Latest Updates
-
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா?
போரடிக்கும் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்ற செய்ய வேண்டியவை
உங்களுடைய தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற பல வழிகள் உள்ளது. இதற்கு நீங்கள் செலவிட வேண்டியது சிறிது நேரத்தை மட்டும்தான். ஆனால் இதன் பலன்களோ நிச்சயம் உங்கள் சலிப்பை சரிசெய்யும். போரடிக்கும் உங்கள் த
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை மனஅழுத்தம். அவர்களின் தினசரி வாழ்க்கை அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதும் ஒரு காரணமாகும். இந்த சலிப்பை சரிசெய்ய எப்பொழுதும் போன், தொலைக்காட்சி என அவற்றிலேயே மூழ்கி கிடக்க தொடங்கிவிடுகிறோம்.

இது எல்லாம் இல்லாமலே உங்களுடைய தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற பல வழிகள் உள்ளது. இதற்கு நீங்கள் செலவிட வேண்டியது சிறிது நேரத்தை மட்டும்தான். ஆனால் இதன் பலன்களோ நிச்சயம் உங்கள் சலிப்பை சரிசெய்யும். போரடிக்கும் உங்கள் தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றும் சில வழிகளை இங்கு பார்க்கலாம்.

வழி 1
தினமும் நாளை ஒரு வெற்று காகிதத்துடன் தொடங்குங்கள். இன்றுதான் நீங்கள் வாழப்போகும் கடைசி நாள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அந்த நாளில் நீங்கள் செய்யவிரும்பும் வேடிக்கையான செயல்களை அந்த காகிதத்தில் பட்டியலிடுங்கள். அதில் குறைந்தது மூன்றையாவது செய்ய முயலுங்கள்.

வழி 2
தினமும் அலுவலகம் செல்லும் வழியை தவிருங்கள். புது வழியில் செல்லுங்கள். அந்த வழியில் உள்ள கடைகள், ஆட்கள் போன்றவை உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

வழி 3
நீங்கள் வண்டியில் அலுவலகம் செல்பவராக இருந்தால் உங்கள் வாகனத்தை முன்னரே எங்காவது நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். இந்த நேரத்தை உங்களின் இனிமையான நினைவுகளை நினைத்து பார்ப்பதற்கும், அன்று செய்யப்போகும் வித்தியாசமான செயல்களுக்கு திட்டமிடவும் பயன்படுத்துங்கள். அதுவே பேருந்தில் செல்பவராக இருந்தால் அந்த நேரத்தை உங்களுக்கு பிடித்த புத்தகத்தை படிக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.

வழி 4
எப்பொழுதும் உங்களுடன் ஒரு கேமராவை வைத்திருங்கள், உங்களுக்கு பிடித்தவற்றையோ அல்லது நீங்கள் செய்யும் வித்தியாசமான செயல்களையோ உடனுக்குடன் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுடன் தினமும் ஒரு போட்டோவாது எடுத்துக்கொள்ளுங்கள். இது நண்பர்களுடன் நீங்கள் நெருக்கமாக அதிக வாய்ப்பை ஏற்படுத்தித்தரும். தினமும் வீட்டிற்கு சென்றவுடன் நீங்கள் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்தை பற்றியும் உங்கள் குடும்பத்தாரிடம் விலக்குங்கள்.

வழி 5
நீங்கள் வேலை செய்யும் இடத்தின் அமைப்பை மாற்றுங்கள். கணிப்பொறியையே பார்த்துக்கொண்டு இருக்காமல் உங்களுக்கு பிடித்த பொம்மைகள், புகைப்படங்கள் என உங்கள் மேஜையை அலங்கரியுங்கள். வேலை சலிப்பை ஏற்படுத்தும் போதெல்லாம் அவை உங்களை உற்சாகமடைய செய்யும்.

வழி 6
தினமும் உங்களுக்கு பழக்கமில்லாத 5 பேருடன் பேசுவதை ஒரு இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்தது என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? என விசாரியுங்கள். இது பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

வழி 7
மற்றவர்களை பாராட்ட பழகுங்கள். சில நேரங்களில் இது எளிதானதாக இருக்கும். சில சமயம் கடினமானதாக இருக்கும். ஆனால் பாராட்டுவதை தவிர்த்துவிடாதீர்கள். இது மற்றவர்களின் நாளை சிறப்பாகும், உங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

வழி 8
உங்களுக்கு அறிமுகம் இல்லாத அதேசமயம் உங்களுக்கு பிடித்த ஒரு தலைப்பை பற்றி படியுங்கள். பின்னர் அதைப்பற்றி மற்றவர்களுடன் உரையாடுங்கள். இது உங்களை அறிவார்ந்தவராக காட்டுவதுடன் கேட்பவர்களின் ஆர்வத்தையும் தூண்டும்.

வழி 9
தினமும் நீங்கள் சந்திக்கும் சவால்களை கணக்கிடுங்கள். செய்வதற்கு கடினமான அல்லது இதற்கு முன் நீங்கள் செய்திராத எத்தனை பணிகளை நீங்கள் அந்த நாளில் சந்திக்கிறீர்கள் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.

வழி 10
பந்தயம் கட்டுங்கள். வேடிக்கையான விஷயங்களுக்கு உங்கள் நண்பர்களிடம் பந்தயம் கட்டி விளையாடுங்கள். சிறிய தொகையை பந்தயம் கட்டினால் போதும். ஜெயித்தாலும், தோற்றாலும் கவலைப்படாதீர்கள். இதில் ஜெயிப்பதை விட அது தரும் சுவாரஸ்யம்தான் முக்கியம்.

வழி 11
விளையாட தயாராய் இருங்கள். குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்க முக்கிய காரணம் அவர்கள் தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் விளையாடுவதுதான். நீங்களும் அதனை முயற்சிக்கலாமே? அலுவலகம் முடிந்து வந்தவுடன் உங்கள் நண்பர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ நன்கு விளையாடுங்கள். இதுவே உங்கள் பாதி மனஅழுத்தத்தை விரட்டிவிடும்.

வழி 12
உங்கள் நண்பர்களுடன் தங்குங்கள். இது மிகவும் பயனுள்ள ஒரு வழி. தினமும் ஒரே மாதிரியான சூழல் உங்களை சலிப்படைய வைப்பதில் ஆச்சரியமில்லை. எனவே ஒரு மாற்றத்திற்காக உங்கள் நண்பர்களுடன் ஒரு நாள் தங்குங்கள்.



Click it and Unblock the Notifications











