2 பி.எச்.கே பிளாட்டில் 46 விலங்குகளுடன் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு விலங்குகள் மீது அலாதி பிரியம் இருக்க தான் செய்கிறது. செல்ல பிராணிகளை குழந்தைகளை போல காணும் பார்வை பெண்கள் மத்தியில் அதிகம். ஆண்கள் சகோதரன் போல தான் பார்ப்பார்கள்.

இவர் பெயர் ஷாலினி அகர்வால். இவருக்கு விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம். இவர் தான் வாழ்ந்து வரும் 2 பி.எச்.கே பிளாட்டில் 46 செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சதா சத்த மயம்தான்!

சதா சத்த மயம்தான்!

ஷாலினி அகர்வால் குடியிருக்கும் பிளாட்டிற்கு நீங்கள் சென்றால் நாய் குரைப்பது, பறவைகள் பாடும் சப்தங்களை நீங்கள் 24x7 கேட்கலாம். தன் வீட்டை ஒரு விலங்குகள் காப்பகம் போல வைத்துள்ளார் ஷாலினி அகர்வால்.

Image Source

அப்பா இடம் இருந்து வந்த ஆசை...

அப்பா இடம் இருந்து வந்த ஆசை...

ஷாலினி அகர்வாலின் தந்தையும் ஒரு செல்ல பிராணி பிரியர். அவரிடம் இருந்து பார்த்து வளர்ந்து தானும் இப்படி செல்ல பிராணி பிரியை ஆகிவிட்டேன் என்கிறார் ஷாலினி.

Image Source

உண்மையான நேசம்!

உண்மையான நேசம்!

சாலைகளில் எங்கேனும் அடிப்பட்டு, நிர்கதியாய் இருக்கும் விலங்குகளை இரண்டாம் எண்ணம் இல்லாமல் உடனே வீட்டிற்கு எடுத்து வந்து விடுவாராம் ஷாலினி. இவர் வளர்த்து வரும் செல்ல பிராணிகள் இவருடன் பல வருடங்களாக வாழ்ந்து வருபவை.

Image Source

2 பி.எச்.கே.

2 பி.எச்.கே.

இவரது வீடு ஒரு சிறிய அனிமல் கிங்டம் என கூறலாம். இதில் மூன்று மாத கழுகில் இருந்து பூனை, குரங்கு, ஆடு, மாடு என பல செல்ல பிராணிகள் இருக்கின்றன.

விலங்குகள் பாதுகாப்பிற்காக கடந்த 20 வருடமாக உழைத்து வருகிறார். ஷாலினிக்கு இப்போது வயது 36.

Image Source

மருத்துவம்!

மருத்துவம்!

சாலையில் இருந்து எடுத்து வரும் விலங்குகளுக்கு உடனடி மருத்துவம் அளித்து, அவற்றுக்கான ஆரோக்கிய உணவுகளை அளித்து வலிமை படுத்துகிறார் ஷாலினி.

பலமுறை இவரது வீட்டை சுற்றி இருக்கும் மக்கள் இவருக்கு தொந்தரவு அளித்துள்ளனர். இவர் மீது வழக்குகள் போட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

Image Source

பாதுகாப்பு!

பாதுகாப்பு!

ஆனால், பெரிய விலங்குகளாக இருக்கும்பட்சத்தில் அவற்றை கார்ப்பரேஷன் பாதுகாப்பில் ஒப்படைத்துவிடுவேன். என்னால் பாதுகாக்கு முடியும் விலங்குகளை தன்னுடன் சேர்த்து வளர்த்து வருகிறேன் என ஷாலினி கூறியுள்ளார்.

Image Source

எச்சரிக்கைகள்!

எச்சரிக்கைகள்!

இவரது வீட்டு பக்கத்தில் இருக்கும் நபர்கள் இவருக்கு பலமுறை எச்சரிக்கைவிடுத்துள்ளனர் என ஷாலினி கூறுகிறார். மக்கள் தொந்தரவு செய்யாத வரை எனது பிராணிகளும் யாரையும் தொந்தரவு செய்யாது. அவர்களாக அடிக்க முற்படும் போதுதான் பிரச்சனைகள் முளைக்கின்றன என ஷாலினி தெரிவித்துள்ளார்.

Image Source

சபாஷ்!

சபாஷ்!

மேலும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கு என தனியாக வெளிப்படை காப்பகம் அல்லது உறைவிடம் கட்ட இவர் ஃபண்ட்ஸ் ஏற்பாடு செய்து வருகிறார்.

பெற்றோரையே காக்க மறுக்கும் பிள்ளைகள் மத்தியில் வீதியில் நிர்கதியாய் நிற்கும் விலங்குகளுக்கு வாழ்வு அளித்து வரும் ஷாலினுக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போடவேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meet Shalini Agarwal, an animal lover who lives with 46 animals in 2BHK flat!

Meet Shalini Agarwal, an animal lover who lives with 46 animals in 2BHK flat.
Story first published: Wednesday, June 21, 2017, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more