For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பாவான ஒரே வாரத்தில் தாத்தாவான 23 வயது இளைஞன்!

ஒரு வார இடைவேளியில் தந்தையாகவும் தாத்தாவாகவும் ஆன இளைஞன் குறித்த உண்மை சம்பவம்.

|

காதலின் மேல் நமக்கு இருக்கிற அதீத நம்பிக்கையால் நம்மைச் சுற்றியிருக்கிற உறவுகளையும் நண்பர்களையும் பிரிந்திடுவோம். அது சரியா தவறா என்பதைப் பற்றி இங்கே நாம் விவாதித்து எந்த பயனும் இல்லை. நீண்ட விவாதங்களாக செல்லக்கூடிய அதில் சில நன்மைகளும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அவ்வளவு தான் இனி எல்லாம் முடிந்தது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் ஓர் உறவு நமக்கு கை கொடுக்கும். அவ்வளவு நாட்களாக நாம் என்ன செய்தோம் இனியும் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி ஓர் உதவி கிடைக்குமே... அது தான் மனிதத்தின் உன்னதம் என்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

மேலை நாடுகளில் குழந்தைகள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு வந்திடும். மேலை நாட்டு கலாச்சாரத்தை பார்த்து ஆச்சரியப்படும் நமக்கு இந்த கதை அவசியமான ஒன்று.

23வயது இளைஞன் ஒருவன் தந்தை ஆகியிருக்கிறான். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்பவர்கள் அடுத்த வரியையும் படித்திடுங்கள்.

அடுத்த ஒரேவாரத்தில் அதே இளைஞன் தாத்தா ஆகியிருக்கிறான்.

Image Courtesy

#2

#2

ஒரு வார வித்தியாசத்தில் ஒரு இளைஞன் எப்படி ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் இன்னொரு குழந்தைக்கு தாத்தாவாகவும் ஆக முடியும்? எல்லாரையும் ஆச்சரியப்படுத்திய அந்த சம்பவத்தின் பின்னணி குறித்த விரிவான தகவல்கள்.

டாமி கோனலி என்ற 23 வயது இளைஞன் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். இவர் தீவிரமான தடகள வீரரும் கூட. தினமும் காலையும் மாலையும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். படிப்பும் விளையாட்டும் ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் பகுதி நேரமாக வேலைக்கும் சென்றார் டாமி.

Image Courtesy

#3

#3

பகுதி நேரமாக வேலைக்குச் செல்வது தன்னுடைய கல்லூரி செலவுகளை சமாளிக்க அல்ல, தன்னையே நம்பியிருக்கும் காதலிக்காக. ஒரு பக்கம் காதலியும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த மாதத்தில் காதலியை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு டாமி கல்லூரிக்கும் விடுமுறை சொல்லிவிட்டு முழு நேரமாக வேலைக்குச் சென்றார். அவரது காதலி நிறைமாத கர்பிணியாக இருந்தார். அவர்களின் வாழ்க்கையில் சற்றே கடினமான காலம் என்று சொல்லலாம்.

ஒரு வழியாக அழகான குழந்தை பிறந்தது.

Image Courtesy

#4

#4

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தன்னுடைய பேஸ்புக் பக்கத்திற்கு செல்கிறார். நீண்ட இடைவேளிக்குப் பிறகு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தை பார்த்தவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்து பத்து வருடங்களாக தங்களிடம் எந்த தொடர்புமின்றி இருந்த ஒரு தங்கை மெஸேஜ் அனுப்பியிருக்கிறாள்.

Image Courtesy

#5

#5

ஆச்சரியத்துடனும் சந்தோசத்துடனும் தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.இரண்டு நாட்களாக ஏஞ்சலா எனப்படுகிற அந்த உறவுக்கார சிறுமியிடமிருந்து எந்த மாற்றமும் தெரியவில்லை. முகநூலில் அவர் பகிர்ந்திருந்த தகவல்கள், போட்டோக்களை வைத்து ஏஞ்சலாவின் இருப்பிடத்தை தேடிச் செல்கிறார்.

ஒரு நாள் தேடலிலேயே ஏஞ்சலாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுகிறார். டாமிக்கு ஒரே அதிர்ச்சி.

Image Courtesy

#6

#6

ஏஞ்சலா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். தங்குவதற்கு வீடு கூட இல்லை. சாலையோரத்தில் சிறிய தடுப்பு போல போட்டுக் கொண்டு அங்கே தான் வசிக்கிறேன் என்றதும் டாமிக்கு மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

வேலை, நண்பர்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய ஏஞ்சலாவை இப்படியான ஒரு சூழலில் சந்திப்பேன் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை என்கிறார் டாமி.

Image Courtesy

#7

#7

என் காதலன் சிறையில் இருக்கிறான். இப்போது நண்பர்களும் என்னுடன் இல்லை, இந்த சூழலில் என்று அழுத ஏஞ்சலாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

போலீஸ்,சிறையில் இருக்கும் ஏஞ்சலாவின் கணவன் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்டப்படி ஏஞ்சலாவை தன்னுடைய மகளாக தத்தெடுத்து கொள்கிறார் டாமி.

Image Courtesy

#8

#8

சட்டப்படி தத்தெடுத்துக் கொண்டதால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏற்கனவே வீட்டிலிருக்கும் மனைவி பிறந்து சில நாட்களேயான தன் குழந்தையோடு ஏஞ்சலாவும் சேர்ந்து கொண்டார். ஒரு வேலை உணவுக்கு கூட அங்கே சிரமம் தான் ஆனால் எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களில் ஏஞ்சலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஞ்சலாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Image Courtesy

#9

#9

நான் செய்தது மனப்பூர்வமான ஓர் விஷயம் தான். அதில் எந்த தடுமாற்றமும் எனக்கில்லை. ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பலரும் என்னை எதோ வித்யாசமாக பார்க்கிறார்கள்.

திடீரென்று பலருடைய கவனம் எங்கள் மேல் விழுகிறது. அது தான் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

Image Courtesy

#10

#10

இது ஒன்றும் விசித்திரமான நிகழ்வு கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் போல ஏராளமான மக்கள் ஒரு வேலை உணவு கூட கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

ஒரு தந்தையாக எனது கடமைகள் குறித்தான ஒரு கற்பனை என்னிடத்தில் இருந்தது. இப்போது இரண்டு குழந்தைகள் ஒரு குழந்தையின் அப்பா இன்னொரு குழந்தையின் தாத்தா நினைக்கவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

Image Courtesy

#11

#11

எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த அரவணைப்பை எப்போதும் நான் மறக்க மாட்டேன். நான் டாமியுடன் செல்கிறேன் என்று சொன்னபோது சிலர், அவன் உன்னிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு உன்னை துறத்தி விடுவான் என்றார்கள்.

ஆனால் எனக்கு டாமியை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு இவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை கொடுத்து, ன் குறைகளுடன் ஏற்றுக் கொண்ட டாமிக்கும் அவனின் மனைவிக்கும் எப்போது நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் ஏஞ்சலா.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

23 Year Boy Become Father And Grand Father with in a week

23 Year Boy Become Father And Grand Father with in a week
Desktop Bottom Promotion