நீங்கள் முதலில் நேசிக்க வேண்டிய நபர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எடுத்துச்செல்ல உங்களை நீங்களே தட்டிக்கொடுப்பது மிகவும் அவசியம். தட்டிக்கொடுப்பது என்பது உங்களுக்கு வெளியிலிருந்து யார் நம்பிக்கை கொடுத்தாலும், உங்களுக்குள்ளான தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.

உங்களை நீங்களே நேசிக்க சில யோசனைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு :

அழகு :

எப்போதும் நான் அழகாக இருப்பேன் என்று நம்புங்கள். மாசு மருவற்றம் முகம் தான் அழகு என்று அர்த்தமல்ல, அதே போல இன்னொருவரைப் போல நாம் இல்லையே என்று வீண் கவலை கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் தனித்தன்மையில் அழகுடன் மிளிர்வீர்கள். மிக முக்கியமாக பிறரைப் பார்த்து அவரின் தோற்றத்தையும் உங்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

உறுதி மொழி :

உறுதி மொழி :

புதிய நாளை துவங்குவதற்கான சிறந்த பயிற்சி இது. உங்களை நீங்களே உற்சாகம் கொள்ளும் வாசகங்களையோ அல்லது உங்கள் இலக்கு என்னவோ அதனை அடைந்தே தீருவேன் அதற்கான சிறு முயற்சியை, உழைப்பை இன்றைக்கு ஆரம்பிக்கப்போகிறேன் என்று உறுதி மொழி எடுங்கள். இலக்கை நிர்ணயித்தால் மட்டும் போதாது அதில் வெற்றி பெறுவேன் என்று நம்ப வேண்டும்.

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

எப்போதும் வெளியிலிருந்து ஒருவரால் மட்டுமே நான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய சந்தோசம் உங்கள் கைகளில் இருக்க வேண்டும். இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கப்போகிறேன். சிரித்துக் கொண்டேயிருக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். இயல்பாகவே மகிழ்ந்திருக்க வேண்டும் என்று நினையுங்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

உடல் :

உடல் :

இன்றைக்கு உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை பலருக்கும் இருக்கிறது. குண்டாக இருக்கிறேன் என்றோ அதீத ஒல்லியாக இருக்கிறேன் என்றோ நினைத்துக் கொண்டு அதற்கான பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

இதிலும் விளம்பரங்களைப் பார்த்தும், சினிமாவில் காண்பிக்கப்படுவதை பார்த்தும் அதே போல நீங்களும் மாறிட வேண்டும் என்று வீண் கனவு காண வேண்டும். அவரவர் இயல்பில் அவரவர் அழகு தான்.

அன்பு :

அன்பு :

மற்றவர்களை விட உங்களை நீங்களே நேசியுங்கள். தோல்வியடைந்தாலோ அல்லது ஏதேனும் தவறு செய்தாலோ அதையே நினைத்து உங்களை நீங்களே வெறுத்து விடாதீர்கள்.

உங்களிடம் குறைகள் இருந்தாலும், அதனையே நினைத்துக் கொண்டிருக்காமல் உங்கள் குறைகளை எப்படி மீட்டெடுப்பது என்று யோசியுங்கள்.

நம்புங்கள் :

நம்புங்கள் :

எடுத்ததுமே இது எல்லாம் என்னால் முடியாது என்று ஒதுங்கி விடாதீர்கள். வென்று எடுப்பேன் என்று நினையுங்கள். என்னால் முடியும் என்று முதலில் உங்களை நீங்களே நம்புங்கள்.

தோல்வியை சந்தித்தாலும் இதுவே இறுதியல்ல என்று உணருங்கள்.

கருத்துக்கள் :

கருத்துக்கள் :

உங்கள் தன்னம்பிக்கையை குழைக்கும் விதமாக யாராவது பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது நல்லது.

அதையே நினைத்து நினைத்து வருந்தாமல் மறக்க முயற்சிசெய்யுங்கள். அதே நேரத்தில் உங்களை நேசிக்கும் நபர்கள் உங்கள் மீது சொல்லும் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

பார்வை :

பார்வை :

உங்களை நேசிக்கும் நபர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்று பாருங்கள். குறிப்பாக நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி, உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நாய்க்குட்டி நீங்கள் வந்ததுமே உங்கள் மேல் தாவி எப்படி அன்பு வெளிப்படுத்துகிறது.

உங்களின் அன்பு அதற்கு தேவையாய் இருக்கிறது அதை விட அந்தப் பிராணி உங்களை அவ்வளவு நேசிக்கிறது.

நடனம் :

நடனம் :

ஒரேயிடத்தில் உட்கார்ந்து கொண்டு தீவிரமாக ஒரு வேலையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நடுவில் ஒரு இடைவேளை எடுத்து உற்சாகமாக நடனமாடுங்கள். சரியோ தவறோ பிறர் என்ன நினைப்பர் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.

இது உடலுக்கும் மனதுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுக்கும். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

தெளிவு :

தெளிவு :

உங்கள் இலக்கு குறித்த தெளிவான பார்வை உங்களுக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இலக்கினை அடைய என்னென்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். சிறந்த விளையாட்டு வீரர் ஆக வேண்டும் என்பது தான் உங்கள் இலக்காக இருந்தால் உடல் ரீதியாக மட்டும் நீங்கள் தயாரானால் போதாது, அவற்றை சுற்றிலும் நடக்க்கும் விஷயங்கள், விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்கள் என அப்டேட் இருக்க வேண்டும்.

பாராட்டு:

பாராட்டு:

மிகவும் முக்கியமானது இது. எல்லாரும் ஒரு அங்கீகாரத்திற்காக ஒரு பாரட்டிற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னொரு உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்காமல் உங்களை நீங்களே பாராட்டுங்கள். உங்களின் சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள்.

அன்றாடம் செய்திடும் வேலையாக இருந்தாலும். சூப்பர்! இன்னக்கி பெஸ்ட்டா பண்ணிட்டோம் என்று பாராட்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

ஏற்பு :

ஏற்பு :

இது எல்லாரிடமும் இருக்க வேண்டிய ஒரு குணம். நம்மிடம் இருக்கும் குறைகளை ஏற்றுக் கொள்வது. அதனை ஏற்றுக் கொண்டால் தான் அதனை தவிர்க்க முடியும் அல்லது அதனை குறைக்க நீங்கள் முயற்சி எடுப்பீர்கள்.

பேச்சு :

பேச்சு :

உங்களிடம் நிறைய பேசுங்கள். நீங்கள் யார்? உங்கள் ஆசை? என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கனவு. இன்றைக்கு நான் என்னென்ன வேலைகள் பார்த்தேன் நாளை என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிடுங்கள். சுய பரிசோதனை செய்து கொள்வது போல இன்றைக்கு எப்படி நடந்து கொண்டேன் என்பதை ஒரு முறை நினைவு கூறுங்கள்.

தனிமை :

தனிமை :

ஒரு போதும் நான் தனியாக இருக்கிறேன் எனக்காக யாருமில்லை என்று நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நான் இருக்கிறேன்.என்னுடைய இருப்பு பிறருக்கு அவசியமானது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவாக எப்போதும் உங்களை அணுகாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips For Self Love

14 Tips For love yourself
Story first published: Thursday, August 3, 2017, 13:58 [IST]