For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்காக போராடும் 4 குழந்தைகள். உங்கள் சிறிய உதவி மூலம் அவர்கள் உயிர் காக்க உதவுங்கள்!

By Staff
|

குழந்தையும் தெய்வமும் இன்று என கூறுவார்கள். தனஸ்ரீ, வீர், சாம்ராத் மற்றும் விஷாகா. இவர்கள் நால்வருமே மிக சிறிய வயதுடையவர்கள். ஆனால், இன்று மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார்கள்.

These Four Kids Needs Immediate Donations for Their Survival!

வயதானவர்கள் மருத்துவமனையில் இருந்தாலே நம்மால் தாங்கி கொள்ள இயலாது. இவர்கள் இன்னும் வாழ்க்கை என்றால் என்ன என்று கூற அறியாத மழலைகள். எனவே, உயிருக்காக போராடி வரும் இந்த நான்கு உயிர்களை உங்கள் சிறு உதவி மூலம் காத்திட முன்வாருங்கள். நீங்கள் அளிக்கும் தொகை சிறிதோ, பெரிதோ என்ற பேதமில்லை... ஏனெனில், அங்கே மருத்துவமனையில் போராடி வரும் உயிர்கள் விலைமதிப்பற்றவை.

தனஸ்ரீ!

மூச்சுக் குழல் பிரச்சனையால் அவதிப்படும் 1 வயது குழந்தை.. உதவிக்கரம் நீட்டுங்கள்!

தனஸ்ரீ மூன்று அறுவை சிகிச்சைக்கு பிறகும் தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு வயது குழந்தை. இவருக்கு மூச்சுக் குழலில் பிரச்சனை. கடந்த சில மாதங்களாக அவர் மருத்துவ உதவியில் தான் உயிர் வாழ்ந்து வருகிறார்.

These Four Kids Needs Immediate Donations for Their Survival!

தனஸ்ரீயின் அம்மா விஸ்வ ப்ரியா (34) மூன்று ஆண்டுகள் தவமிருந்து பெற்ற மகள் தனஸ்ரீ. தனஸ்ரீக்கு மூச்சு வால்வு சிதைவு பிரச்சனை. ஏற்கனவே பல இலட்சங்கள் செலவழித்துள்ளனர். இப்போது, ஐந்து இலட்ச ரூபாய் மருத்துவ செலவிற்கு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஐந்து இலட்சத்தில் இன்று (8/8/2018) வரை 3.16 இலட்சம் ரூபாய் மக்கள் உதவியால் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. நீங்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யும் பட்சத்தில் தனஸ்ரீ பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவாள்.

இந்த லிங்க் மூலமாக தனஸ்ரீக்கு நீங்கள் நன்கொடை அளித்து உதவலாம்.

வீர்!

கடந்த ஒரு வருடத்திற்கு முன் எங்கள் முதல் குழந்தை காலமானார். அந்த இழப்பை எங்களுக்கு பெரும் வலியை, சங்கடத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது மகனான வீர் (8) அவனது ஹீரோவான அண்ணன் எங்கு என்று கேட்டாள்... என்ன பதில் சொல்வது என்று பரிதவித்தோம். ஆனால், இந்த சமயத்தில் தான் வீருக்கும் உடல்நல பிரச்சனை என்பதறியாது திகைத்து நின்றோம்.

These Four Kids Needs Immediate Donations for Their Survival!

