உலகில் மிக மோசமான உடலமைப்பு குறைபாடுகளுடன் வாழ்ந்து வரும் மக்கள் - டாப் 25!

Posted By:
Subscribe to Boldsky
உலகின் உடல் அமைப்பு கோளாறுடன் பிறந்து, வாழ்ந்து, மடிந்த சில வித்தியாசமான மனிதர்கள்- வீடியோ

சிலர் மிக உயரமாக இருப்பார்கள், சிலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், சிலருக்கு மூக்கு மட்டும் மிக பெரிதாக இருக்கும். சிலர் இதழ்கள் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இதை எல்லாம் உடலில் காணப்படும் வித்தியாசமான தோற்றம் என்று கூறுவீர்களா?

ஒருவேளை உடலில் பதினாறு கைவிரல்கள், பதினெட்டு கால் விரல்கள் இருந்தால், கண்களுக்குள் முடி முளைத்தால், கால்கள் மட்டும் யானை போல இருந்தால், மூக்கே இல்லாமல் இருந்தால். முகம் முழுக்க ஓநாய் போல முடி முளைத்தால், இருபது வயது இளைஞர் நூறு வயது முதியவர் போல தோற்றம் அளித்தால் என்ன கூறுவீர்கள்?

இதோ! உலகின் உடல் அமைப்பு கோளாறுடன் பிறந்து, வாழ்ந்து, மடிந்த சில வித்தியாசமான மனிதர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உல்லாஸ் குடும்பம்

உல்லாஸ் குடும்பம்

உல்லாஸ் குடும்பம் (The Ulaş Family), இவர்கள் துருக்கியில் ஒரு கிராமப்புறத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தினர். இவர்கள் குடும்பத்தில் மட்டுமே இந்த விசித்திர கண்டிப்பிடிக்கப்படாத குறைபாடு காணப்படுகிறது. இவர்களால் மற்ற மனிதர்களை போல இரண்டு கால்களில் நடக்க முடிவதில்லை. நான்கு கால்களில் தவழ்ந்து தான் செல்கின்றனர். இவர்களது உடல் முழுமையான வளர்ச்சி அடைவதில்லை. இவர்கள் உடலமைப்பு பழங்கால குரங்கு இனத்தின் அமைப்பினை போல இருக்கிறது என கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியார்கள் இதுவரை இவர்களது குறைபாடு குறித்து தெளிவான காரணம் அறிய முடியாமல் தவித்து வருகிறார்கள். இது ஒருவகையான மரபணு கோளாறாக இருக்க கூடும் என்பது மட்டுமே அறிய முடிகிறது.

தி ஆசிவ்ஸ் குடும்பம்

தி ஆசிவ்ஸ் குடும்பம்

தி ஆசிவ்ஸ் குடும்பம் (The Aceves Family), இவர்கள் மெக்ஸிகோவில் வசித்து வந்த குடும்பம். இவர்களுக்கு ஆங்கிலத்தில் Hypertrichosis என அறியப்படும் மயிர்மிகைப்பு கோளாறு இருந்து வந்தது. இதை ஓநாய் நோய் எண்டும் குறிப்பிடுவது வழக்கம். அதாவது முகத்திலும், உடலின் சில பகுதிகளிலும் மிகையாக மயிர் வளர்ச்சி இருக்கும்.

ஜோஸ் மெஸ்ட்ரே

ஜோஸ் மெஸ்ட்ரே

ஜோஸ் மெஸ்ட்ரே (José Mestre), போர்ச்சுகீசிய பிரஜை ஆவார். இவர் முகத்தில் பெரிய அளவிலான கட்டி ஒன்று உருவானது. அந்த கட்டி இவரது முகத்தையே முழுவதுமாக மறைத்துவிட்டது. இவரால் சுவாசிப்பது கடினாமா செயலாகும். சிக்காகோவில் இருந்து மருத்துவர் ஒருவர் கடைசியில் இவருக்கு உதவ வந்தார். ஆனாலும், இந்த அறுவை சிகிச்சை மிகவும் கடினமானது என்று கூறினார். பிறகு போர்ச்சுகீசிய அரசே ஜோஸ் மெஸ்ட்ரேவின் அறுவை சிகிச்சை தொகையை அளிப்பதாக கூறியது. இப்போது மருத்துவ சிகிச்சைகள் பெற்று ஒரு இயல்பான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜோஸ் மெஸ்ட்ரே.

