தன் காதலனை திருமணம் செய்து கொள்ள திருமணத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

திரைப்படங்களில் தனது காதலியின் திருமணத்தை மணமேடையிலேயே நிறுத்தி அவரை ஹீரோ திருமணம் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் திரைப்படங்களை விட சற்றே வித்தியாசமானது.

விழுப்புரம் மாவட்டத்தில் 21 வயது பெண் தனது காதலின் திருமணத்தன்று சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு மணமகன் மற்றும் மணமகன் வீட்டார் மறுத்ததால் அவர் திருமண மண்டபத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது திருமணத்தை நடத்த மிகுந்த இடையூராக இருந்துள்ளது.

பின்னர் சினிமாவில் வருவது போலவே போலிசாரும் வந்துள்ளனர். அவர்கள் அங்கு உரிய விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்துவந்துள்ளது. பின்னர் மணமகன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதால் அவர்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.

இதே போன்று உத்திரபிரதேசத்தில் 23 வயதுள்ள ஒரு பெண் கடந்த மாதம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary

Woman protest against lover wedding to marry him in tamilnadu

Woman protest against lover wedding to marry him in tamilnadu
Story first published: Saturday, June 10, 2017, 12:45 [IST]