குளியலறையில் மரணம் அடைந்த 8 நடிகர், நடிகைகள்!

Subscribe to Boldsky

இந்திய திரை உலகின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழப்பட்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் தனது உறவினர் திருமண வைபவத்தில் கலந்துக் கொள்ள சென்ற போது எதிர்பாராத விதமாக குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி மரணித்தார்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலானது நேற்று முன்தினம் இரவு அவரது மும்பை வீட்டில் வைத்து சடங்குகள் செய்யப்பட்டு, நேற்று மதியம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

பலரும் குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறப்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்று கூறி வருகிறார்கள். ஆனால், திடீரென ஏற்படும் மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் குளியல் அறையில் மரணிக்க வாய்ப்புகள் உண்டு.

இப்படியாக இறந்த பொதுமக்களும் இருக்கிறார்கள். ஏன், வேறு சில உலக பிரபலங்களும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

வாழ்நாள்: 13 ஆகஸ்ட் 1963 - 24 பிப்ரவரி 2018

நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் ஐயப்பன். இவர் இந்திய திரை உலகின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்து பெற்ற நடிகை ஆவார்.

துபாய் போலீஸ் வெளியிட்ட மரண அறிக்கையின் படி இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியறை பாத் டப்பில் நீரில் மூழ்கி மரணித்தார் என்றும், இவரது உடலில் ஆல்கஹால் கலப்பு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது உறவினர் திருமண வைபவத்தில் கலந்துக் கொள்ள சென்ற போது இந்த பரிதாபமான சம்பவம் ஏற்பட்டது. முதலில் இவர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக இறந்தார் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

எல்விஸ் பிரெஸ்லி

எல்விஸ் பிரெஸ்லி

வாழ்நாள்: 8 ஜனவரி 1935 - 16 ஆகஸ்ட் 1977

ரசிகர்கள் இவரை பிரபலமாக தி கிங் என்றே அழைத்து வந்தனர். இவர் அக்காலத்தின் ஆல்டைம் சிறந்த பாடகராக திகழந்தார். டென்னிசிமாகணத்தில் மெம்ஃபிஸ் எனும் இடத்தில் இருந்த இவரது மேன்சன் குளியலறையில் இவர் மரணித்திருந்தார்.

இவர் இறந்ததற்கான காரணம் அதிக அளவில் போதை பொருள் உட்கொண்டது ஆகும்.

Image Source: commons.wikimedia

ஜூடி கார்லேண்ட்

ஜூடி கார்லேண்ட்

வாழ்நாள்: 10 ஜூன் 1922 - 22 ஜூன் 1969

இவர் அமெரிக்காவை சேர்ந்த பாடகி மற்றும் நடிகை ஆவார். இவர் லண்டனின் இருந்த தனது குடியிருப்பில் புதியதாக திருமணமான தனது கணவருடன் குளியலறையில் இறந்து கிடந்தார்.

இவர்கள் அதிகமாக பார்பிடியூரேட்ஸ் (Barbiturates) எனும் போதை மருந்து எடுத்துக் கொண்டதே மரணிக்க காரணியாக அமைந்தது என்று பிரத பரிசோதனையின் முடிவில் அறியப்பட்டது.

Image Source: commons.wikimedia

கிளாட் ஃப்ரான்கோயிஸ்

கிளாட் ஃப்ரான்கோயிஸ்

வாழ்நாள்: 1 பிப்ரவரி 1939 - 11 மார்ச் 1978

இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாடகர், பாடலாசிரியர் ஆவார். இவரை தேசிய பொக்கிஷம் என்று குறிப்பிட்டு வந்தனர். இவர் தனது குளியலறையில் இருந்த பல்பை கோணலாக இருக்கிறது என்று கருதி அதை அட்ஜஸ்ட் செய்ய முனைந்த போது மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.

Image Source: commons.wikimedia

ராபர்ட் ஜோசப் போஸ்டர்

ராபர்ட் ஜோசப் போஸ்டர்

வாழ்நாள்: 21 ஜூன் 1954 - 8 மார்ச் 2004

அமெரிக்காவை சேர்ந்த நடிகர் ராபர்ட் ஜோசப் போஸ்டர். இவர் தனது கழிவறையில் வலது கையில் ஒரு ஊசியுடன் இறந்த நிலையில் காணப்பட்டார். பிரத பரிசோதனையின் முடிவில், இவர் அளவுக்கு அதிகமாக ஹெராயின் போதை பொருள் ஊசி மூலம் எடுத்துக் கொண்டதன் காரணமாகவே மரணித்தார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Image Source: tmdb

ஆல்பர்ட் டெக்கர்!

ஆல்பர்ட் டெக்கர்!

வாழ்நாள்: 20 டிசம்பர் 1905 - 5 மே 1968

ஆல்பர்ட் டெக்கர் நடிகராக இருந்த போதிலும், இவர் ஒரு முதன்மை உத்தியோகம் கண் மருத்துவராக தான் இருந்தது. டாக்டர் சைக்லோப், தி கில்லர் அன்ட் கிஸ் மீ டெட்லி போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தனது குளியலறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இவரது உடல் மண்டியிட்ட நிலையில் இருந்தது. மூச்சு குழாய் அழற்சி காரணமாக இவர் இறந்தார் என்று பிரேத பரிசோதனை மூலம் அறியப்பட்டது. ஆகையால், மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

Image Source: commons.wikimedia

லென்னி ப்ரூஸ்!

லென்னி ப்ரூஸ்!

வாழ்நாள்: 13 அக்டோபர் 1925 - 3 ஆகஸ்ட் 1966

இவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். லியோனார்ட் ஆல்ஃபிரட் ஸ்கேனிடர் எனும் இயற்பெயர் கொண்ட இவர் லென்னி ப்ரூஸ் என்றே பிரபலமாக அறியப்பட்டார்.

இவரது உடல் ஹாலிவுட் ஹில்ஸ்-ல் இருந்த இவரது வீட்டு குளியலறையில் காணப்பட்டது. இவர் தவறுதலாக அளவுக்கு அதிகமாக மார்பின் எடுத்துக் கொண்ட காரணத்தால் மரணித்தார்.

Image Source: commons.wikimedia

ஆர்வீல் ரெடன்பேச்சர்

ஆர்வீல் ரெடன்பேச்சர்

வாழ்நாள்: 16 ஜூலை 1907 - 19 செப்டம்பர் 1995

இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர். பாப்கார்ன் நிறுவனத்தை துவக்கியவரும் ஆவார். இவர் குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி மரணம் அடைந்தார்.

Image Source: commons.wikimedia

ஜிம் மோரிசன்

ஜிம் மோரிசன்

வாழ்நாள்: 8 டிசம்பர் 1943 - 3 ஜூலை 1971

தி டோர்ஸ் (The Doors) இசை குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் ஜிம் மோரிசன். இவர் தனது 28 வயதில், பாரிஸ் குடியிருப்பில் வசித்து வந்த போது தனது குளியல் தொட்டியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இவரது மரணம் எப்படி, எதனால் ஏற்பட்டது என்று கண்டறியப்படவில்லை. இவரது உடலை யாரும் பிரத பரிசோதனை செய்யவில்லை. பரிசோதனை செய்ய கோரியதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக சில புரளி செய்திகள் மூலம் அறியப்படுகிறது.

Image Source: commons.wikimedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Not Only Actress Sridevi Kapoor, There are Seven More Actors Has Been Died in Bathroom.

    Not Only Actress Sridevi Kapoor, There are Seven More Actors Has Been Died in Bathroom.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more