காதுக்குள் கொம்பு!

காதுக்குள் கொம்பு!

சில சமயம் தலையோடு தலை முட்டிக் கொண்டால், பொய் கூறினால் கொம்பு முளைக்கும் என்று கூறுவோம். ஆனால், இந்த நபருக்கு உண்மையாகவே காதுக்கு அருகாமையில் கொம்பு முளைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆட்டு கொம்பு போல கடினமானதாக இது இருந்துள்ளது. எப்படியோ அறுவை சிகிச்சை செய்து இதை அகற்றிவிட்டார்கள்.

விரல்!

விரல்!

2007ல் ABC செய்தி தொகுப்பு ஒன்றில் டிவி தொகுப்பாளினி ஒருவர் Ectrodactyly எனும் பாதிப்புடன் வாழ்ந்து வருவது கூறப்பட்டிருந்தது. இந்த நோயை ஆட்டுக்குட்டி கைவிரல் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதாவது இவர்களது கை அல்லது கால் விரல்கள் ஆட்டின் விரல்கள் போல இருக்கும்.

ஜாவியர் போடெட்

ஜாவியர் போடெட்

ஜாவியர் போடெட் (Javier Botet) எனும் இந்த ஸ்பானிஷ் நடிகருக்கு மார்பன் நோய்க்குறி (Marfan Syndrome) என்ற ஒன்று இருக்கிறது. இந்த காரணத்தால் எழுந்து நீளமாக வளரும். மேலும், மூட்டு எலும்புகள் வலுவிழந்து லூசாக இருக்கும். இந்த குறைபாடு இருக்கும் ஆண்கள் உயரமாகவும், நீண்ட கை, கால்கள், விரல்களும் கொண்டிருப்பார்கள்.

பீட்டோ பைக்கடந்தா

பீட்டோ பைக்கடந்தா

பீட்டோ பைக்கடந்தா (Petero Byakatonda), உகாண்டாவின் சிறு நகர்புறத்தை சேர்ந்த சிறுவன். இவனுக்கு crouzon எனும் நோய் இருந்தது. இந்த நோய் மண்டை ஓட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விழிகளை வெளியே தள்ளும். இந்த சிறுவனுக்கு டெக்சாஸ் பகுதியை சேர்ந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்கு திரும்ப செய்தனர்.

ரூடி சாண்டோஸ்

ரூடி சாண்டோஸ்

ரூடி சாண்டோஸ் (Rudy Santos) எனும் இவர் கருவில் வளரும் போதே இரட்டையராக இருந்துள்ளார். ஆனால், இவரது இரட்டையர் இவரது உடலுடன் முழு வளர்ச்சி அடையாமல் பிறந்தார். இதனால், ஒட்டுண்ணி இரட்டையர் வகையில் இணைந்தார் இவர். இவரது உடலில் இருக்கும் கூடுதல் கைகளும், கால்களும் உயிருடன் தான் இருக்கும். ஆனால், அதனால் எந்த பயனும் இருக்காது.

ஹாரி ஈஸ்ட்லேக்

ஹாரி ஈஸ்ட்லேக்

ஹாரி ஈஸ்ட்லேக் (Harry Eastlack) என்பவர் பிரபலமாக கல் மனிதர் என்று அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆங்கிலத்தில் Fibrodysplasia ossificans progressiva என்று கூறுகிறார்கள். இந்த தாக்கத்தின் காரணமாக இவரது எலும்புகள் அசைக்க முடியாதப்படி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். இவரது உடலில் இதழை மட்டுமே அசைக்க முடியும். இவர் 70களில் இறந்து போனார். இவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிக்கப்பட்டது.

பால் கர்சன்

பால் கர்சன்

பால் கர்சன்-க்கு (Paul Karason) Argyria எனும் பாதிப்பு. இதன் மொலம்க இவரது சருமத்தின் நிரல் பழுப்பு மற்றும் நீல நிறத்தின் சாயலில் இருக்கும். சரும நிறத்தை தீர்மானிக்கும் ஹார்மோனில் ஏற்பட்ட சில்வர் நிற தாக்கத்தால் இவருக்கு இப்படி ஒரு குறைபாடு ஏற்பட்டுள்ளது.

