For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'அரை மணி நேரம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்க' காஸ்டிங் கவுச் குறித்து பிரபல நடிகைகள் கூறும் பகீர் உண்மைகள்!

  |

  காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இந்தி நடிகை அதிதி ராவ். இவர் சமீபத்தில் தானும் காஸ்டிங் கவுச் பிரச்சனைக்கு ஆளானதாக பகீர் தகவலை தெரிவித்திருக்கிறார்.

  31 வயதான அதிதி ராவ், பத்மாவதி, பூமி, காற்று வெளியிடை படங்கள் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர். காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணத்தால் பல மாதங்கள் வேலை இன்றி இருந்ததாகவும் அதிதி ராவ் சமீபத்தில் சண்டே  கார்டியன் என்ற நிகழ்ச்சியல் பேசிய போது தெரிவித்திருக்கிறார்.

  Indian Celebrities Confessions on Casting Couch!

  அதில் அதிதி ராவ்," நான் என் வேலையை இழந்தேன், நிறைய அழுதிருக்கிறேன். அதற்காக நான் கவலைப்பட வில்லை. ஆனால், மிகுந்த மனவருத்தம் இருந்தது. ஏன் இப்படி பெண்களை மோசமாக ட்ரீட் செய்கிறார்கள் என்பதே என் வருத்தம்.

  காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணத்தால் மட்டும் எட்டு மாதங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். ஆனால், அந்த இக்கட்டான சூழல் தான் என்னை ஒரு தைரியமான பெண்ணாக மாற்றியது. நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க அது உதவியது.

  மேலும், பெண்கள் எப்போதும் தங்கள் சக்தியை புரிந்துக் கொள்ள வேண்டும். பதவி, அதிகாரித்தில் இருப்பவர்களுக்கு அடிபணிந்து செல்ல கூடாது, எதற்கும் அச்சப்பட தேவையில்லை. உங்களிடம் திறமை இருந்தால், நிச்சயம் சரியான ஆட்கள் உங்களை அழைத்து வாய்ப்பளிப்பார்கள் என்று கூறி இருந்தார்.

  அதிதி ராவ் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மொழி திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள்... காஸ்டிங் கவுச் குறித்து தாங்கள் கடந்து வந்த சம்பவங்கள் மற்றும் அதற்கு அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தனர் என்பது குறித்தும் வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சர்வீன் சாவ்லா!

  சர்வீன் சாவ்லா!

  சர்வீன் சாவ்லா 2014ம் ஆண்டு நடிப்பு துறைக்குள் நுழைந்தவர். இவர் ஹேட் ஸ்டோரி இரண்டாம் பாகத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரம் ஏற்ற நடித்திருந்தார். சர்வீன் சாவ்லா, சினிமா துறையில் காஸ்டிங் கவுச் இருப்பது உண்மையே.

  தென்னிந்திய திரையுலகில் நான் இந்த பிரச்சனையை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் என் தைரியத்தை விட்டுக்கொடுக்கவில்லை. என் கடின உழைப்பின் மூலமாகவே வாய்ப்புகள் தேடினேன் என்று கூறி இருக்கிறார்.

  கல்கி கோச்லின்

  கல்கி கோச்லின்

  பாலிவுட்டின் மிக தைரியசாலியான நடிகை கல்கி கோச்லின். இவர் எந்தவொரு பிரச்சனை குறித்தும் குரல் கொடுக்க தயங்குவதில்லை. இவர் காஸ்டிங் கவுச் பிரச்சனை குறித்தும் பேசி இருந்தார். விட்டுகொடுத்து போக வேண்டும், அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் பல வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன் என்று கூறியிருந்தார் கல்கி கோச்லின்.

  MOST READ: மெட்ரோ ரயிலில் மக்கள் அடித்த கூத்து - புகைப்படத் தொகுப்பு!

  ஆயுஷ்மான் குர்ரானா

  ஆயுஷ்மான் குர்ரானா

  ஒரு நடிகராக உருவாகும் முன்னர், ஆயுஷ்மான் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளாராக பணியாற்றி வந்தார். இவர் நடிக்க முயற்சி செய்து வந்த போது, சில காஸ்டிங் இயக்குனர்கள், இவரை செக்ஸுவல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள முடியுமா என்று அணுகியதாகவும்., அதை அவர் தவிர்த்துவிட்டார் என்றும் கூறி இருந்தார். ஆயுஷ்மான் குர்ரானா, "இந்த ஜொலிஜொலிக்கும் துறையில் காஸ்டிங் கவுச் நிஜமாகவே பல இடங்களில் நடக்கிறது" என்று கூறி இருந்தார்.

