் கிளம்பிட்டீங்களா? இதைப் படிச்சிட்டுப் போங்க!!

By Karthikeyan Manickam
|

உங்கள் நண்பர் உங்களை மதிய விருந்து அல்லது இரவு விருந்திற்கு அழைத்திருக்கிறாரா? இப்போது தான் நீங்கள் முதல் முதலாக ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்களா? பார்ட்டிகளில் அடிக்கடி கலந்து கொண்டிருப்பவர்களுக்கு அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நன்றாகத் தெரிந்திருக்கும். ஆம், ஒரு விருந்துக்குச் சென்றால் அங்கு எப்படி நடந்து கொள்வதென்று சில வரைமுறைகள் உள்ளன. மேஜை நாகரிகம் என்று இதைச் சொல்வார்கள்.

ஆனால் நீங்கள் முதல் முறையாக விருந்துக்குச் செல்வதால், இவை குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றும் தெரியாமல் அங்கு சென்று குண்டக்க மண்டக்க நடந்து கொண்டால், உங்கள் நண்பர்களே உங்களைக் கிண்டல் செய்வார்கள். நீங்கள் வெட்கப்பட வேண்டியிருக்கும்.

அப்படியே ஓரளவு மேஜை நாகரிகம் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், பின்வரும் குறிப்புகளைக் கொஞ்சம் படித்துவிட்டு பார்ட்டிக்குச் செல்லுங்கள். உபயோகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருந்தளிப்பவர் முக்கியம்

விருந்தளிப்பவர் முக்கியம்

உங்களுக்கு விருந்து கொடுப்பவரின் அல்லது அவருடைய குடும்பத்தினரின் நடவடிக்கைகளில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும். அவர்கள் கூறுவதையும் கவனமாகக் கேளுங்கள். முடிந்தால் உங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுங்கள். அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.

வாயை மூடி இருக்கவும்

வாயை மூடி இருக்கவும்

பார்ட்டியின் போது 'சவக் சவக்'கென்று வாயை மென்று கொண்டிருக்காதீர்கள். அல்லது, வளவளவென்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். இவற்றைவிட ஒரு மோசமான மேஜை நாகரிகம் இருக்க முடியாது.

உண்ணும் முறை

உண்ணும் முறை

சாப்பிடும் போது, உணவு உங்கள் முகத்தை நோக்கி வர வேண்டும்; உணவை நோக்கி உங்கள் முகம் போகக் கூடாது. மேஜையில் உங்களுக்குத் தேவையான ஒன்றை எடுப்பதற்காக உடம்பை அஷ்ட கோணலாக வளைத்து, தாவிக் கொண்டிருக்காதீர்கள். அதேபோல், ஏதாவது ஒரு ஐட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், முதலிலேயே அதைக் கொஞ்சமாக எடுத்து சாம்ப்பிளுக்கு சாப்பிட்டு விடுங்கள்.

விருந்துக்கேற்ற உடை

விருந்துக்கேற்ற உடை

உங்கள் நண்பர் அல்லது உறவினர் என்னவிதமான விருந்துக்கு உங்களை அழைக்கிறாரோ, அந்த மூடுக்கேற்றவாறு நீங்கள் உடைகளை அணிந்து கொண்டால் கலக்கலாக இருக்கும். அலுவலக ரீதியிலான பார்ட்டி என்றால், கோட் சூட் போட்டுக் கொள்ளலாம். கேளிக்கை விருந்து என்றால், உங்களுக்குப் பிடித்த டி-சர்ட் மற்றும் ஜீன்ஸில் சென்று அசத்தலாம். பெண்கள் எப்படி உடை உடுத்திக் கொள்ளலாம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கிஃப்ட் வேணுமா? வேணாமா?

கிஃப்ட் வேணுமா? வேணாமா?

சம்பிரதாயமான விருந்து என்றால், கண்டிப்பாக ஒரு கிஃப்ட் அல்லது பூங்கொத்தைக் கொண்டு சென்று விருந்தளிப்பவருக்குக் கொடுங்கள். கேளிக்கை விருந்தென்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று விருந்தளிப்பவருக்கு முடிந்தவரை உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Be A Good Guest At Parties

Here are some things to keep in mind when you're going to somebody's place for lunch or dinner.
 
Desktop Bottom Promotion