தந்தைக்கு தாய்ப் பாலூட்டிய மகள் - ஏன்? எதற்கு? வரலாற்றுக் கதை!

Posted By:
Subscribe to Boldsky

எத்தனையோ ஓவியங்கள் வரலாற்றில் புகழிடம் பெற்றிருக்கின்றன. எல்லா ஓவியங்களும் வெறும் மாடல்களை வைத்து மட்டும் வரையப்பட்டவை அல்ல. சில ஓவியங்களின் பின்னால் வரலாற்றில் நடந்ததாக கருதப்படும் சில நிகழ்வுகளும் மறைந்திருக்கின்றன. அப்படி கருதப்படும் ஓவியம் தான் இந்த தந்தைக்கு தாய்ப் பாலூட்டிய மகளின் ஓவியமாகும்.

இந்த ஓவியத்தை ஐரோப்பியாவில் பல கலைஞர்கள் வரைந்துள்ளனர். இருந்தாலும், இதற்கு பின்னால் கூறப்படும் கதை கருவாக கூறப்படுவது ஒன்று தான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு போராளியின் அவல நிலையும், அவனது மரண படுக்கையில் மகள் செய்த காரியமும் தான் இந்த ஓவியத்தின் கருவாக வரலாற்றில் கடந்த நூற்றாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

ஓவியம் காண ஆபாசமாக காட்சியிளித்தாலும், இதன் கதை அறிந்து பார்க்கும் போது அதில் இருக்கும் உன்னதம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓவியத்தின் காட்சி!

ஓவியத்தின் காட்சி!

இந்த ஓவியத்தின் காட்சி பதிவாகியிருக்கும் முறை...

ஒரு வயது முதிர்ந்த கிழவர், ஓர் இளம்பெண் மார்பில் தாய்ப் பால் குடித்துக் கொண்டிருக்கிறார். அந்த இளம் பெண் அருகே ஒரு பச்சிளம் குழந்தை பசியில் அழுது துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த குழந்தையின் வாயை ஒரு மூதாட்டி இறுக்கி பிடித்து வாயை அடைத்து, அழுக விடாமல் தடுக்கிறார். அந்த இளம்பெண் மற்றும் கிழவர் பின்னிலையில் ஒருசில காவலர்கள் நின்றுக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

Image Source: Wikipedia

பொருள் என்ன?

பொருள் என்ன?

சாதாரணமாக இந்த ஓவியத்தை காணும் நபர்களுக்கு, இது என்ன கொடுமை, பச்சிளம் குழந்தை பசியில் அழுது கொண்டிருக்கும் போது இந்த கிழவர் பால் குடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அந்த மூதாட்டியும் துணை போகிறாள். காவலர்கள் ஒன்றும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.. என்ற எண்ணமே மக்கள் மத்தியில் எழும். ஆனால், இந்த ஓவியத்தின் கதை வேறு.

Image Source: Wikipedia

உறவு முறை!

உறவு முறை!

உண்மையில், இந்த ஓவியத்தில் இருக்கும் கிழவர் அரசரை எதிர்த்து புரட்சி செய்த போராளி. அவருக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் இளம் பெண் அவரது மகள். இளம் பெண் அருகே அழுதுக் கொண்டிருக்கும் குழந்தை, அந்த பெண்ணின் மகன். அந்த குழந்தையை அழுகாமல் தடுத்துக் கொண்டிருக்கும் மூதாட்டி அந்த இளம் பெண்ணின் தாய் மற்றும் கிழவரின் மனைவி ஆவார். இது தான் இந்த ஓவியத்தில் இடம் பெற்றிருக்கும் நபர்களின் உறவு!

Image Source: Wikipedia

புரட்சி?

புரட்சி?

ஜார் எனும் அரசனுக்கு எதிராக இந்த போராளி நடத்திய புரட்சியின் காரணமாக. ஜார் மன்னனின் படை வீரர்களால் கைது செய்யப்படுகிறார் இந்த போராளி. கைது செய்யப்பட்டது மட்டுமின்றி, சிறையில் உணவு, தண்ணீர் கொடுக்கப் படக் கூடாது என்ற உத்தரவுடன், தனிமை சிறையில் சில காவலர்களின் கண்காணிப்பில் அடைக்கப்படுகிறார்.

இவர் பசியில் வாடி தாகத்திற்காக தண்ணீர் கேட்டு கெஞ்சுகிறார். ஆனால், இரக்கமற்ற காவலர்கள் தண்ணீர் கொடுக்க மறுக்கின்றனர்.