தேதே கொஸ்வாரா

தேதே கொஸ்வாரா

தேதே கொஸ்வாரா (Dede Koswara), இவரை பிரபலமாக மரமனிதன் என்றும் கூறி வந்தனர். இவருக்கு Epidermodysplasia verruciformis எனப்படும் ஒரு ஃபங்கல் தொற்று ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இவரது சருமம் மரம் போல மாற ஆரம்பித்தது. இவருக்கு 2008ல் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இவரது சருமம் மரமாக மாற துவங்கியது. இதற்கான நிரந்தர தீர்வு இல்லை என்று கூறிவிட்டனர்.

டிடியர் மோன்ட்டோவோ

டிடியர் மோன்ட்டோவோ

டிடியர் மோன்ட்டோவோ (Didier Montalvo) எனும் இந்த் சிறுவனை ஆமை சிறுவன் என்று அழைத்து வந்தனர். இவருக்கு இருந்து ஒரு அரியவகை சரும நோயால் மச்சம் மிக பெரியதாக வளர துவங்கியது. கிட்டத்தட்ட ஆமையின் ஓடு அளவிற்கு அது வளர்ந்தது. இந்த சிறுவனுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்த நெயில் எனும் மருத்துவர் சிகிச்சை அளித்து அந்த மச்சத்தை அகற்றினார். இப்போது இந்த சிறுவன் இயல்பு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.

டெஸ்ஸா எவன்ஸ்

டெஸ்ஸா எவன்ஸ்

டெஸ்ஸா விற்கு (Tessa Evans) பிறக்கும் போதே Arrhinia எனும் பாதிப்பு. இவருக்கு மூக்கு இல்லை. இது போன்ற குறைபாடுடன் பிறக்கும் நபர்களுக்கு பிளாஸ்டிக் மூக்கை பொருத்துவது வழக்கம். ஆனால், இவர்களால் எந்த ஒரு வாசத்தையும் நுகர்ந்து உணர முடியாது.

டீன் ஆண்ட்ரூஸ்

டீன் ஆண்ட்ரூஸ்

டீனுக்கு progeria எனும் நோய் தாக்கம் இருக்கிறது. இந்த தாக்கம் இருக்கும் நபர்களுக்கு வயது மிக வேகமாக அதிகரிக்கும். இவர்கள் பதின் வயது வரை வளர்வதே பெரிய விஷயம். ஆயினும் டீன் இருபது வயது வரை வாழ்ந்தார். ஆனால், டீனின் உடலியல் வயது இறக்கும் போது நூறை தொட்டுவிட்டது.

ட்ரச்சர் காலின்ஸ்

ட்ரச்சர் காலின்ஸ்

ட்ரச்சர் காலின்ஸ் என்பது ஒருவகை நோய் தாக்கத்தின் பெயராகும். இந்த பெண் பாதிக்கப்பட்டிருந்த நோய் இதுதான். இந்த நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு முக அமைப்பு கோளாறு ஏற்படும். இதனால் இவர்களது கண்ணம், தாடை, காது போன்ற இடங்களின் அமைப்பு சரியாக இருக்காது. சிலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இதற்கு ஒரு தீர்வு அள்ளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

டெக்லான் ஹேடன்

டெக்லான் ஹேடன்

யு.கே-வை சேர்ந்த டெக்லான் ஹேடன் (Declan Hayton) எனும் இந்த சிறுவனுக்கு Moebius எனும் நோய் தாக்கம் இருந்தது. இவனால் முகத்தில் கண்களை தவிர வேறு எந்த பாகத்தையும் அசைக்க முடியாது. இந்த நோய் தாக்கத்தால், உடலில் பல அமைப்பு கோளாறுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

வெர்னே ட்ராய்லர்!

வெர்னே ட்ராய்லர்!

வெர்னே ட்ராய்லர் (Verne Troyer) பிரபலமான நடிகர். இவருக்கு இருந்த cartilage-hair hypoplasia dwarfism என்ற நோய் தாக்கத்தால் இவர் உலகின் குள்ளமான மனிதர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் தன்னை தானே தி கிரேட் மினி என்றும் கூறிக்கொள்வது உண்டு.

