For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ் கெயில் பற்றிய திகைப்பூட்டும் உண்மை தகவல்கள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஹிட்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் பற்றிய திகைப்பூட்டும் உண்மை தகவல்கள்!

By Staff
|

ஜமைக்காவை சேர்ந்தவர் கிறிஸ் கெயில் என்கிற கிறிஸ்டோபர் ஹென்றி கெயில். லிமிட்டட் ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரராக திகழ்பவர் கிறிஸ் கெயில். இவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

ஆரம்பக் காலத்தில் நிதானமாக ரன் சேர்த்து விளையாடி வந்தவர் திடீரென அடித்து விளையாடும் ஆக்ரோஷ வீரராக மாறினார். இவர் பந்துகளை நொறுக்கி சிக்ஸர் விளாசும் பலே கில்லாடி. இவரை இருபது ஓவர் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு அழிவை உண்டாக்கும் வீரர் என்றும் குறிப்பிடுவதுண்டு.

டெஸ்ட் அரங்கில் முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்தவர் கிறிஸ் கெயில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லூகாஸ் கிரிக்கெட் கிளப்!

லூகாஸ் கிரிக்கெட் கிளப்!

தனது வெற்றிக்கு காரணம் லூகாஸ் கிரிக்கெட் க்ளப் என்று கூறியுள்ளார் கெயில். தனது கிரிக்கெட் பயணத்தை இங்கே தான் துவங்கினார் கிறிஸ் கெயில். தனது வாழ்வில் லூகாஸ் வரவில்லை எனில், நான் இன்று எப்படி, எங்கே இருந்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஒருவேளை சாலைகளில் கூட வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் கெயில்.

19 வயதில்!

19 வயதில்!

1998/99ல் தனது 19வது வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஜமைக்காவிற்காக பங்கேற்றார் கெயில். அதே வருடத்தில் லிஸ்ட் எ பிரிவிலும் இடம்பெற்றார். முதல்தர போட்டிகளில் பங்கேற்கும் முன்னர், இளைஞர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கெயில் விளையாடியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சர்வதேச போட்டிகள்!

சர்வதேச போட்டிகள்!

தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியை கிறிஸ் கெயில் இந்தியாவிற்கு எதிராக 1999லும், டெஸ்ட் சர்வதேச போட்டியை ஜிம்பாவே அணிக்கு எதிராக 2000லும் களம் கண்டார். இந்தியாவிற்கு எதிராக தனது முதல் போட்டியில் வெறும் ஒரு ரன் தான் ஸ்கோர் செய்தார் கெயில் ஜிம்பாவே அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் 33 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தார்.

மெல்ல,மெல்ல!

மெல்ல,மெல்ல!

எடுத்தவுடனே கிறிஸ் கெயில் சிறந்த வீரராக உருவாகவில்லை.தனது ஆரம்பக் காலக்கட்ட கிரிக்கெட் போட்டிகளில் கெயில் நிதானமாக தான் ரன்கள் சேர்த்தார், பெரிய ஸ்கோர் எதுவும் அடித்ததில்லை. 2001ம் ஆண்டு தான் தனது முதல் சர்வதேச சத்தத்தை பதிவு செய்தார் கெயில்.

அதிரடி!

அதிரடி!

2002ம் ஆண்டு தான் கிறிஸ் கெயிலின் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் முக்கியமானது. அப்போது தான் இவர் வேறு லெவல் வீரர் என்பது எதிரணிகளுக்கு தெரிய ஆரம்பித்தது. 2002ம் அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து நான்கு சதம் மற்றும் 14 அரை சதம் உட்பட மொத்தம் 2013 ரன்கள் குவித்தார் கெயில்.

இதயக் கோளாறு!

இதயக் கோளாறு!

தனது பாதையில் ஏறுமுகம் கண்ட போது, தனது ஆரோக்கியத்தில் இருக்கும் சிக்கலை உணர்ந்தார் கிறிஸ் கெயில். சீரற்ற இதயத்துடிப்பு மூலமாக பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தார் கெயில். இது இந்திய சுற்றுப் பயணத்தின் போது இவர் திடீரென ரிட்டயர்டு ஹர்ட் ஆகி சென்ற பிறகு தான் அறிய முடிந்தது. பிறகு, இதற்காக கெயிலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

சிக்ஸர்!

சிக்ஸர்!

உலக டெஸ்ட் வரலாற்றில் கடந்த 2012ம் ஆண்டு கிறிஸ் கெயில் ஒரு புதிய சாதனையை படைத்தார். அது நாள் வரை டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் யாரும் சிக்ஸர் அடித்ததே இல்லை. வங்காள தேச அணிக்கு எதிராக பந்துவீச்சாளர் சொஹக் காஸி வீசிய முதல் பந்தை இவர் சிக்ஸராக மாற்றினார்.

முதல் நபர்!

முதல் நபர்!

மேற்கிந்திய தீவுகள் அணியில் ஏழாயிரம் ரன்களுக்கும், 150 விக்கெட்டுகளும் எடுத்த ஒரே வீரர் கிறிஸ் கெயில் தான் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

கிறிஸ் கெயில் ஒரு பார்ட்டி அனிமல், நன்கு குடித்துவிட்டு, ஆட்டம் போடும் நபர். மைதானத்திலும் விக்கெட் எடுத்த பிறகு இவர் ஆடி மகிழும் தருணங்களை நாம் காண இயலும்.

நல்ல மனம்!

நல்ல மனம்!

பெங்களூரு எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது கிறிஸ் கெயில் அடித்த சிக்ஸர் ஒன்று, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சிறுமியின் மூக்கில் பட்டு, அவர் காயத்திற்குள்ளானார்.போட்டி முடிந்த பிறகு, மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுமியை கண்டு, அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்தி திரும்பினார் கெயில்.

கிங்குடா!

கிங்குடா!

இருபது ஓவர்கள் விளையாட்டு போட்டியின் அரசன் என்றே குறிப்பிடலாம் கிறிஸ் கெயிலை. அனைத்து இருபது ஓவர்கள் போட்டிகளிலும் வைத்து மொத்தம் இருபது சதங்கள் அடித்துள்ளார் கெயில். இதில் அதிகபட்சமாக 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியப் போட்டியில் இவர் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இதில் 17 சிக்ஸர்களும், 13 ஃபோர்களும் அடங்கும்.

 ஒரே ஒரு ஆள்!

ஒரே ஒரு ஆள்!

டெஸ்ட் போட்டிகளில் முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், இருபது ஓவர் போட்டியில் சதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமை மற்றும் சாதனை கிறிஸ் கெயிலையே சேரும். மூன்று அல்லது அதற்கு அதிகமான முறை ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். டெஸ்ட் அரங்கில் இரண்டு முச்சதம் அடித்த நான்கு வீரர்களில் இவரும் ஒருவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Jamaican King Hitter Batsman Chris Gayle!

Facts About Jamaican King Hitter Batsman Chris Gayle!
Story first published: Monday, April 2, 2018, 13:17 [IST]
Desktop Bottom Promotion