Image Source: Wikipedia

மகள், மனைவி வருகை!

மகள், மனைவி வருகை!

இந்த சமயத்தில் தான் சிறையில் இருக்கும் போராளியை காண அவரது மகளும், மனைவியும் வருகிறார்கள். சிறையில் போராளி படும் துயர் கண்டு இதயம் உடைந்து போகிறது. மகளும், தாயும் அங்கிருக்கும் காவலர்களிடம் கொஞ்சமாவது தண்ணீர் கொடுங்கள். இல்லையேல் அவர் இறந்துவிடுவார் போல என அழுது வேண்டுகிறார்கள். ஆனால், மனம் இளகாத காவலர்கள் தண்ணீர் தர அரசு அனுமதி வேண்டும் என மீண்டும் மறுக்கிறார்கள்.

Image Source: Wikipedia

மகள் ஆவேசம்!

மகள் ஆவேசம்!

இந்த சமயத்தில் போராளியின் மகள் ஆவேசம் அடைகிறாள். ஒரு காவல் தலைமை அதிகாரியை கண்டு தண்ணீர் தானே தரக் கூடாது? என கேள்வி கேட்கிறாள். தலைமை அதிகாரி, ஆம்பல்! என்று பதில் அளிக்கிறான். ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு ஊர்ஜிதம் செய்துக் கொள்கிறாள் போராளியின் மகள். காவலர்களுக்கு இந்த இளம் பெண் என்ன செய்ய போகிறாள் என்ற குழப்பம் எற்படுகிறது.

Image Source: Wikipedia

இளம் தாய்!

இளம் தாய்!

உண்மையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து ஒருசில மாதங்களே ஆகியிருந்த நிலை அது. ஆகையால் தான் சிறைக்கு தனது குழந்தையையும், தந்தைக்கு காண எடுத்து வந்திருந்தாள். காவலர்கள் குழப்பத்தில் இருந்த சமயத்தில். தந்தையை தூக்கி மடியில் சாய்த்து கொண்ட போராளியின் மகள், திடீரென தனது மேலாடையை கழற்றி, தாய்பால் நிரம்பியிருந்த மார்புகளில் பால் குடிக்க தந்தையிடம் கூறுகிறார்கள்.

மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த தந்தைக்கு தனது தாய்ப் பாலூட்டி தாகத்தை தீர்க்கிறாள் போராளியின் மகள்.

Image Source: Wikipedia

வியப்பு!

வியப்பு!

இந்த சம்பவத்தை கண்டு சூழ்ந்திருந்த காவலர்கள் வியந்து போனார்கள். அரசின் உத்தவரு உணவும், தண்ணீரும் தரக் கூடாது என்பது தான். மேலும், தந்தையின் உயிர் காக்க தாய் பால் தருமளவு துணிந்த மகளின் செயலை கண்டு காவலர்கள் மனம் இளகி போனார்கள். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததாக ஐரோப்பிய வரலாற்றில் கூறப்படுகிறது.

Image Source: Wikipedia

பல கலைஞர்கள்!

பல கலைஞர்கள்!

இந்த சம்பவத்தை கருவாக கொண்டு பலர் இதே காட்சியை ஓவியமாக தீட்டியுள்ளனர். இதில் பீட்டர் பவுல் ரூபன்ஸ் என்ற ஓவியரின் ஓவியம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு 17 -18ம் நூற்றாண்டுகளில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Image Source: Wikipedia

செவிலி!

செவிலி!

மேலும், சில வரலாற்று தகவல்களில், அந்த போராளியின் மகள் அந்த சிறையில் செவிலியாக பணியாற்றவர்கள் என்றும், தனது தந்தையின் அந்நிலை கண்டே ஓடோடி வந்து தனது தாய்ப் பாலூட்டி அவரது தாகம் தீர்த்தார் என்றும் கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை, ஏறத்தாழ நானூறு ஆண்டுகளாக இந்த கதையும், அந்த இளம் பெண்ணாகிய மகளின் செயலும் போற்றப்பட்டு வருகிறது.

Image Source: Wikipedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Behind Story of Historical Painting of Daughter Breastfeeds Father!

Behind Story of Historical Painting of Daughter Breastfeeds Father!
Story first published: Monday, December 11, 2017, 11:00 [IST]
Subscribe Newsletter