மனார் மாகட்

மனார் மாகட்

மனார் மாகட் (Manar Maged), எனும் இந்த சிறுமியும் கிட்டத்தட்ட ஒட்டுண்ணி இரட்டையர் பாதிப்பு கொண்டிருந்தவர் தான். ஆனால், இவரை பிரிக்க மிகவும் சிரமமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மருத்துவர் எவ்வளவோ முயர்ச்சித்தும் மனார் மாகட்டை காப்பாற்ற முடியவில்லை.

சுல்தான் கோசென்

சுல்தான் கோசென்

சுல்தான் கோசென் (Sultan Kösen) எனும் இவர் துருக்கிய விவசாயி ஆவார். இவர் உலகின் உயர்ந்த மனிதர். இவரது உயரம் 251 சென்டிமீட்டர் ஆகும். ஏறத்தாழ 8 அடி 1 அங்குலம். ஆனால், இவரது இந்த உயரத்திற்கு ஒரு கட்டி தான் காரணம் என அறியப்பட்டது. அதாவது பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட தாக்கமே இவரை இவ்வளவு உயரமாக்கியது.

ஜோசப் மெர்ரிக்!

ஜோசப் மெர்ரிக்!

ஜோசப் மெர்ரிக் (Joseph Merrick) எனும் இவருக்கு யானை தலை தாக்கம் இருந்தது. அதாவது இவரது தலை உடலை காட்டிலும் பெரிதாக இருந்தது. அதானாலே இவரை யானை மனிதர் என்று அழைத்து வந்தனர். இவர் 1830ல் லண்டனில் பிறந்தவர். இவருக்கு proteus என கூறப்படும் நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நோய் காரணாமாக உடலின் சில பாகங்கள் மிக பெரிதாக வளரும்.

சீன சிறுவன்!

சீன சிறுவன்!

இவனது பெயர் அறியப்படவில்லை. இவனுக்கு கை, கால் விரல்கள் கூடுதல் எண்ணிக்கையில் இருந்தன. இவனுக்கு இருந்தது Polydactyly அல்லது hyperdactyly என்ற குறைபாடாகும். இதனால் கைகளில் ஐந்து விரல்களும், கால்களில் ஆறு விரல்களும் கூடுதலாக இருந்தது.

அதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் அந்த கூடுதல் விரல்களை நீக்கிவிட்டனர்.

ஆஸ்திரிய ஆண்!

ஆஸ்திரிய ஆண்!

பெயர் அறியப்படாத ஒரு ஆஸ்திரிய ஆணுக்கு கண்ணில் ஒரு விசித்திர தாக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இவர் கண்களில் நட்சத்திரம் போன்ற தாக்கம் ஏற்பட்டது. இவர் காணும் இடங்கள் எல்லாம் நட்சத்திரங்கள் இருப்பது போன்ற பிம்பம் இருக்கும். இதை இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ நாளேடு ஒன்று தங்கள் ஆய்வு கட்டுரை மூலம் வெளியிட்டு இருந்தனர். இவரது கண்புரையில் ஏற்பட்ட தாக்கமே இதற்கு காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்திருந்தனர்.

மாண்டி செல்லார்

மாண்டி செல்லார்

மாண்டி செல்லார் (Mandy Sellars), Proteus நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் பாதிப்பால் இவருக்கு கால்கள் மிகவும் பெரியதாக வளர்ந்தன.இதில் ஒரு காலை மருத்துவர்கள் ஆறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டனர் என்றும் அறியப்படுகிறது.

கண்களில்...

கண்களில்...

ஈரான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கும் கண்களில் முடி முளைக்க ஆரம்பித்தது. இவரது மருத்துவ நிலையானது நியூ இங்கிலாந்து மருத்துவ நாளேட்டில் வெளியாகியிருந்தது. இந்த ஈரான் நபருக்கு கண்களின் அடிபாகத்தில் கட்டி வளர்ந்தது, அதில் இருந்து முடியும் வளர துவங்கியது. இதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார்கள்.

மின் அன்!

மின் அன்!

இவரை மீன் மனிதர் என்று அழைத்து வந்தனர். இவரது உடலில் ஏற்பட்ட தாக்கத்தால், இவரது சருமம் மீன் செதில்கள் போல மாற துவங்கியது. இதற்கான காரணம் வியட்நாம் போரில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தப்பட்ட கெமிக்கல் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 25: People With Strange Malformation!

Top 25: People With Strange Malformation!
Story first published: Wednesday, January 24, 2018, 14:55 [IST]
Subscribe Newsletter