  கங்கனா ரனாவத்!

  கங்கனா ரனாவத்!

  திரையில் போல்டான கதாபாத்திரங்கள் ஏற்று சிறப்பாக நடித்து பலதரப்பட்ட ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் கங்கனா ரனாவத். ஆனால், சில திரைப்பட வாய்ப்புகள் பெற, செக்ஸுவல் ரீதியான விஷயங்களுக்கு உடன்பட கேட்டுக் கொண்டதாகவும். அதை தான் மறுத்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார் கங்கனா ரனாவத்.

  ரன்வீர் சிங்!

  ரன்வீர் சிங்!

  இன்றைய பாலிவுட் சினிமாவின் மிஸ்டர் ஹேண்ட்சம் என்றால் அது ரன்வீர் சிங் தான். இவர் எதை உடுத்தினாலும் அது ஃபேஷனாகி விடுகிறது. ஆரம்பக் காலக்கட்டத்தில் காஸ்டிங் கவுச் பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டதாகவும். ஆனால், எப்போதும் நான் திறமையை மட்டுமே நம்பி இருந்தேன். திறமை தான் நம்மளை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். ஆகவே, அது போன்ற விஷயங்களுக்கு எதற்காகவும் நான் விட்டுகொடுத்து போகவில்லை என தெரிவித்திருந்தார் ரன்வீர் சிங்.

  பார்வதி!

  பார்வதி!

  பூ, மரியான், பெங்களூர் டேஸ், போன்ற பல படங்களில் நடித்தவர் பார்வதி. இவர், "மலையாளம் திரை உலகிலும் காஸ்டிங் கவுச் பிரச்சனை இருக்கிறது. ஆனால், சினிமா துறையில் மட்டும் இதை ஆச்சரியமாக காண்பது வியப்பாக இருக்கிறது. இது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமாவை கண்டு மட்டும் அதிர்ச்சியடைய தேவையில்லை." என்று தெரிவித்திருக்கிறார்.

  வரலட்சுமி!

  வரலட்சுமி!

  சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி தனக்கு நேர்ந்த காஸ்டிங் கவுச் சார்ந்த பிரச்சனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட விளக்கவுரையை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு பிரபல டிவி சேனலின் புரோக்ராமிங் ஹெட் தன்னை செக்ஸுவல் ரீதியான விஷயத்திற்கு அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.

  MOST READ: 1947 இந்தியா - பாக்., பிரிவின் போது எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

  ராகுல் ப்ரீத்!

  ராகுல் ப்ரீத்!

  ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்த ராகுல் ப்ரீத், தான் இதுவரை தெலுங்கு சினிமாவில் காஸ்டிங் கவுச் போன்ற பிரச்சனைகளை சந்தித்தது இல்லை. காஸ்டிங் கவுச் தெலுங்கு சினிமா துறையில் இருப்பது போல நான் அறியவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகை ஸ்ரீ ரெட்டி மற்றும் மாதவி லதா போன்றவர்கள் ராகுல் ப்ரீத்க்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்தனர்.

  திறமை!

  திறமை!

  இதுக்குறித்து இந்தியா டுடே நாளேடுக்கு பேட்டி அளித்திருந்த ராகுல், மக்கள் நிறையவே காஸ்டிங் கவுச் குறித்து பேசுகிறார்கள். ஆனால், என்னை பற்றி இவர்கள் இதில் பேசுவதற்கு ஒரே காரணம், இப்போது நான் பிரபலமாக இருப்பதால் மட்டுமே.

  என் சுய அனுபவத்தில் இருந்து கூற வேண்டும் எனில், நான் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். ஆனால், இதுவரை ஒருமுறை கூட என்னிடம் யாரும் தவறாக நடந்துக் கொள்ளவும் இல்லை, தவறாக எதுவும் கேட்கவும் இல்லை.

  திறமை இருந்தால் மட்டுமே இந்த துறையில் பிழைக்க முடியும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அதற்கு உரித்தான இடம் உங்களுக்கு கிடைக்கும். இதை தான் நான் எப்போதும் நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

  ஐஸ்வர்யா ராஜேஷ்!

  ஐஸ்வர்யா ராஜேஷ்!

  தமிழ் சினிமா துறையில் ஓர் நடிகை இப்படியான தோற்றத்தில் தான் தோன்ற வேண்டும் என்பதை உடைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இளம் வயதிலேயே காக்கா முட்டை படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

  மேலும், காஸ்டிங் கவுச் பற்றி பேசும் போது, "காஸ்டிங் கவுச் என்பது சாதாரணமாக சினிமா துறையில் காணப்படுவது தான். ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்த துறையில் பயணித்துவிட்டேன். ஆரம்பக் காலத்தில் நிறைய தடங்கல், தடைகளை நான் சந்தித்தேன்.

