திருமணத்திற்கு தயாரான காதலன்- மேடையில் பதிலடி கொடுத்த காதலி! உண்மைக் கதை!!

Posted By:
Subscribe to Boldsky

உன் திருமணத்தன்று நானிருப்பேன் என்று அவனுக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்தி நிச்சயம் அவனை பயமுறுத்தியிருக்க வேண்டும்.

என் காதலன். மன்னிக்க முன்னால் காதலனுக்கு திருமணம் அதற்கு நான் செல்லாமல் இருந்தால் எப்படி? கண்டிப்பாக போக வேண்டும். அவர்களின் திருமணத்தை முதல் வரிசையில் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும் கொஞ்சம் வஞ்சனையும் இருந்ததால் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண விவரம் :

திருமண விவரம் :

நாங்கள் பிரிந்ததற்கு பிறகு இருவரும் ப்ளாக் செய்து கொண்டோம். ஆனால் ஃபேக் ஐடியின் உபயத்தால் இவனுக்கு திருமணம் என்று தெரிந்தது. விஷமாக அவனைச் சுற்றியிருக்கிறார்களே நண்பர்கள் முகநூலில் டேக் செய்வது, பேச்சுலர் பார்ட்டி கேட்பது என்று வம்பிழுத்து இந்த பையன் சிக்கிட்டான் என்று சொல்லாமல் சொல்லிட அதிலிருந்து பிடி பிடித்து திருமண விவரத்தை உறுதி செய்து கொண்டேன்.

நான் திருமணத்திற்கு வருவதாக உறுதி செய்த மறு கணத்திலிருந்து என்னை வராமல் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் அரங்கேறின. கெஞ்சியும், மிரட்டியும் பார்த்தார்கள். நானில்லாம எப்படி அவன் கல்யாணம் நடக்கலாம். காலைல 6 மணிக்கு தூத்துக்குடி வந்து இறங்குறேன். 8 மணிக்கு மண்டபத்துல இருப்பேன்.

நானில்லாம எப்படி கல்யாணம் நடக்குதுன்னு பாத்ரலாம் என்று எகிற மேற்கொண்டு யாரும் பேசவில்லை.

அதே டயலாக் :

அதே டயலாக் :

சொன்னபடியே சரியாக 6.30 மணிக்கு தூத்துக்குடி வந்துவிட்டேன். வந்து இறங்கியதிலிருந்து எங்க இருக்க? ரூம் எங்க போட்ருக்க? எப்ப மண்டபத்துக்கு கிளம்புவ எத்தன பேர் வர்றீங்க என்று எங்களின் நண்பன் ஒருவன் வரிசையாக கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

ரீச்சுடு ஹோட்டல் என்று மட்டும் ரிப்ளை செய்து வைத்தேன்.

முன்னால் காதலனின் திருமணமல்லாவா? அழகாக ஒப்பனை செய்து கொண்டேன். நான் சேலை கட்டி கார் புக் செய்வதற்குள்ளாக ஐந்து மிஸ்டுகால்கள் பயந்தாகோலிகளிடமிருந்து.

ஹலோ.... கிளம்பிட்டேன் வந்துருவேன் என்று சொல்ல...

நிஜமாவா? உண்மையாவே வரப்போறியா? தேவையில்லாம பிரச்சனை பண்ணாத உனக்கு தான் அப்பறம் பிரச்சனையாகும் சொன்னா கேளு நம்ம பேசி தீர்த்துக்கலாம் என்றான்.

மீண்டும் அதே டயலாக். ‘நானில்லாம எப்டி அவன் கல்யாணம் நடக்குதுன்னு பாக்குறேன்'. என்று சொல்ல, அவன் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான். நான் கார் புக் செய்து நேராக மண்டப வாசலில் போய் இறங்கினேன்.

திருமணம் மண்டபம் :

திருமணம் மண்டபம் :

எட்டு மணிக்கு அவ்வளவாக கூட்டம் இல்லை. என் முன்னால் காதலன் தான் பயந்து கொண்டு ஆறேழு தடியன்களை வெள்ளை சொக்கா மாட்டி நிப்பாட்டியிருந்தான்.