ஏற்கனவே முதல் மகன் இழந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் இவன் படுக்கையில் வீழ்ந்துவிட்டான். இவனையும் எங்களால் இழக்க இயலாது. இவன் இல்லாமல் எங்களால் வாழ இயலாது. வீர் தலசீமியா (Thalassemia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, உடல் வலிமை குன்றி போவது, மயக்கம் அடைதல் என தினந்தோறும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது வீருக்கு. இதற்கு தீர்வு காண எலும்பு மஜ்ஜை (bone marrow) சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

தற்சமயம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வீர் உயிர் காக்க நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. உங்களை போன்ற பல நல்ல உள்ளங்களின் உதவியால் ஐந்து இலட்சம் வரை நிதித்திரட்ட மேற்கொள்ளப்பட்ட இணைய பிரசாரத்தில் ஒரு இலட்சம் வரை பணம் திரட்டப்பட்டுள்ளது. நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர் மூலமாகவும் உதவும் பட்சத்தில் அந்த ஏழை தம்பதிகள் தங்கள் இரண்டாவது மகனையாவது உயிர் காத்து நல் வாழ்க்கை வாழ இயலும். உயிர் காக்க உதவுங்கள். உங்கள் சிறிய பணவுதவி வீரை நீண்ட ஆரோக்கிய வாழ்க்கை வாழ வைக்கும்.

சிறுவன் வீருக்கு நீங்கள் உதவ நினைத்தால், இந்த லிங்க் மூலம் பணவுதவி செய்து உயிர் காத்திட முன்வாருங்கள்.

சாம்ராத்!

சாம்ராதின் பெற்றோர் கட்டிட தொழிலாளிகள். பிறந்த எட்டாவது நாளிலேயே சாம்ராத்துக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக குணமானது. ஆனால், முழுமையாக குணமடையும் முன் சாம்ராத் மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

These Four Kids Needs Immediate Donations for Their Survival!

நிறைய பரிசோதனைகளுக்கு பிறகு சாம்ராத்துக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்கு மூன்று இலட்சம் வரை செலவாகும் என மருத்துவார்கள் கூறி இருக்கிறார்கள்.

சாம்ராத் சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்ட மூன்று இலட்ச ரூபாய் நிதித்திரட்டல் பிரச்சாரத்தில் இதுவரை இரண்டரை இலட்சம் வரை உதவி பெறப்பட்டுள்ளது. நீங்கள் சாம்ராத்துக்கு உதவும் அந்த சிறிய தொகை, அவர் மிக விரைவில் சிகிச்சை பெற்று குணமடைய உதவும்.

விஷாகா!

மரணத்துடன் போராடி வரும் சிறுமி விஷாகா. பத்து வயதே ஆன விஷாகா உடலின் பல உறுப்புக்கள் செயலிழந்து மரணத்துடன் போராடி வருகிறார். விஷாகா கல்வியில் நல்ல ஆர்வம் இருந்த மாணவி. ஒரு நாள் திடீரென அவர் மயக்கம் அடைந்துவிட்டதாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது மிகுந்த காய்ச்சலுடன் காணப்பட்டார். பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் என்றும், அதன் தாக்கத்தால் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உடல் பாகங்கள் பலவீனமாகிவிட்டது என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக உடல் உறுப்புக்கள் செயலிழக்க நேரிட்டு இப்போது விஷாகா மரண படுக்கையில் போராடி வருகிறாள்.

These Four Kids Needs Immediate Donations for Their Survival!

விஷாகாவின் மருத்துவ செலவுக்கு ஏழு இலட்சம் வரை தேவை என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக பலத்தரப்பட்ட மக்களிடம் இருந்து நிதித்திரட்டப்பட்டு வருகிறது. இன்று (8.8.2018) வரை 80,000 ரூபாய் வரையிலும் தான் பணம் திரட்டப்பட்டுள்ளது. உங்களை போன்ற பலர் மனது வைத்து உதவினால் தான் விஷாகா உயிர் பிழைக்க இயலும்.

உங்களால் முடிந்த உதவியை விஷாகாவிற்கு இந்த லிங்க் மூலம் அளித்து உயிர் காத்திட செய்யுங்கள்.

Read more about: life வாழ்க்கை
English summary

These Four Kids Needs Immediate Donations for Their Survival!

These Four Kids Needs Immediate Donations for Their Survival!
Story first published: Wednesday, August 8, 2018, 14:47 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more