  அரை மணி நேரம்!

  அரை மணி நேரம்!

  ஒன்னும் பெரிசா இல்ல, அரை மணிநேரம் தான.. போயிட்டு வந்திடலாம் என்று கூறுவார்கள். இதெல்லாம் ஏதோ சிறந்த, பெரிய படங்களுக்காக அழைக்கப்பட்டது இல்லை. வெறும் உப்புமா படங்களில் வாய்ப்பு கொடுப்பதற்கே நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் காத்திருக்கின்றன. இங்கே நிறைய இதுபோன்ற சம்வங்களில் வளைந்துக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

  காட்ராக்ட் போட்டுக்கலாம், அக்ரிமென்ட், இதெல்லாம் அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள். ஆனால், இன்றைய பெண்கள் சாதுவல்ல. அவர்கள் அமைதி காக்கவும் போவதில்லை. சினிமாவில் முன்னேற வேண்டும் என்றால், இதை எல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியது என்பது விதியல்ல. இது, அவர்களுக்கு நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும் காலக்கட்டம்.

  ஸ்ருதி ஹரிஹரன்!

  ஸ்ருதி ஹரிஹரன்!

  ஸ்ருதி கன்னடாவில் லூசியா என்ற படத்தின் மூலம் பிராலமானவர். இவர் தென்னிந்தியா மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கன்னட படத்தின் உரிமை பெற்ற ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், அதே வேடத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும். நாங்கள் ஐந்து பேர் இந்த படத்தை தயாரிக்கிறோம். எங்களுக்கு வேண்டும் எனும் போதெல்லாம் உன்னை பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

  MOST READ: சமைக்கும் போது நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் எடை அதிகரிக்க காரணம்

  செருப்பால் அடிப்பேன்!

  செருப்பால் அடிப்பேன்!

  அதற்கு ஸ்ருதி, நான் வரும் போது கையில் செருப்புடன் வருவேன் என்று கூறி அழைப்பை துண்டித்திருக்கிறார். இந்த தயாரிப்பாளரை அறிந்த சிலர் என்னிடம் நீ இப்படியா பேசினாய் என்று கேட்டனர், அன்றில் இருந்து தமிழில் எனக்கு நல்ல கதைகள், வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறி இருக்கிறார்.

  இப்படி காஸ்டிங் கவுச் குறித்து பல முன்னணி நடிகைகள் பகிரங்க குற்றச்சாட்டு வைத்தாலும். இப்படியான விஷயங்களில் பிடிப்படாமல் மிக குறைந்த வயதில் சினிமாவில் கால் பதித்து வெற்றிபெற்ற நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களை குறித்து தொடர்ந்து காணலாம்...

  #1

  #1

  ரம்யா கிருஷ்ணன் - 13 வயதில்.

  படம் - வெள்ளை மனசு, தமிழ்.

  #2

  #2

  நளினி - 13 வயதில்.

  படம் - ரகுபதி, ராகவ ராஜா ராம், தமிழ்.

  #3

  #3

  ஸ்ரீதேவி - இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக நடித்த போது வயது 14.

  படம் - மூன்று முடிச்சு, தமிழ்.

  #4

  #4

  ஹன்சிகா - 16 வயதில்.

  படம் - தேசமுத்ரூ, தெலுங்கு.

  #5

  #5

  லக்ஷ்மி மேனன் - 15 வயதில்.

  படம் - ரகுவின்டே ஸ்வந்தம் ரசியா, மலையாளம்.

  #6

  #6

  சுனைனா - 16 வயதில்.

  படம் - குமார் vs குமாரி, தெலுங்கு.

  #7

  #7

  மீனா - குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். நடிகையாக நடித்த போது அவரது வயது 14.

  படம் - நவயுகம், தெலுங்கு (நடிகையாக நடித்த முதல் படம்)

  #8

  #8

  அசின் - 16 வயதில்.

  படம் - நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா, மலையாளம்.

  #9

  #9

  லைலா - 16 வயதில்.

  படம் - துஷ்மன் துனியா கா, இந்தி.

  #10

  #10

  ரம்பா - 16 வயதில்.

  படம் - ஆ ஒக்கட்டி அடுகு, தெலுங்கு.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Indian Celebrities Confessions on Casting Couch!

  Not Only Sri Reddy, Already Several numer of Indian Actors have confessed about casting couch issue. Here you can read what they have confessed about this issue. And how thay handled it.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more