இறங்கியதுமே... ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. கையில் ஒரு பர்ஸுடன் காரிலிருந்து இறங்கும் என்னைப் பார்த்து பேய் அறைந்தார் போல என்னை நோக்கி முன்னேறினார்கள். என்றும் இல்லாதபடியாக சேலையை ஃப்லோட்டிங்கில் வேறு கட்டியிருந்ததால் பர்ஸைப் பிடிக்கவா சேலையைப் பிடிக்கவா என்று தடுமாறி தடுமாறி எட்டு வைத்து வந்து கொண்டிருந்தேன்.

ஏய்... சீரியசா சொன்னா கேளு பெரியவங்க எல்லாம் இருக்காங்க தெரிஞ்சா பிரச்சனையாகிடும். என்ன நீங்க எடுத்து போட்டோ காமிச்சு பிரச்சனை பண்ண வந்திருக்கியா என்று நான் தனியாக வந்திருக்கிறேன் என்று தெரிந்து கெஞ்சல் அதட்டலாய் உருவெடுத்தது.

டேய்.... பர்ஸ்ல ரூம் கீ,பணம், போன் தான் இருக்கு இந்தா பாரு என்று பர்ஸை திறந்து காட்டினேன். பார்ஸைப் பார்த்தவன் ஒன்றும் சொல்லாது பின்வாங்கினான்.

கண்காணிப்பு வளையம் :

கண்காணிப்பு வளையம் :

என்னை கண்காணிக்க தன் மனைவியை என் பின்னால் ஒட்டிக் கொள்ளச் சொல்லியிருப்பான் போல என் பின்னால் பாடி கார்ட் போல அவளின் மனைவியும் இன்னபிற நண்பர்களும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். என்னை ஏதோ வி.ஐ.பி என்று நினைத்துக் கொண்ட அந்த மண்டபத்தில் இருப்பவர்கள் வாங்க மேடம்... வணக்கம் மேடம் என்று ஏக மரியாதை.

கீழே போய் காலை விருந்தை முடித்துக் கொண்டேன். வந்த வேலையை பார்க்க வேண்டுமே நேராக மேடைக்கு அருகில் இருக்கும் மணமகன் அறைக்குச் செல்ல முடிவெடுத்து பாதி வழியிலேயே யூ டேர்ன் அடித்து மணமகள் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

ஒரு கணம் என் பின்னால் வந்தவர்களுக்கு எல்லாம் மூச்சு நின்றிருக்கும். அங்கே கொலு பொம்மையை அலங்கரித்து உட்கார வைத்திருப்பது போல அலங்கரித்து உட்கார்ந்திருந்தாள் மணமகள். கரகாட்டக் காரி போல உச்சந்தலையில் பூ வேறு. பார்த்ததும் சிரிப்பாய் இருந்தது. மும்முரமாய் மேற்பூச்சு கோட்டிங் கொடுப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்தேன்.

லெகின்ஸ் அணிந்து பூ வைக்கலாமா? :

லெகின்ஸ் அணிந்து பூ வைக்கலாமா? :

காதலித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் லெகின்ஸ் அணிந்து தலையில் பூ வைத்துச் சென்றதற்கே என்னடி இது பட்டிக்காட்டான் மாதிரி லெகின்ஸ் போட்டு யாராவது பூ வைப்பாங்களா? கொஞ்சம் கூட மேக்கப் சென்ஸ் இருக்கா உனக்கு என்று திட்டித்தீர்த்தான்.

அத்தனைக்கும் நான் வைத்துக் கொண்டது ஒரே ஒரு ரோஜாப்பூ. அவனுக்கு இப்படியொரு மனைவி... ஆகா வாழ்த்துக்கள் என்று மனதிலேயே சொல்லி சிரித்துக் கொண்டேன்.

ஒன்பது மணி நேருங்க மணமக்கள் இருவரும் மேடைக்கு வந்தார்கள். ஏதேதோ சடங்கு முறைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.

சினிமாவில் வருவது போல சரியாக தாலி கட்டும் நேரத்தில் நிறுத்துங்க....... என்று எழுந்து ஓடிடலாமா? இப்பவே கல்யாணத்த நிறுத்தினா த்ரில்லா இருக்காது என்று என்னோடு ஒட்டிக்கொண்ட நண்பனின் மனைவியிடம் சொல்ல...

அக்கா ஏன் அக்கா இப்டி பேசுறீங்க என்று பயந்து கொண்டாள். கணவனுக்கு மெஸேஜ் அனுப்பியிருப்பாள் போல மேடையில் மணமகனுக்கு அருகில் நின்றிருந்தவன் மணமகன் காதில் ஏதோ கிசுகிசுக்க உன்னிப்பாக கேட்டு குப்பென்று வியர்த்துக் கொட்டியபடி நெற்றியில் கர்சீப்பை ஒற்றி எடுத்துக் கொண்டு என்னைத் தேடினான்.

அட்சதை :

அட்சதை :

அவசர அவசரமாக தாலி கட்டும் படலம் துவங்கியது. அட்சதையே கொடுக்கல என்று நான் ஏழ, அக்கா... அக்கா என்று அலறிக்கொண்டு நான் நகர முடியாதபடி என்னை இறுக்கப்பற்றிக் கொண்டாள்.

அவனின் உறவினர் யாரோ இரு கை நிறைய அட்சதையும் பூக்களும் அள்ளிக் கொடுத்து இந்தாம்மா என்று வேறு பல்லைக் காட்டிப் போனார்கள்.

கல்யாணத்தப்போ பிரச்சனை பண்ணாத என்று மிரண்ட சாதுக்கள் என்னை மிரட்டிக்கொண்டிருக்க என்னிடம் பூவும் அட்சதையும் கொடுத்த அம்மாவிடம், ஸ்டேஜ் இங்கயிருந்த தெரியவேயில்ல என்று தான் சொன்னேன்..

உடனே அவர் இங்க வாம்மா தள்ளுப்பா என்று அவர்களை எல்லாம் விலக்கி விட்டு மிக முக்கியமாக அவளின் கையை விலக்கி விட்டு மேடைக்கே கூட்டிச் சென்றார்.

மண்டபம் அதிரும் மேல தாள சத்தங்களைத் தாண்டி என் முன்னால் காதலனின் இதயத் துடிப்பை துல்லியமாக கேட்டது. மேடையில் நின்றிருந்த எங்கள் நட்பு கூட்டத்தினரின் எல்லார் கண்களும் என்னையே கவனித்துக் கொண்டிருந்தது.

Image Courtesy

நிம்மதிப் பெருமூச்சு :

நிம்மதிப் பெருமூச்சு :

அடுத்த சில நிமிடங்களில் ஐயர் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க என்னை பார்த்தபடியே வாங்கினான். அவனுக்கு பின்னால் நின்றிருந்த நண்பன் காதில் ஏதோ கிசுகிசுக்க அவனோ என்ன ஒண்ணும் பண்ணல என்னடா இன்னும் ஒண்ணும் பண்ணல என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

அதை விட என் காதலனுக்கு தாலி கட்டிறலாமா? கட்டிடவாடா என்று கேள்வியோ ஒவ்வொருத்தராய் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னால் நிற்பவனும் என் செய்கைக்காக காத்திருந்தவனிடம் மூடிட்டு கட்ட சொல்றா.. என்று சைகை காண்பித்தேன்.

அதற்குள் அங்கே நின்றிருந்த பெரியவர்கள் தாலிய கட்றா என்று கத்த மங்கல வாத்தியம் முழங்க, உறவுகள் எல்லாம் அட்சதை தூவ அவளின் கழுத்தில் தாலியை கட்டினான். அதில் என்னுடைய அட்சதையும் சேர்ந்தே விழுந்தது.

நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

மிஸ் யூ :

மிஸ் யூ :

ம்ம்ம்... அப்றோம் எவ்ளோ நாளைக்குத் தான் நீங்களே நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்னு பாடிட்டேயிருப்பீங்க. நாங்க கொஞ்ச பாடிக்கிறோம். என்று நினைத்துக் கொண்டேன்.

என் காதலனின் திருமணமாயிற்றே! பந்தியில் தேங்காய் பை வைப்பதில் தொடங்கி மண்டபம் காலி செய்யும் வரை அங்கேயே இருந்து உதவி செய்தேன். எல்லா வேலைகளை இழுத்துப் போட்டு செய்தேன்.

மறுவீட்டுக்கு கிளம்பும் போது எல்லாரிடமும் சொல்லிக் கொண்டவன் என்னருகில் வந்தான். அவன் சொன்ன அந்த வார்த்தையில் எங்கள் காதல் வாழ்வு நிறைந்திருக்கிறது.

"மிஸ் யூ! "

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real incident of a girl who caught her boy friend as a groom.

Real incident of a girl who caught her boy friend as a groom.
Story first published: Wednesday, October 4, 2017, 14:06 [IST]